பெண் என்றால் இப்படித்தான்
என்று அன்றே எழுதி வைத்தான்
இறைவனவன் வானத்தில்!
என்று அன்றே எழுதி வைத்தான்
இறைவனவன் வானத்தில்!
இன்றைக்கும் இதுநிலையே!
கருமேகம் கொண்டாலும்
கண்ணுக்குப் பாற்கடலில்
கடைந்தெடுத்தப் பருவமங்கை
காதலுடன் தெரிந்திடுவாள்!
பக்கத்தில் எத்தனையோ
கருமேகம் கொண்டாலும்
கண்ணுக்குப் பாற்கடலில்
கடைந்தெடுத்தப் பருவமங்கை
காதலுடன் தெரிந்திடுவாள்!
பக்கத்தில் எத்தனையோ
பளீச்சிடும் நட்சத்திரங்கள்!
பார்வைக்குத் தெரிவதெல்லாம்
பால்நிலாபோல் அவளன்றோ!
காற்றாகித் தொட்டுவிட
கருமேகத் தூதனுப்ப
மோகத்தால் முகம்மறைக்கும்
அழகிற்கோ ஈடேது?
பார்வைக்குத் தெரிவதெல்லாம்
பால்நிலாபோல் அவளன்றோ!
காற்றாகித் தொட்டுவிட
கருமேகத் தூதனுப்ப
மோகத்தால் முகம்மறைக்கும்
அழகிற்கோ ஈடேது?
துளைத்தெடுக்கும் அழகிருந்தும்
தொடவிடாமல் வெகுதொலைவில்
இருந்தாலும் துணையாக
இவனுடனே தான்வருவாள்!
ஆசைகொண்ட நாளெல்லாம்
அழகாக வளர்ந்திடுவாள்!
அன்பற்றப் பெண்போல
அவளாகத் தேய்திடுவாள்!
முழுசாகப் பார்த்தவுடன்
மோகத்தால் மதிமயங்கி
இருந்தாலும் துணையாக
இவனுடனே தான்வருவாள்!
ஆசைகொண்ட நாளெல்லாம்
அழகாக வளர்ந்திடுவாள்!
அன்பற்றப் பெண்போல
அவளாகத் தேய்திடுவாள்!
முழுசாகப் பார்த்தவுடன்
மோகத்தால் மதிமயங்கி
உள்ளமெல்லா கொள்ளையடித்(து)
உலகத்தை மறக்கடிப்பாள்.!
உலகத்தை மறக்கடிப்பாள்.!
கண்ணுக்குத் தெரியாமல்
காணாத நாட்களிலும்
காதலுடன் அவன்காண
காலமெல்லாம் அவளிருப்பாள்!
காதலுடன் அவன்காண
காலமெல்லாம் அவளிருப்பாள்!
பால்நிலவும் காதலியாய்க் காண, காதலியின் பால் நிலவும் காதலின் வெளிப்பாடு கவிதையெனப் பரிணமித்த அழகு ரசனைக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதமஞ்சரி அக்கா.
நீக்குநலமா...?
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி.
நிலவு ஒரு பெண்ணாக உலவுகின்ற அழகென்ன அழகோ
பதிலளிநீக்குஉங்கள் கவிதை வரிகளிலே !.....வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் .
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
adengap
பதிலளிநீக்குenna ...!
பதிலளிநீக்குnalla oru karpanai...
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி சீனி ஐயா.
கவிதை முழு நிலவு போல அருமையாய் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி கோபாலகிருடிணன் ஐயா.
ரொம்ப நாள் கழித்த வந்திருக்கிறீர்கள்.
“நான் வாங்கிய “பல்பு“
“சாமி படம் எது?“ இரண்டும் நகைச்சுவை.
படித்துப் பாருங்கள்.
ஆசைகொண்ட நாளெல்லாம்
பதிலளிநீக்குஅழகாக வளர்ந்திடுவாள்!
அன்பற்றப் பெண்போல
அவளாகத் தேய்திடுவாள்!
காதல் நிலவாய் காதலி..!
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.
நல்ல கற்பனை சிறந்த ஆக்கம். பகிர்வுக்கு நன்றி தோழி!
பதிலளிநீக்கு//ஆசைகொண்ட நாளெல்லாம்
அழகாக வளர்ந்திடுவாள்!
அன்பற்றப் பெண்போல
அவளாகத் தேய்திடுவாள்!// இங்கே...
ஆசைகொண்ட நாளெல்லாம்
அழகாக வளர்ந்திடுவாள்
அவள் காதலன் பிரிவையெண்ணி
அதனாலே தேய்ந்திடுவாள்... என்று எனக்கு எண்ணத்தோன்றுகிறது. ஏனென்றால் அவளும் பெண்தானே...:)
இளமதி தோழி....
நீக்குஉங்கள் கருத்தும் அழகாக இருக்கிறது.
ஆனால்...
நான் பாடல் முழுவதும் “காய்ச்சீர்“களை
வைத்து எழுதியுள்ளேன்.
உங்களின் வரிகளில் “கனிச்சீர்“ வந்துள்ளது.
அடுத்து....காதலன் அவளை நினைத்துக்கொண்டே
இருக்கிறான் என்ற கருத்தில் நான் எழுதியதால்
உங்கள் கருத்து இடிக்கும்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.
சிறப்பான கவிதை! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ் ஐயா.
சிறந்த படைப்பாக்கம் ... வரிகளின் கோர்வை அழகு
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி அரசன் ஐயா.
அருமை.... ரசித்தேன்....
பதிலளிநீக்குகாதல் நிலா அழகு.தங்கள் கவி போல.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சித்தாரா.
பெண்ணும் நிலவும் ஒன்றுதான்!அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி குட்டன் ஐயா.
உங்க கவிதையை மாதிரியா வைத்துக்கொண்டு, நான் காதலியைப் பற்றி ஒரு கவிதை எழுதுகிறேன்; தமிழ் தாய் மொழி என்பதாலும்... மற்றும் கேள்வி ஞானத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு கவிதை எழுதுகிறேன்...கவிஞரகள் தவறு இருந்தால் (இருந்தாலா, கட்டாயம் இருக்கும்!) திருத்துங்கள்
பதிலளிநீக்குஎழுதுங்கள் நம்பள்கி....
நீக்குசரியோ தவறோ... தமிழ் வளரும்.
நன்றி.
( “நான் காதலியைப் பற்றி ஒரு கவிதை எழுதுகிறேன்;“ என்று எழுதியிருக்கிறீர்களே... இதில் “என் காதலியைப் பற்றி...” என்று சேர்த்திருந்தால் அக்காவிடமிருந்து நீங்கள் தப்பித்து இருக்கலாம். பாவம் தான் நீங்கள்... சரி விடுங்கள் “யார்,,,? எந்த...? என்பதை எனக்கு மட்டும் சொல்லுங்கள். நான் உங்கள் மனைவியைத் தவிர வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன். பயம் வேண்டாம்... எழுதுங்கள்)
வருகைக்கு நன்றி நம்பள்கி.
நிலவும் பெண்தானே
பதிலளிநீக்குநிலாப் பெண்ணின் அழகில் மயங்காதவர் உண்டோ ?
பதிலளிநீக்குஅழகு நிலா உங்கள் கைகளில் கவியாகின்றாள்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
தமிழை வளர்க்க நானும் ஒரு கவிதையை பதிந்துள்ளேன் இன்று...
பதிலளிநீக்கு"என் காதலி இந்த ஜாதி தான்!"என்ற தலைப்பில்...
தமிழ் கவிஞர்களும், கவிதாயினிகளும் அங்கு வந்து பின்னூடங்கள் மூலம் குற்றம் குறைகளை சொல்லலாம்; தர்ம அடியும் கொடுக்கலாம்...!
நம்பள்கி.... கவிதைக்கு வாழ்த்துக்கள.
நீக்கு( பெண்களுக்குப் “பொஞ்சாதி“ என்ற சாதியைத் தவிர வேற எந்தச் சாதியும் இல்லையே....!!!)
கவிதை முத்துக்கள் நிலவில் மின்னுகிறது
பதிலளிநீக்குகாதல் என்பது உண்மை
நிலவு என்பது (கற்பனை) வெண்மை-உங்கள்
கவிதை என்பது இனிமை ..
அன்பு சகோதரன் மல்லன் ....
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி மல்லன் அண்ணா.
வானத்தின் வதனத்தில்
பதிலளிநீக்குவரமான திலகம் நீ
பூலோக பூங்காவில்
பூப்பறிப்பாய் ராத்திரியில்
கொள்ளையிட்டு உன்னை
அன்போடு அடைத்தாலும்
உள்ளச் சிறைக்குள்ளே
உனக்கென்றும் சுதந்திரமே
அழகிய நிலா கவிதை வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நட்பே.
“கொள்ளையிட்டு உன்னை
அன்போடு அடைத்தாலும்
உள்ளச் சிறைக்குள்ளே
உனக்கென்றும் சுதந்திரமே “
வித்தியாசமான சிந்தனை.
வாழ்த்துக்கள்.
சிந்தனைகளை,வித்தியாசமாயும்,விரிவாயும் தேடும் ஆவலில் கிடைக்கும் வரிகள் நடப்பே....நன்றி வாழ்த்துக்கள்
நீக்குஅருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி நட்பே.
அட டா !!! என்ன அருமையான வரிகள்...! அழகாய் இருக்கிறது தோழி படமும் கவிதையும்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
(படத்தை இணையத்தில் சுட்டேன்.)