திங்கள், 19 அக்டோபர், 2015

சினிமா துறையில் ஜொலிக்க வேண்டுமா ?


நட்புறவுகளுக்கு வணக்கம்.
       பொதுவாகவே நிறைய பேருக்கு சினிமா உலகில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. பணத்திற்காக புகழுக்காக என்ற காரணம் மட்டும் அல்லாமல் அதில் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்துக் கொண்டு அனைவரையும் அது தன்பால் இழுக்கத்தான் செய்கிறது.
   ஒரு சமயம், இதில் நம் திறமைகளை வெளிகாட்டினால் அது பல்லாயிரக் கணக்கான மக்களிடம் சென்றடையும் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். எந்தத்திறமையானாலும் அதை மற்றவர்கள் கண்டு களித்துப் பாராட்டினால் தானே அந்தத் திறமைக்காண அங்கிகாரம் கிடைத்ததாக ஆகும்.
   ஏனோ கொஞ்ச நாட்களாக எனக்கும் இந்த ஆசை துளிர்விட ஆரம்பித்து விட்டது. இது சரியா தவறா என்று யோசிப்பதற்கு முன்பே என் எண்ணங்களுக்குச் சிறகு முளைத்து விட்டது. என்ன செய்வது ? நானும் சராசரி மனுஷி தானே….. ஹி ஹி ஹி.....
   சரி… சினிமாத்துறையில் நுழைந்து மின்னுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். தவிர சினிமாத்துறையில் நுழைந்த அத்தனை பேருமே மின்னிவிடவில்லை. ஏதோ சிலர்தான் பிரபலங்காளாக ஆகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள்.
   அப்படி பிரபலங்களானவர்களை ஒரு வரிசைப்படுத்தினேன்.
   என்ன ஓர் ஆச்சர்யம் !!!!!
   நான் வரிசைப்படுத்திய பல பிரபலங்களின் பெயரில் உள்ள எழுத்துக்களில் ஜ, ஜி, ஜோ, ஷ, ஹ, ஸ்ரீ போன்ற எழுத்துக்கள் உள்ளவர்களே நிறைய பேர்களாக இருந்தார்கள்.
உதாரணமாக

சிவாஜி
எம். ஜி. ஆர்
பாலாஜி
எஸ் எஸ் ராஜேந்திரன்
ஜெய்சங்கர்
ஏ எம் ராஜன்
நாகேஷ்
சரோஜா தேவி
டி.ஆர் ராஜகுமாரி
எம் என் ராஜம்
விஜய குமாரி
கே ஆர் விஜயா
ஜெயந்தி
வாணிஸ்ரீ
உஷா நந்தினி
ரஜினி
கமலஹசன்
ஸ்ரீதேவி
ஸ்ரீ பிரியா
சுகாஷினி
விஜய்
அஜித்
தனுஷ்
ஜோதிகா
டி எம் சௌந்தர்ராஜன்
ஜானகி
எல் ஆர் ஈஸ்வரி
ஜிக்கி
ஸ்வர்ண லதா
பாரதிராஜா
பாக்கியராஜ்
பாண்டியராஜன்
டி ராஜேந்தர்…..

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலே உள்ள நட்சத்திரங்கள் மின்னிட இப்படி ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்களைத் தன் பெயரில் வருவது போல் அமைத்துக்கொண்ட காரணமாகக் கூட இருக்கலாம்.
    உடனே நானும் என் பெயரை எப்படி எப்படியோ மாற்றி எழுதிப் பார்த்தேன். ம்ம்ம்….. எதுவும் தேறவில்லை. ஆனால் உங்களில் யாருக்காவது சினிமாத்துறையில் நுழைந்து மின்னிட ஆசை இருந்தால் உங்களின் பெயரை ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ எழுத்துக்கள் சேர்ந்து வருமாறு அமைத்துப் புகழ்பெருங்கள்.

பின்குறிப்பு
    இந்த ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் அல்ல. வடமொழி எழுத்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்

20.10.2015

28 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

என் பெயரில் அல்ரெடி ஸ்ரீ இருக்கே...! :))))))
தம ​ +1

Avargal Unmaigal சொன்னது…

உங்க பெயரை அஜினோ, அருணாஜி,ஜிகினா ஷணா, ஹருணா, அருணா ஸ்ரீ என்று மாற்றி வைத்து பாருங்கள்

Avargal Unmaigal சொன்னது…

ஆமாம் சினிமா துறையில் பாட்டி வேடத்தில் புகழ் பெற ஆசையா அல்லது மாமியார் வேடத்தில் புகழ் பெற ஆசையா என்று நீங்கள் சொல்லவே இல்லையே?

கும்மாச்சி சொன்னது…

அருணா வெகுகாலத்திற்கு பின்பு உங்களது பதிவு. நீங்கள் சினிமாவிற்கு வரவேண்டுமென்றால் அருணாஸ்ரீ என்று பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் ஒரு ரவுண்டு கலக்கலாம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பின் தங்களின் பதிவினைக் காண்கிறேன்
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரியாரே
தம +1

கார்த்திக் சரவணன் சொன்னது…

அருணா ஜெல்வம்னு மாத்திக்கோங்க....

சென்னை பித்தன் சொன்னது…

வாங்க அருணா;நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சூப்பர் யோசனையோடு வந்திருக்கும் உங்களைஇ அருணாஜி என்றே அழைப்பேன்!

KILLERGEE Devakottai சொன்னது…

அருமையான தொகுப்பு சகோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தது போல் இருக்கிறது வாழ்த்துகள் இதில் இன்னும் 5 நபர் சேர்த்திருக்கலாம் தங்களது தளம் இப்பொழுது எனக்கு திறப்பதற்க்கு பிரட்சினையில்லை.
01. கில்லர்ஜி
02. விஜயகாந்த்
03. ராஜா
04. விஜயகுமார்
05. வைஷ்ணவி
06. ஸ்ரீவித்யா
07. குஷ்பு
08. வைஜயந்தி
09. வைஜெயந்திமாலா
10. ஸ்ரீகாந்த்
11. ஸ்ரீசாந்த்
இன்னும் இருக்கூ................
தமிழ் மணம் 6

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஹாஹா.. நல்ல யோசனை.

எனக்கு ஆசையில்லை! அதனால் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை..

நம்பள்கி சொன்னது…

எந்த மொழிப்படங்கள் எனபது முக்கியம்.
ஜப்பான் மொழி என்றால் அருணா மோட்டோ!
தமிழ்படம் என்றால் அருணாஷா, அருணா அகர்வால், அருணா ஐயர், அருணா ஷெட்டி, அருணா ஷேல்வம். பிரான்சு அருணா..இப்படி.
ஹிந்திபடம் என்றால் , அருணா கான், அருணா தீட்சித், அருணா ஷர்மா, அருணா கர், அருணா ஷில்பா! அருணா ராய்!
தெலுங்கு படம் என்றால் அருணாடு, அருணா ராவ், அருணா ரெட்டி.
மலையாளப் படம்.என்றால்??? அங்கு தான் படத்தின் பெயரயே எவனும் பார்பதைல்லையே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள் அக்கா...
இப்படியும் இருக்குமோ... அது சரி...
கடைசியில் அடீச்சீங்க பாருங்க... அதுதான் சிக்ஸர்...
நன்றி.

Avargal Unmaigal சொன்னது…

அது என்ன ஒரு ரவுண்டு கலக்கிறது. நிறைய ரவுண்ட் கலக்கலாம் ஹீஹீ

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் ஏற்கனவே பிரபலமாகத்தான் இருக்கிறீர்கள் ஸ்ரீராம் ஐயா.

வருகைக்கும் நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

இப்படியெல்லாம் என் பெயரை மாற்றினால் எனக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச பெயரும் போய்விடும் தமிழரே.

அருணா செல்வம் சொன்னது…

ஹலோ.... இது கொஞ்சம் ஓவரா இல்ல....

வயசான தாத்தாவெல்லாம் கதாநாயகனாக நடிக்கிறார்கள். அதிலும் பேத்தி வயது பெண்களையே ஜோடியாக சேர்த்து....
எனக்கென்ன......
வயசு கூட வெறும் நாலேகால் கழுதை வயசு தான் ஆகிறது.
நான் ஏன் கதாநாயகியாக நடிக்க கூடாது.....?
ஆனால் தமிழரே.... எனக்கு தான் அந்த ஆசை கிடையாது. ஏதாவது பாட்டு கீட்டு எழுதி பார்ப்போமே என்ற ஆவல். அவ்வளவு தான்.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வாங்க கும்மாச்சி அண்ணா.
அருணாஸ்ரீ... நன்றாகத்தான் இருக்கிறது. நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தமிழரே.... கும்மாச்சி அண்ணா சொல்வது போல் முதல் ரவுண்டிலேயே கலக்கிடனும்.
அப்படி இருக்கிறவர்களால் மட்டுமே நிறைய ரவுண்ட் கலக்க முடியும் சினிமாவில்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நல்லவேலை... அருணா ஜொள்வோம் என்று நீங்கள் சொல்லவில்லை.
நன்றி கார்த்திக்.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் பித்தன் ஐயா.

அப்பாடி.... நீங்கள் ஒருவர் தான் என் யோசனையைச் சூப்பர் என்று சொன்னீர்கள்.
நன்றி பித்தன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் கில்லர்ஜி.

நிறைய பேர்களைச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.
ஜெயலலிதா, ஜெயமாலினி, ஹேமா மாலினி, ஜெயசுதா.... என்று இன்னும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். சும்மா நம் நண்பர்களுக்கு ஐடியா கொடுக்கலாமே என்று தான்....

என் தளம் நன்றாக திறக்கிறது என்ற மகிழ்சியான செய்தியைத் தெரிவித்ததற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

அருணா செல்வம் சொன்னது…

வாங்க நாகராஜ் ஜி.

உங்களுக்கு ஆசை இல்லை என்றாலும் நீங்கள் பிரபலம் தான்.
நன்றி ஜி.

அருணா செல்வம் சொன்னது…

வாங்க நம்பள்கி.

எனக்கு தமிழே ததிகினத்தோம் போடும். அதில் மற்ற மொழிகளா.... வேண்டாம் சாமீ....

அருணா செல்வம் சொன்னது…

வாங்க குமார்.

இப்படியும் இருக்குமோ....
இருக்கலாம்.
ஆனால்..... திரைப்படத்திலேயே நடிக்காத திரைப்படம் என்பதே வராத காலத்திலேயே பிலபலமாகி புகழ்ப் பெற்ற திருவள்ளுவர் கம்பர், பாரதியார் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
நன்றி குமார்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

நல்லாயோசிச்சிருக்கீங்க
நான் கூட ரமணிஜி என மாற்றிக் கொள்ளலாமா
என யோசிக்கிறேன்
இதன் காரணமாக வாய்ப்புக் கிடைத்தது என்றால்
உங்களுக்கு ராயல்டி நிச்சயம் உண்டு
அப்புறம் பேங்க் அக்கவுண்ட்
எண்ணை வாங்கிக் கொள்கிறேன்

நம்பள்கி சொன்னது…

என்கூட கதாநாயகியா நடிப்பீங்களா?

அருணா செல்வம் சொன்னது…

இந்த வயசான காலத்துல இந்த ஆசையெல்லாம் உங்களுக்குத் தேவையா நம்பள்கி.....

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் இப்பவே பிரபலம் தான் இரமணி ஐயா.
அதனால நான் உடனே அக்கவுண்ட் நம்பரை மெயில் பண்ணி விடுகிறேன்.
நன்றி இரமணி ஐயா.