புதன், 31 டிசம்பர், 2025

புத்தாண்டு வாழ்த்து 2016, HAPPY NEW YEAR SONG 2026,Jour de l'an 2026,

 



புத்தாண்டு பிறந்தது.
புதுவாழ்வு தந்தது.
எத்தனையோ இன்னல்கள் போனது
இனி எல்லாம் இன்பமாய் மாறுது !
 
நாளைவரும் நாளைவரும்
என்றே ஏங்கிய நன்மை எல்லாம்
இன்றிலிருந்து கிடைத்து விடும் !
 
ஓடிவரும் ஓடிவரும்
என்றே எண்ணிய உறவெல்லாம்
தேடிவந்து சேர்ந்து மகிழ்வார்கள் !
 
புத்தாண்டு பிறந்தது.
புதுவாழ்வு தந்தது.
எத்தனையோ இன்னல்கள் போனது
இனி எல்லாம் இன்பமாய் மாறுது !
 
அன்பும் அருளும் சேர்ந்து வரும்
பொன்னும் பொருளும் கூடி வரும்,
புகழும் பெருமையும் தேடி வரும்.
நட்பும் நலமும் விரும்பி வரும்.
 
நமக்குக் கிடைத்த இன்பங்களை
நாமும் பகிர்ந்து கொடுத்துக்கொண்டு
நாளும் உயர்ந்த மனமுடனே
நலமாம் என்றும் வாழ்வோமே !
 
புத்தாண்டு பிறந்தது.
புதுவாழ்வு தந்தது.
எத்தனையோ இன்னல்கள் போனது
இனி எல்லாம் இன்பமாய் மாறுது !
.
மரபுமாமணி
அருணா செல்வம்

01.01.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக