ஞாயிறு, 24 நவம்பர், 2013

முதல்தரம் இருக்க இரண்டாம் தரம் ஏன்?


   உங்களுக்கு ஹென்றி ஃபோர்டுவைத் தெரியுமா...? அவர் தான் உலகப் புகழ் பெற்ற ஃபோர்டு காரைத் தயாரித்தவர்.
   இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஒரு சமயம் இவர் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு பல இடங்களுக்குச் சென்று வர அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன் படுத்தினார்.
   அந்த காலத்தில் ஃபோர்டு கார்களைப் போல ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் புகழ் பெற்றிருந்தன.
   ஆனாலும் ஃபோர்டு கார்களைவிட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இரண்டாம் இடத்தில் தான் இருந்தன.
   முதல் தரமான போர்டு கார்களைத் தயாரிக்கும் ஹென்றி ஃபோர்டு, இரண்டாம் இடத்தில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்கிறாரே என்று நினைத்துப் பெரிதும் வியந்தனர் பிரிட்டிஷ் மக்கள்.


   ஒரு நாள் இரவு இங்கிலாந்து மன்னர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ஹென்றி ஃபோர்டு கலந்து கொண்டார்.
   அப்போது மன்னர் அவரைப் பார்த்து, “மிஸ்டர் ஃபோர்டு... நீங்கள் உங்கள் தயாரிப்பான ஃபோர்டு காரைப் பயன்படுத்தாமல், ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்துகிறீர்களே. அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?“ என்று கேட்டார்.
   அதற்கு ஹென்றி ஃபோர்டு, “நிச்சயமாக அரசே. எனது சொந்த உபயோகத்திற்காக ஒரு ஃபோர்டு கார் வேண்டும் என்று எனது மேனேஜரிடம் சொல்லி இருந்தேன். ஆனால் ஒவ்வொரு காரும் தயாராகி வெளியே வருவதற்கு முன்னாலேயே விற்பனையாகி விடுகிறது.
   எனது மேனேஜர் மிகவும் நேர்மையானவர். அவர் முதலில் வாடிக்கையாளர்களுக்குத் தான் கார்களை விற்பனை செய்வார். அவர்களைத் திருப்திப்படுத்துவது தான் அவரது முதல் நோக்கம். அந்த சமயத்தில் நானே வந்து கேட்டால் கூட காரைத் தரமாட்டார். அதனால் என் சொந்த உபயோகத்திற்கு இன்னும் ஃபோர்டு கார் கிடைக்கவில்லை. அதனால் தான் நான் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்துகிறேன்“ என்றார்.


   ஃபோர்டு கார் கம்பெனி மானேஜரின் கடமை உணர்ச்சியையும் அவருக்கு செவிமடுத்து ஒரு சாதாரண மனிதர் போலவே நடந்து கொள்ளும் உரிமையாளர் ஹென்றி ஃபோர்டையும் நினைத்துப் பெரிதும் வியந்தார் இங்கிலாந்து மன்னர்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.



31 கருத்துகள்:

  1. அறியாத தகவல் .பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தோழி அருணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  2. வணக்கம்
    பதிவு அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்.

      தன்னுடையக் கார்தான் உயர்ந்தது என்று சொல்லாமல் சொல்கிறாராம்....

      கருத்துக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது. தொடரட்டும்.....

    த.ம. 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  6. இப்படி எல்லாருமே கடமை ஆத்துனா.. நல்லாத்தானிருக்கும்..! சுவாரஸ்யமான நல்ல தகவல்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி உஷா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஆமாங்க மூங்கில் காற்று.

      ரொம்ம்ம்ப ஓவர் தான்.

      கருத்துக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  8. ///முதல்தரம் இருக்க இரண்டாம் தரம் ஏன்? ///

    இதை அவசரத்துல 'முதல்தாரம் இருக்க இரண்டாம் தாரம் ஏன்? ' என்று படிச்சிட்டு என்னடா பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லாமே இருக்கே என்று மண்டையை போட்டு உடைத்தேன். ( பூரிக்கட்டையால் மண்டை உடையவில்லை ) tha,ma 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூரிக்கட்டையால் மட்டும் மண்டை உடையாது...
      சில சமயங்களில் “காலா“லும் மண்டை உடைய வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  9. முன்பே எதிலோ படித்தாலும் மீண்டும் படிக்கும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  10. புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  11. எனக்கு தரம் எல்லாம் தெரியாது..
    எனக்கு தெரிந்தது தாரம் மட்டுமே!
    போ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாரம் நன்றாக அமைந்ததால் தான் உங்களுக்குத் தரத்தைப் பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

      “போ” வுக்கும் நன்றி நம்பள்கி.

      நீக்கு
  12. அதில் அப்படியே அவர் கம்பெனிக் கார்தான்
    முதல் தரமானது என உணரவைத்ததை மிகவும் ரசித்தேன்
    சுவாரஸ்யமான அருமையான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  13. ஃ போர்டு சொன்ன காரணம் நம்புரா மாதிரியா இருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மன்னரே நம்பியிருக்கிறார்....!!

      ஆனால் எனக்கும் கொஞ்சம் குழப்பம் தான். ஒரு சமயம் இது தற்பெருமையோ... அல்லது ஔவையார் சொன்னது போல வஞ்சி புகழ்ச்சியோ.... தெரியவில்லை.

      நன்றி ஜெயதேவ் ஐயா.

      நீக்கு
  14. பதிவு அருமை தோழி !
    வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழரே!

      நீக்கு