வியாழன், 19 பிப்ரவரி, 2015

நட்டநடு இரவினிலே....!!



நட்டநடு இரவினிலே
நற்பாடல் நானெழுதக்
கொட்டகொட்ட விழித்திருந்தேன்
கோணச்சொல் வரவில்லை!

பட்டமர வாழ்வதையும்
பளிங்குபோல் காட்டவரும்!
பட்டுவிரி வாழ்வதையும்
பளபளக்க எழுதவரும்!

எட்டிஎட்டி யோசித்தேன்
எட்டாமல் போனதனால்
எட்டாமல் ஏமார்ந்த
இளநரியின் நிலையானேன்!

கட்டான கவியெழுதக்
கவித்தமிழே எங்குநின்றாய்?
சட்டென்று வந்துவிடேன்
சந்தமுடன் எழுதிவிட!

மொட்டொன்று பூப்பதுபோல்
முகமலர்ந்து சிரிப்பாயே!
மெட்டோடு கவியெழுத
மெதுவாகச் சிரித்துவிடேன்!

பட்டென்று கண்ணிரண்டும்
படபடக்க பார்ப்பாயே!
பாட்டொன்று நானெழுதப்
பார்க்காமல் பார்த்துவிடேன்!

அருணா செல்வம்

20.02.2015

21 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. மொட்டொன்று பூப்பதுபோல், மெட்டோடு வந்த வரிகளை ரொம்பவே ரசித்தேன் சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. கவிதை நன்றே எழுதும் நேரம்
    கனிந்தே சீக்கிரம்மலரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  4. அருமையான கவிதை. ரசித்தேன் மெட்டோடு கவியெழுத கனித்தமிழையே துணைக்கழைத்ததை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாலசுப்பரமணியன் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அட ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்....!!!!

      நன்றி சீனி சகோ.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  8. Sorry sister, i am not able to view your page through my pc hence i am using my mobile for updating comment by english

    By
    Killergee

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன ஐயா....? நீங்கள் வந்து படிப்பதே எனக்கு மிக்க சந்தோஷம்.
      மீண்டும் நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  10. அருமையான க்விதை மிகவும் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு