செவ்வாய், 12 நவம்பர், 2013

என் பாட்டிக்குப் பிடிக்காது!! (சிரிக்க - சிந்திக்க)   இங்கிலாந்தின் அரசராக இருந்த எட்டாம் எட்வர்ட் (ஆட்சி காலம் – 1936), தன்னுடைய பாட்டியான, புகழ்பெற்ற விக்டோரியா மகாராணியின் குணங்களை நன்கு அறிந்தவர்.
   அவர் சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அவரது ஆசிரியர் ஒரு நாள், “சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகவே கருதப்படுவார்கள்“ என்றார்.
   அதற்கு எட்வர்ட், “ஐயா... சொர்க்கத்தில் என்னுடைய பாட்டி விக்டோரியா மகாராணி கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதப்படுவார்?“ என்று கேட்டான்.
   “ஆமாம். சொர்க்கத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதமில்லை. அரசனாக இருந்தாலும் சரி அடிமையாக இருந்தாலும் சரி... ஒன்றாகவே கருதப்படுவார்கள்.“ என்று சற்று விளக்கமாகக் கூறினார் ஆசிரியர்.
   அதைக் கேட்ட சிறுவன் எட்வர்ட்டிற்குக் கோபம் வந்தது.
   “என் பாட்டியை யாரென்று நினைத்துக் கொண்டீர்கள்? பிரிட்டனுக்கே மகாராணியாக இருந்தவர். அவரை மற்றவர்களுக்குச் சம்மாக நடத்தினால் அது அவருக்குப் பிடிக்காது. ஆகவே அவர் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்“ என்று உரத்த குரலில் பேசினான்.
   அதைக் கேட்டு சிரித்த ஆசிரியர், “நீ கூறுவது உண்மைதான்“ என்றார்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

29 கருத்துகள்:

Seeni சொன்னது…

mmmm....

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

அரிய கருத்தை அறிய அளித்தீா்
உரிய முறையில் உவந்து!

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
அற்புதமான நகைச்சுவைக் கதை
படித்து ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அருமை. அதிகார வர்க்கம் எத்தகைய மனநிலையை கொண்டிருக்கும் என்பதை நகைச்சுவையாக சொன்னது சிறப்பு

Avargal Unmaigal சொன்னது…

ஹா ஹா ஹா

RPSINGH சொன்னது…

good

Unknown சொன்னது…

நரகத்திலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதமில்லைன்னு சொல்லி இருந்தால் பேரன் என்ன சொல்லி இருப்பாரோ ?
த.ம 6.

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
மாதேவி சொன்னது…

நல்ல நகைச்சுவை.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஹாஹாஹா! நல்ல நகைச்சுவை!

Unknown சொன்னது…

சூப்பர்....

இளமதி சொன்னது…

'சிரிக்க சிந்திக்க' உண்மையாகவே சிரிக்கவைத்தாலும்
ஆழமாகச் சிந்திக்கவும் வைத்ததே...

அருமை! வாழ்த்துக்கள்!

த ம.6

நம்பள்கி சொன்னது…

நல்ல கதை! நீங்கள் போடும் படத்திற்கு ஒரு ராயல் ஸல்யூட் .நான் ஆதிரா அவர்களுக்கு உங்கள் பிளாக்கை மாதிரியா எடுத்துக் கொள்ள சொல்லியிருக்கியேன்.

உங்கள் ப்ளாக் layout super! கருப்பில் வெள்ளை எழுத்துக்களில் எழுதுவது கடினம்.

வாழ்த்துக்கள். தமிழ்மணம் + 7 ; மகுடம் எத்திடுவோம்!

Unknown சொன்னது…

படித்தேன்! சிரித்தேன்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டுக் குறளுக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

அடடா... என்னம்மா சிரிக்கிறீர்கள்....!!!

நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

உயர்ந்தோருக்கு பெரிய எண்ணை சட்டி... தாழ்ந்தோருக்கு சிறிய எண்ணை சட்டி... என்ற பேதத்தை நினைத்துச் சரி என்றே சொல்லியிருப்பான் என்று நான் நினைக்கிறேன் பகவான் ஜி.

மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மாதேவி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி சத்யா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இளமதி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நம்பள்கி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ரசித்தேன்... சரியாகத் தான் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்!

கவியாழி சொன்னது…

ரசித்தேன் சிரித்தேன்