வியாழன், 22 ஜனவரி, 2015

பள்ளியறையிலே ஓர் பளிங்குச்சிலை! (முடிவு)    நரேன் அவன் விரும்பும் மிலானியையும் டேவிட்டையும் பிரிப்பதற்கான சரியான(?) வழியைக் கண்டு பிடித்து விட்டான்.
   அதன் பிறகு அவசர அவசரமாக செயல் பட்டான். டேவிட்டைப் பற்றி தெரிந்துக் கொள்ள அதிக நாட்கள் பிடிக்கவில்லை. டேவிட் சாதாரண குடும்பம். அவன் அப்பாவின் முன்றாவது மனைவியின் நான்காவது மகன்.
   ஏதோ ஒரு மோட்டார் தயாரிக்கும் கம்பெனியில் அடிமட்ட வேலையாள். மனத்தில் குறித்துக்கொண்டான்.
   மிலானியிடம் எந்த மாற்றத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. மாறாக அவளின் அப்பா அம்மாவிடம் அதிகமாக அக்கரை எடுத்துப் பழகினான். அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான்.
   அதே போல் டேவிட்டிடமும் அக்கரையுடன் நடப்பதாக நடித்து அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக போதை ஊசிக்கு அடிமையாக்கினான். இதைக் கற்றுக்கொடுக்க நரேனுக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை.
   தொடக்கத்தில் வேண்டாம் என்று மறுத்த டேவிட்டின் எதிரிலேயே தன் கையில் சாதாரண வலி மருந்து நிரம்பிய ஊசியைக் குத்திக் காண்பித்தான். “இதோ பார் டேவிட். நான் நன்றாகத் தானே இருக்கிறேன். ஆனால் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னைக் கட்டாயப் படுத்தவில்லை. ஒரே ஒரு முறை முயற்சித்துப் பார்....“ என்றதும் டேவிட் தயங்கியபடி கையை நீட்டினான்.
    நரேனுக்கு மனத்துள் வெற்றிப் புன்னகை. டேவிட் சற்றுத் தயங்கியும் தடுத்தும் நரேனே ஊசியைக் குத்தி விட்டான்.
   அவன் மயங்க... அடுத்து அடுத்து போதை மருந்து ஊசியைக் குத்தி அந்த போதையிலேயே மிதக்க விட்டான். இந்த போதையை ஒரு முறை அறிந்து விட்டால்  அதை விடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது நரேனுக்கு நன்றாகவே தெரியும்!
    இப்போது மிலானி வீட்டிற்கு அடிக்கடி போய் வருகிறான். இப்படித்தான் சென்ற மாதம் ஒருமுறை மிலானியின் வீட்டினுள் நுழைந்த போது கலங்கிய விழிகளும் வாடிய முகமுமாக மிலானியின் தந்தை...
   நரேன் கனிவாக விசாரித்ததில், அவர் கலங்கிய படி சொன்னார்.
   “இந்தப் பெண்ணை ஒரே பெண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தால் அந்த கஞ்சா புடிக்கிற டேவிட்டோட் சேர்ந்து....“ அவரின் குரல் தடுமாறியது.
   “சேர்ந்து...?“ தெரிந்த விசயம் தான். இருந்தாலும் அவலுடன் கேட்டான்.
   “சேர்ந்து.... என்ன சொல்லுறது. சொல்லவே வாய் கூசுகிறது. சே..... அவனைத் தான் கட்டிக்குவேன்னு வேற சொல்றா....“
   “அவ சொன்னல் என்ன? நீங்கள் தான் அவ வாழ்க்கையை ஒழுங்கா அவளுக்கு அமைச்சித் தரனும்...“
   இந்த நேரத்திற்காகவே காத்திருந்தவன். ஓதினான்.
   “செய்யலாம்ப்பா.... ஆனால் இப்படிப்பட்ட பெண்ணை யார் கல்யாணம் பண்ணிக்குவா...?“
   “ஏன்....? நான் பண்ணிக்கிறேன் சார்...“
   “என்னப்பா சொல்லுறீங்க...!! எல்லாம் தெரிஞ்ச நீங்களே வா....?“
   “ஆமாம். எல்லாம் தெரிஞ்ச நானே கல்யாணம் பண்ணிக்கிட்டாத் தான் அவ வழ்க்கை நல்லபடியா அமையும். நீங்க சம்மதிச்சா போதும். எனக்கு மிலானி சம்மதம் கூட வேண்டாம்“
   அவனுக்குத் தெரியும், மிலானி இதற்குச் சம்மதிக்க மாட்டாள் என்று....
    அன்புடன் கையைப் பிடித்துச் சொன்ன நரேனைக் கடவுளுக்கு நிகராக நினைத்துக் கும்பிட்டார் மிலானின் தந்தை.
   
   இதோ... கல்யாணம் முடிந்துவிட்டது. இன்றே முதலிரவு.
   யாரோ கதவைத் தட்டும் ஓசை. நரேன் கதவைத் திறக்க மிலானி வெண்பட்டுச் செலையில் வெள்ளை மயிலாக நின்றிருந்தாள். அவள் அருகில் அவள் அம்மா.
   அவன் சற்று நகர்ந்து வழிவிட, மலானியை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்துவிட்டுப் போய்விட்டாள்.
   கதவைச் சாற்றிவிட்டு திரும்பி குதுகலமான மனத்துடன் மிலானியைப் பார்த்தான். அவள் கட்டிலில் சாய்ந்திருந்தாள். கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
   அருகில் சென்று “மிலானி...“ என்று மெதுவாக அழைத்தான்.
   “ம்....“
   “திரும்பி என்னைப் பாரேன்....“ சொல்லிக் கொண்டே அவள் முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பினான். முகம் பொத்தென்று அவள் பக்கமாக திரும்பியது எந்த வித உணர்வுமின்றி.
   என்ன இது.... போதை ஏற்றும் கண்களில் போதை மயக்கமா....? “மிலானி... மிலானி....“ யோசனையுடன் அவள் கன்னத்தைத் தட்டினான்.
   “ம்.... நரேன் நீயா....? நா டேவிட்டுன்னு நெனச்சேன். நரேன்... நரேன்.... உன்ன கல்யாணம் பண்றதுக்காக என் அம்மா அப்பா... ரெண்டு வருஷமா காதலிச்ச டேவிட்ட பிரிச்சிட்டாங்க. அவனால ஆன கர்ப்பத்தைக் கூட கலைச்சிட்டாங்க தெரியுமா ஒனக்கு? நரேன் இது கூட பரவாயில்லை. இந்த... இந்த... டேவிட் கத்துக்குடுத்த ஊசியைக் கூட போடக்கூடாதாம். என்னால இனிமேல முடியுமா.... நரேன் நீயே சொல்லு.... முடியாது நரேன்....“
   மிலானி திக்கித் திக்கிக் குழந்தையாகப் பேசினாள். நரேன் சட்டென்று அவள் கையைப் பார்த்தான். வெண்மை நிற கையில் கருநீலம் படர்ந்து... குட்டிக்குட்டியாய்ச் சிவப்புப் புள்ளிகள்.... அவள் போதை ஊசி போடுபவள் என்பதைக் காட்டிக் கொடுத்தது.
   “எல்லாம் உன்னால தான்.... நீ மட்டும் அவனுக்கு இந்தப் பழக்கத்தைக் கத்துத் தரலைன்னா... நா இன்னேரம்.... இன்னேரம்.... ஆ..ஹா... ஆஹாஹா... ஆஹாஹா...
   அவள் சிரித்தபடி கட்டிலில் விழுந்தாள்.... வாயில் எச்சில் வடிய...
   நரேன், உணர்ச்சியற்று போய் பளிங்குச் சிலையாகக் கட்டிலில் கிடந்த மிலானியைப் பார்த்துக் கொண்டு அவனும் ஒன்றும் செய்யமுடியாத கற்சிலையாக நின்றான்.

அருணா செல்வம்.

19.10.1999

30 கருத்துகள்:

 1. தன் ஊசி தன்னையே குத்தும்னு சொல்லலாம் போலிருக்கே !
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி பகவான் ஜி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி கில்லர் ஜி.

   நீக்கு
 3. உங்க சிறுகதை ப்ளாட் எப்போவுமே பக்கா வா இருக்குங்க அருணா!
  "காதலிய" இதுபோல் ஸ்ட்ரேட்டஜி போட்டு அடைய விரும்புவர்களும் இருக்கத்தான் செய்றாங்க. அதில் வெற்றியடைந்தவர்களும் இருக்காங்க என்பது நெருடும் விடயம்.

  மனிதர்களில் ரெண்டு வகைனு நினைக்கிறேன்.

  * தனக்கு வேண்டியதை எப்படியாவது தட்டிப் பறித்தாவது பெற்றுவிட்ட வேண்டும் என்பது ஒரு வகை!

  * தனக்கு கிடைக்கலைனா "ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்" என்று தன் மனதை அதற்கேற்றார்போல் பழக்கப் படுத்திக்கொள்பவர்கள் இன்னொரு வகை..

  இதில் ரெண்டாவது வகை கொஞ்சம் ஹாம்லெஸ் மேலும் அதிக விழுக்காடு களிலிருக்காங்கனு நினைக்கிறேன்.

  --------------------

  நரேன் ஒண்ணு செய்யலாம்,,,,

  தான் பழகிக்கொடுத்த போதை மருந்துக்குத் தானும் அடிமையாகி அவளுடன் முதலிரவில் ஐக்கியமாகி விடலாம் . :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க சிறுகதை ப்ளாட் எப்போவுமே பக்கா வா இருக்குங்க அருணா!

   அப்பாடா...... விஷ்வாமித்திரர் கையால் ராஜரிஷி பட்டம் பெற்றது போல் இருக்கிறது வருண் சார். மிக்க நன்றி.

   நரேன் ஒண்ணு செய்யலாம்,,,,

   தான் பழகிக்கொடுத்த போதை மருந்துக்குத் தானும் அடிமையாகி அவளுடன் முதலிரவில் ஐக்கியமாகி விடலாம் . :))))

   உங்களின் இந்த ஐடியா நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால்....

   நீக்கு
 4. அஹா...
  போதை பேதைக்குமா...
  வடை போச்சே...
  நல்ல முடிவு....
  அருமை அக்கா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 5. பகவான்ஜி யின் கமெண்ட், மற்றும் வருநின் கமெண்ட்டில் கடைசி வரி ரசிக்க வைத்தன!

  சரியான வகையில்தான் பழி வாங்கி இருக்கிறாள் டேவிட்டின் காதலி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வது உண்மை தான்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. அவனுக்கு நல்லா வேண்டும்.... இல்லையா தனபாலன் அண்ணா...
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி.

   நீக்கு
 7. சிறந்த கதை ! உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
  தோழி .த .ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 8. நல்ல முடிவு. வாழ்த்துக்கள் தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி கவியாழி ஐயா.

   நீக்கு
 10. சோக முடிவு என்றாலும் வாசகரால் யூகிக்க முடியாத முடிவு.

  கதை மாந்தர்களுக்குத் தோல்வி. ஆனாலும் கதாசிரியரான அருணாவுக்கு வெற்றியே.

  அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டிக்கொண்டே திறம்படக் கதையை நடத்திச் செல்லுகிறீர்கள்.

  நல்ல ‘சஸ்பென்ஸ்’ கதை; கனமான சோகக் கதையும்கூட.

  வளர்க உங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வளர்க உங்கள் புனைகதை ஆர்வம் என்று வாசிக்கவும். நன்றி.

   நீக்கு
  2. இதுவும் ஒரு வகை முடிவு....

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி பரமசிவம் ஐயா.

   நீக்கு
 11. கதை எழுதும் திறமை கண்டு வியக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 12. கெடுவான் கேடு நினைப்பான்!
  அருமை
  த ம 11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்.
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி பித்தன் ஐயா.

   நீக்கு
 13. தன்வினை தன்னைச் சுடும்.....கெடுவான் கேடு நினைப்பான்...இப்படி எல்லாம் சொல்லப்பட்டது இது போன்றவர்களுக்காகத்தானோ?

  கதை அருமை! முடிவும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக இப்படிப் பட்டவர்களுக்காகத் தான்
   அப்படி சொல்லி இருப்பார்கள்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

   நீக்கு
 14. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கும்
   நல்ல தகவலுக்கும் மிக்க நன்றி.
   என்னை வலைச்சரத்தில் அடையாளம் காட்டியமைக்கும்
   மிக்க நன்றி கலையரசி அம்மா.

   நீக்கு