திங்கள், 27 மே, 2013

T.M.S இறந்து விட்டாரா...?

நட்புறவுகளுக்கு வணக்கம்.
    நான் அதிக வேலை காரணமாக வலை பக்கம் கொஞ்ச நாட்களாக வரமுடியவில்லை. இன்று வந்து பார்த்தால்... நிறைய பதிவர்கள் டி.எம்.எஸ் அவர்களைப் பற்றியே அதிகம் எழுதி இருந்தார்கள். முதலில் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் பிறகு தான் அறிந்து கொண்டேன். இந்த விசயத்தை மனம் ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறது. உண்மை தான் எனும் போது கவலை அதிகமாகிறது.
    இந்த நாள் வரையில் நான் அவரை நேரில் பார்த்துப் பேசியது  கிடையாது. எனக்கு ஏன் கவலை வரவேண்டும்...? அவர் எனக்கு உறவா என்ன? இல்லை. என்றபோதும் கவலை கொள்கிறது என்றால் அவரின் குரலின் மீது நான் வைத்த ஆழ்ந்த பற்று தான் காரணம். எவ்வளவு உன்னதமான குரலுக்குச் சொந்தக்காரர்.
   கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கைத் தத்துவங்களைப் அப்படியே பாட்டில் வடித்தாலும் அதை நாம் கவிதையாகப் படித்திருந்தால் மனத்தில் பதிந்திருக்காது. அந்தக் கவிதைகளை எந்த எந்த இடங்களின் மென்மையாக பாடவேண்டுமோ... அல்லது வன்மையாகப் பாட வேண்டுமோ... என்று பாடியதால் தான் அந்தக் கவிதைகள் மென்மேலும் புகழ் பெற்று நம் மனத்தில் பதிந்தன.
   அவரின் மகன்கள் இருவரும் தந்தையின் குரலிலேயே பாடி நம்மை மகிழ்விக்கிறார்கள் தான். இருந்தாலும் அவருக்குச் சமம் அவர் ஒருவர் மட்டுமே. இவரின் குரல் காலத்தால் அழிக்க முடியாது.
    மேடைகளில் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...“ என்று தொடங்கும் பொழுதே நம் மனம் எங்கே சென்றிருந்தாலும் உடனே ஓடிவந்து அந்தப் பாடலில் பொதிந்து விடும். காதலா.... தத்துமா... ஆன்மீகமா... எந்தப் பாடலை எடுத்தாலும் அதன் உண்மை ரசம் உருகியோடும்.
    இன்று அந்த மூங்கிலில் நுழைந்த காற்று வெளிவராமல் அதனுள்ளேயே அடங்கி விட்டதா...? நினைக்கவே மனம் அழுகிறது. எத்தனைச் சந்தர்பங்களில் அவரின் பாடல் நம் மனத்திற்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்திருக்கிறது. எந்தப் பாடலை எடுத்துச் சான்றாக சொல்வது...? அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் நம் உயிரையே தொடும் பாடல்கள் அல்லவா?
    இவரின் இழப்பு தமிழகம் கண்ட மாபெரும் இழப்பு தான் என்றாலும் அவர் சாகாவரம் பெற்றவர். அவரின் உயிர் மூச்சு ஒவ்வொரு பாடலிலும் இழைந்து கொண்டே இருப்பதால் அவர் நம்முடன் தான் இன்றும்.... என்றும் இருப்பார் என்று மனத்தைத் தேற்றிக் கொள்கிறேன்.

அருணா செல்வம்.
27.05.2013
   

32 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண்டிப்பாக நம்மிடம் இருப்பார்...

இந்த உலகம் இருக்கும் வரை பலரின் மனதிலும், அவரது குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...

Ambal adiyal சொன்னது…

மனம் கனக்க வைத்த பிரிவு :(அவரது ஆன்மா இந்நேரம் இறைவனின் அருளால் நன்முறையில் சாந்தியடைந்திருக்கும் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .

கவியாழி கண்ணதாசன் சொன்னது…

உண்மைதான் சாகாவரம் பெற்றவர்

Seeni சொன்னது…

mmm ...

Ramani S சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள்
முன்பு உடலாக பூமியில் எங்கோ இருந்து
நம மனங்களில் இடம் பிடித்திருந்தார்
இப்போது குரலாக எங்கோ இருந்து தொடர்ந்து
நம் மனங்களில் நீங்காது நிறைந்து இருக்கிறார்
அவர் குரலுக்கும் புகழுக்கும் என்றும் மரணமில்லை
பகிர்வுக்கு நன்றி

Ramani S சொன்னது…

tha.ma 4

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நிச்சயம் அவரது இறப்பு நமக்கு ஒரு இழப்பு தான். இருந்தும், அவர் நம்மிடையே என்றென்றும் அவரது பாடல்கள் மூலம் இருப்பார்......

Bagawanjee KA சொன்னது…

TMS யை போல் இதுவரை யாரும் பாடியதில்லை பாடப் போவதுமில்லை ...அவரே மறு ஜென்மம் எடுத்து வந்தால்தான் உண்டு !,

கும்மாச்சி சொன்னது…

அவருடைய குரல் நம்மிடம் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

கிணற்றுத் தவளை சொன்னது…

நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை

Sasi Kala சொன்னது…

அவரது ஆன்மா சாந்தி பெற வேண்டுகிறேன். தோழி சாகா வரம் பெற்றவர் என்றும் வாழ்வார் நம்மிடையே.

s suresh சொன்னது…

மேதைகள் இறந்தாலும் இன்னும் நம்மிடையே வாழ்கிறார்கள் என்பதற்கு டி.எம்.எஸ் ஓர் உதாரணம்! பகிர்வுக்கு நன்றி!

குட்டன் சொன்னது…

ஆம் அருணா!அவர் அமரர்;அவர் குரலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

புலவர் இராமாநுசம் சொன்னது…

இல்லையே !அவர் என்றும் வாழ்பவர் ஒவ்வொரு மணித்துளியும் அவர் குரல் உலகின் ஏதோ ஓர் இடத்தில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது அருணா!

பெயரில்லா சொன்னது…

இசைக்கு என்றும் மரணமில்லை..அவர் குரலுக்கு என்றும் அழிவில்லை.

உஷா அன்பரசு சொன்னது…

அந்த கணீர் குரல் காலங்கள் தோறும் ஒலித்து கொண்டேதானிருக்கும்..!

அருணா செல்வம் சொன்னது…

நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அவர் குரலுக்கும் புகழுக்கும் என்றும் மரணமில்லை“

உண்மை தான் இரமணி ஐயா.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

அவர் நம்மிடையே என்றென்றும் அவரது பாடல்கள் மூலம் இருப்பார்......“

ஆமாம். நம்மால் மறக்கவே முடியாது தான்.
நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

உண்மையான கருத்து பகவான் ஜி.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

(முதல் வருகைக்கும்) நன்றி கிணற்றுத் தவளை.

அருணா செல்வம் சொன்னது…

உங்களின் கருத்து உண்மை தான் சசிகலா.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

கருத்திற்கு மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

கருத்திற்கு மிக்க நன்றி குட்டன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் புலவர் ஐயா.
வருகைக்கும் மன ஆறுதல் அளிக்கும் படி அமைத்த கருத்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

முதல் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி தோழி.

Jeevalingam Kasirajalingam சொன்னது…

T.M.S இறந்து விடவில்லை. அவரது பாடல்களில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.