வியாழன், 27 பிப்ரவரி, 2014

தாய் நாட்டு மண்ணின் சுவை!!
    நம் தாய் நாட்டின் மண் உயர்ந்தது தான். ஆனால் அதை உணவாக உண்ண முடியுமா...?
     உண்ண முடியாது. ஆனால் அது உயர்ந்தது என்பதை இவர் எப்படி சொல்லி இருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

   இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒரு சமயம் வெள்ளை அரசால் சிறைத்தண்டனை பெற்றார் ஜவஹர்லால் நேரு.
   சிறையில் அவரைப்போல் ஏராளமான விடுதலைப் போராட்ட வீரர்கள் இருந்தனர்.
   ஒரு சமயம் அவர்களுக்கு உண்பதற்காக ரொட்டி வழங்கப்பட்டது. ஆனால் அந்த ரொட்டியில் மண் கலந்திருந்தது.
   வீரர்கள் அதை உண்ண மறுத்தனர்.
   ஜவஹர்லால் நேருவுக்கோ கோபம் வந்தது.
   சிறை அதிகாரியை அழைத்தார்.
   “ரொட்டியில் மண் கலந்திருக்கிறது. இதை எங்களால் சாப்பிட முடியாது. மண் இல்லாத ரொட்டியை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்“ என்றார்.
   சிறை அதிகாரி ஓர் ஆங்கிலேயர். அவர் நேருவைப் பார்த்து ஏளமாகச் சிரித்துவிட்டு, “நீங்கள் போராடுவது இந்த மண்ணிற்குத் தானே? இந்த ரொட்டியில் கலந்திருப்பதும் உங்களின் தாய் நாட்டு மண்தான். அதுவும் தனிச்சுவை கொடுக்கும். பேசாமல் சாப்பிடுங்கள்“ என்றார்.
   அதைக்கேட்ட நேருவின் முகம் சிவந்தது.
   “இதோ பாருங்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய் நாட்டு மண் சுவை கொடுக்கக் கூடியது தான். ஆனால் நாங்கள் போராடுவது எங்களது தாய் மண்ணைத் தின்பதற்கு அல்ல. மீட்பதற்கு“ என்று பொரிந்தார் நேரு.
   அதைக்கேட்ட வெள்ளை அதிகாரி வாயடைத்துப் போய், விடுதலைப் போராட்டக் கைதிகள் அனைவருக்கும் மண் கலக்காத ரொட்டி வழங்க ஏற்பாடு செய்தார்.

படித்ததில் பிடித்தது

அருணா செல்வம்.

20 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நக்கலுக்கு சரியான பதில்...

unmaiyanavan சொன்னது…

"//நாங்கள் போராடுவது எங்களது தாய் மண்ணைத் தின்பதற்கு அல்ல. மீட்பதற்கு“ என்று பொரிந்தார் நேரு//" - அந்த ஆங்கிலேயரின் மூக்கை நல்லாவே உடைத்திருக்கிறார்.

பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி சகோதரி.

நம்பள்கி சொன்னது…

tamilmanam+1

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

நேரு சொல்லிய கருத்து சரிதான்

Yarlpavanan சொன்னது…

உணர்வு மிகுந்த உண்மையை வெளிப்படுத்தினீர்கள். வாசிக்கும் போதே உடம்பு சிலிர்க்கிறதே!

Avargal Unmaigal சொன்னது…
என்னடா ஐஸ்க்ரீம் கிடைக்காததால் மண்ணை சாப்பிட்டீங்களோ என்று நினைத்தேன்

Avargal Unmaigal சொன்னது…

நேரு மண்ணை மீட்க போராடினார் என்றால் அவரது வாரிகள் மீட்ட மண்ணை நாசமாக்கி விடவேண்டும் என்று சபதம் எடுத்து அதை நிறைவேற்றி வருகிறார்கள்

அம்பாளடியாள் சொன்னது…

மனம் நெகிழ்ந்தது பகிர்வைக் கண்டு வாழ்த்துக்கள் தோழி
மிக்க நன்றி பகிர்வுக்கு .

சீராளன்.வீ சொன்னது…

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு....

த.ம. +1

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சொக்கன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி நம்பள்கி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அதெல்லாம் சின்ன வயசுல நிறைய சாப்பிட்டாச்சி.

இப்போ ஐஸ்கிரீம் தான் வேணும். டிக்கெட் அனுப்புங்கள்.

அருணா செல்வம் சொன்னது…

எதையும் தான் கஷ்டப்பட்டுப் பெற்றால் தான் அதன் அருமை தெரியும்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சீராளன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.