சனி, 2 நவம்பர், 2013

தீபாவளி வாழ்த்துக்கள்!
நல்ல எண்ணம் வளர்ந்தாட
   நல்லோர் நெஞ்சம் குளிர்ந்தாட
வல்ல கலைகள் உயர்ந்தாட
   வந்தோர் உள்ளம் களித்தாட
இல்லம் தீப ஒளிபரவ
   இனிமை பொங்க வாழ்த்துகிறேன்!
சொல்ல இனிக்கும் திருநாள்போல்
   சுடரும் ஒளியாய் வாழியவே!

அருணா செல்வம்
02.11.2013

நட்புறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

  நான் “சுட்ட“ பலகாரங்களை அடுக்கியுள்ளேன். வேண்டும் என்பவர்கள் (முக்கியமாக உஷா) வந்து சாப்பிட்டு(?) மகிழுங்கள். 


  நன்றி.

29 கருத்துகள்:

 1. உங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தோழி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 2. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

   நீக்கு
 3. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும் உங்கள் குடுபத்திற்க்கும்,
  என் இனிய புத்தாண்டு...மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்!

  அது சுட்ட முறுக்கா? சுடாதா முறுக்கா?
  இல்லை கூகிளில் சுட்ட முறுக்கா? தமிழ் என்னே அழகான மொழி! ஒவ்வொரு சொல்லுக்கும்...புதுப் புது அர்த்தங்கள்!

  தமிழமணம் வோட்டு பிளஸ் 4.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சுட்டதும் சுடும் முறுக்கு.
   அதன் பிறகு சுடாத முறுக்கு.

   உண்மையில் நான் “சுட்டது“...
   சுடாத முறுக்கு மட்டுமில்லை.
   தொடாத முறுக்கும் தான்!

   உண்மையில் தமிழ் அழகான அர்த்தமுள்ள மொழி தான்!

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி நம்பள்கி.

   நீக்கு
 6. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். பலகாரம் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனிமரம்.... நான் அந்த பலகாரங்களைச் சுட எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா...?

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தனிமரம்.

   நீக்கு
 7. தமிழ்மணம் 5

  இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி கவிஞர்.

   நீக்கு
 8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. பலகாரங்கள் அசத்தல் அருணா!...:)

  இனிக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 10. தாமதமான வாழ்த்துக்கள்..இன்னைக்குதான் பதிவு பாத்தன்..அதான் லேட் கமெண்ட்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயோ.... நானே தாமதமாகத் தான் பதிவைப் போட்டேன்.
   பலகாரங்களைச் “சுட“ நேரமாகிவிட்டது.

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

   நீக்கு
 11. இனிக்கும் தீபாவளி.தித்திக்கும் பலகாரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தித்திச்சிதா...?!

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி விமலன் ஐயா.

   நீக்கு
 12. அன்பு சகோதரி
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்
  மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி மகி அண்ணா.

   நீக்கு
 13. அந்த மிட்டாய் எல்லாம் மொத்தமாக பார்சல் அனுப்பவும்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... உங்களின் ஈமெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்புகிறேன் மனோ சார்.

   வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 14. எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஜனா ஐயா.

   நீக்கு
 15. இனிக்கும் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. இனிய நல்வாழ்த்துக்கள்
  இனிப்புகளின் அணிவகுப்பு
  மிகவும் கவர்ந்தது

  பதிலளிநீக்கு