சுட்டிப் பெண்ணே! சொல்லமுதே!
சொக்கத்
தங்கத் தமிழ்த்தேனே!
எட்டி நின்றே பார்த்தாலும்
என்னை ஏதோ
செய்பவளே!
குட்டி போட்ட பூனைபோல
விட்டே அகல
முடியாமல்
கட்டிப் போட்டு விட்டாயோ
காதல் கயிறு
கொண்டென்னை?
மொட்டு விரிய மணம்வீசும்!
மூடி
வைத்தால் மனமேங்கும்!
சிட்டு போல பறப்பவளே!
சிந்தை நனைய வைத்தவளே!
இட்டுக் கட்டி விடும்பாட்டில்
இனிய கருவைத் தருபவளே!
சொட்டுத் தேன்போல் கவியினிக்க
சொல்லேன் அன்பாய் ஒருவார்த்தை!
தீட்டு கின்ற கவிகளிலே
தெளிவாய் நீதான் தெரிகின்றாய்!
மூட்டும் மோக உணர்வினிலும்
முன்னால் வந்து வதைக்கின்றாய்!
மீட்டும் இசையோ தெரிவதில்லை
மென்மை இதயம் உணருமடி!
ஏட்டுச் சுரைகாய் இல்லையடி!
எழுதும் கவிகள் உண்மையடி!
அருணா செல்வம்.
10.05.2012
வணக்கம்
பதிலளிநீக்குகவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரூபன்.
அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்.
அற்புதமான கவிதைகளுக்கு
பதிலளிநீக்குஆதாரமான அவள் வாழ்க
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அவள் வாழட்டும்!
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.
tha.ma 3
பதிலளிநீக்குநன்றி இரமணி ஐயா.
நீக்குஅருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
சொட்டுச்சொட்டாக தேனைச் சுவைப்பதுபோல் உள்ளது.அருமை
பதிலளிநீக்குஅப்படியா....!
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.
super...........!
பதிலளிநீக்குநன்றி உஷா.
நீக்குகாதலால் கசிந்துருகி எழுதியிருக்கிறீர்கள்..அருமை..
பதிலளிநீக்குஆமாங்க. அதனால ரொம்ப இளைச்சி போயிட்டேன். ஹா ஹா ஹா
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியபெருமாள் ஐயா.
சுட்டிப்பெண் அருமை ... யாராக இருக்கும் ?
பதிலளிநீக்குஅது என் போன ஜென்மத்து காதலி!!
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி அரசன்.
aahaa....
பதிலளிநீக்குarumai..!
நன்றி சீனி அண்ணா.
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அப்படியா....?
நீக்குபார்க்கிறேன் தனபாலன் அண்ணா. நன்றி.
அழகான கவிதை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி குமார்.
அருமையான கவிதை.... பாராட்டுகள்.
பதிலளிநீக்குத.ம. 6
எழுதும் கவ்கள் உண்மைதான்,சுட்டிப்பெண்ணி கடைக்கண் பார்வை கயிறாக கட்டிப்போட்டிருக்கிறதென்றால் பார்வையின் பலம் இங்கே ஜஸ்தியாகிப்போனது/
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி விமலன் ஐயா.
உண்மையான அழகு என்பது இது தான்!
பதிலளிநீக்குக+
அப்போ... பொய்யான அழகு என்பது எது நம்பள்கி?
நீக்குநன்றி நம்பள்கி.
இட்டுகட்டி விடும் பாட்டில் -------- ஏட்டு சுரைக்காய் இல்லையடி !!!!!
பதிலளிநீக்குகொஞ்சம் நயம் !!!
இட்டுக் கட்டி விடும்பாட்டில் -----------ஏட்டுச் சுரைகாய் இல்லையடி!
பதிலளிநீக்குகொஞ்சம் நயம் !!! அதிகம் !!!!!