செவ்வாய், 14 மே, 2013

புது வீடு!! (நிமிடக்கதை)



                     
     
    கமலாவிற்கு இன்று மனம் நிறைந்த மகிழ்ச்சி. காலையில் நடந்த தன் புது வீடு புகுவிழாவிற்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் மூக்கில் விரல் வைப்பது போல் பார்த்தது மேலும் அவளுக்குப் பெருமிதத்தைக் கொடுத்தது.
    தான் வாழ்ந்த பழைய வீட்டை இடித்துப் புதுவீடாக அதுவும் இப்பொழுது உள்ள நாகரிக வசதிகளுடன் கட்டிய இந்த வீட்டிற்காக அவள் பட்ட துன்பங்களை எண்ணிப் பார்த்தாள்.
   திருமணம் முடித்து வந்த அன்றே பெய்த மழையில் வீடு முழுவதும் ஒழுகியது. உறவினர்கள் என்று வந்தால் தங்க முடியாது. இருந்த ஒரேயொரு சின்ன அறையில் தான் அவள் கணவரின் தங்கை படுத்துக்கொள்வாள். திருமணமான இவர்களுக்கு என்று எந்த ஒரு ஒதுக்குப்புறமும் கிடையாது. மாமியாரும் மாமனாரும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு வெளியில் படுப்பார்கள்.
   அதிலும் மாமியாருக்கு ஆஸ்துமா தொல்லை. வெளி காற்று ஒத்துக்கொள்ளாது. அவர்கள் படும் துன்பத்தைப் பார்க்கச் சகிக்காமல் இவளே அவர்களை வெளியில் படுக்க விடுவதில்லை. இதற்கு நடுவிலும் மாதவன் பிறந்தான். அவனுக்கும் ஆஸ்துமா இருந்ததால் குழந்தையை டவுனில் இருக்கும் தன் தாய் வீட்டிலேயே விட்டு வளர்த்தாள்.
   அவள் மாதவனைப் பார்க்கப் போகும் பொழுதெல்லாம் “அம்மா எனக்கு உன் கூடவே இருக்கனும்ன்னு ஆசையா இருக்குதும்மா... நானும் உன் கூடவே இருக்கிறேன்ம்மா...“ என்று பிள்ளை அழுவும் பொழுதெல்லாம் “இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க ராசா. வீடு கட்டி முடிச்சதும் நீ அங்க வந்திடு... அப்புறம் பெரிய வீட்டில் ஜாலியா இருக்கலாம்...“ என்று கவலையுடன் பேசி சமாதானப் படுத்திவிட்டு வருவாள்.
   வீட்டைச் சுற்றி நிறைய இடம். எப்படியாவது இந்த வீட்டை இடித்துப் பெரியதாகக் கட்டிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் அவள் கணவன் வயலில் சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தில் நாத்தனாரைக் கட்டிக்கொடுக்கவும், மாமியார் மாமனார் இறுதியாத்திரைக்கும், பிள்ளையின் படிப்புச் செலவிற்குமே சரியாய்ப் போயிற்று.
   மாதவன் வளர்ந்து தான் காதலித்தப் பெண்ணையே கட்டிக்கொண்டாலும் தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றாமல் விட்டுவிடவில்லை. அவன்கொடுத்தப் பணத்துடன் வீட்டைச்சுற்றி இருந்த அதிகப்படியான இடத்தை விற்றுவிட்டு கமலா இந்த வீட்டைக் கட்டி முடித்துவிட்டாள்.
   மனம் நிறைந்து விட்டது போல் இருந்தது.

   வெயில் இறங்க இறங்க ஒவ்வொரு உறவினர்களாகக் கிளம்பினார்கள். கடைசியாக மாதவனும் மனைவி குழந்தைகளுடன் கிளம்ப... கமலாவிற்கு மனம் பகீரென்றது. “நீயும் கிளம்புறியாப்பா..?“ என்று கேட்டாள்.
   “ஆமாம்மா.... நாளைக்கு பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போகனும். நானும் அவளும் வேலைக்குப் போகணும் இல்லையா...?“ என்றான்.
   “ஒரு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு இருந்துட்டு  போயேன்பா....“ என்றாள் கெஞ்சலாய்.
   “ரெண்டு நாள் லீவா....? வீடு கட்ட நிறைய கடன் வாங்கி இருக்கேன். அந்த கடனை எல்லாம் அடைக்கிற வரைக்கும் லீவெல்லாம் போட முடியாதும்மா. நேரம் கிடைக்கும் பொழுது நீங்க கிளம்பி வாங்க. நான் கிளம்புறேன்....“
    கிளம்பிப் போய் விட்டான்.

    வீட்டிற்குள் வந்த கமலா மற்ற வேலைகளை முடித்துவிட்டு கணவனைத் தேடினாள். உழைத்து உழைத்துத் தேய்ந்த உடல்.... தோட்டத்தில் இருந்த கட்டிலில் உறங்கி விட்டிருந்தான்.
    கமலா தான் கட்டிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். ஏனோ அந்த வீடு அவளைப் பயமுறுத்துவது போல் இருந்தது. எதுவுமே கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தால் தான் அதற்கு மதிப்பு என்பது புரிந்த பொழுது ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு பேசாமல் வந்து தன் கணவனின் கட்டிலின் பக்கத்தில் பாயை விரித்துப் போட்டுப் படுத்துக்கொண்டாள்.

அருணா செல்வம்.
14.05.2013
   

40 கருத்துகள்:

  1. எதுவுமே கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தால் தான் அதற்கு மதிப்பு ..!

    அருமையான கதை ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  2. //கமலா தான் கட்டிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். ஏனோ அந்த வீடு அவளைப் பயமுறுத்துவது போல் இருந்தது. எதுவுமே கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தால் தான் அதற்கு மதிப்பு என்பது புரிந்த பொழுது ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு பேசாமல் வந்து தன் கணவனின் கட்டிலின் பக்கத்தில் பாயை விரித்துப் போட்டுப் படுத்துக்கொண்டாள்.//

    அருமையான யதார்த்தமான கதை.

    எதுவுமே கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தால் தான் அதற்கு மதிப்பு உண்டு என்ப்து தான் உண்மை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாட்களாக வலைப்பக்கம் வருவதில்லையே....
      நலமாக இருக்கிறீர்களா...?

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.


      நீக்கு
  3. நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வின் யதார்த்தம் இதுதான்... கதை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கனகலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. To qualify as "oru pakkak kathai" it should be very short. This is "sirukathai" not "oru pakkak kathai" .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெய்தேவ் ஐயா.

      நான் எழுதியது ஒரு பக்க கதையும் இல்லை. சிறுகதையும் இல்லை.
      ஒரு பக்க கதை என்பது ஒரே ஒரு பக்கத்திற்குள் முடித்துவிட வேண்டும்.
      சிறுகதை என்றால் சொல்ல வந்த கருத்தின் சூழலைவிளக்கி கொஞ்சமாவது வர்ணனைகள் சேர்த்து எழுத வேண்டும்.
      இன்றைய விறுவிறுப்பான உலகத்தில் பட்டாணி கடலையை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அந்தத்தாளைப் படித்துவிட்டு உடனே துாக்கி எறிந்து விடுவது போல் அமைத்தால் தான் விரும்பி வந்து படிக்கிறார்கள் ஐயா.

      அதனால்... இப்படி நான் ஒரு நிமிடத்தில் முடித்துவிடும் அளவிற்குச் சிறுகதைகளைச் சுறுக்கி எழுதுகிறேன். தவறாக இருப்பினும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

      தங்களின் வருகைக்கும் நடைமுறைக்கு அப்பாற்பட்டு கதை அமைத்திருந்ததால் விளக்கம் கொடுத்ததற்கும் மிக்க நன்றி ஐயா.
      தொடர்ந்து வந்து என்பதிவில் குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்ள முயலுகிறேன். நன்றி.

      நீக்கு
  5. எதுவுமே கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தால் தான் அதற்கு மதிப்பு ..!

    சத்தியமான உண்மை!

    கதை நன்றாக இருக்கிறது. இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துடன் கூடிய பாராட்டிற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி அண்ணா.

      நீக்கு
  7. மிக மிக அருமை
    பெரும்பாலோரின் வாழ்வின் நிலை
    இப்படித்தான் உள்ளது
    சொல்லிச் சென்றவிதமும்
    முடித்த விதமும் மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  8. அழகிய நெருடலான கதை...

    இன்றை காலக்கட்டத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய காலத்தில் கிடைப்பதில்லை...

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவிதை வீதி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  10. வாழ்வியலின் பல உண்மைகளை உணர்த்திப் போகிறது கதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  11. பல இடங்களில் இவ்வாறுதான் நடக்கிறது. கதை சொல்லிச்சென்ற முறை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மாதேவி தோழி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  13. உங்களுக்கு சோகமாக எழுத நன்றாக வருகிறது. பல பெண்களுக்கு அவர்கள் மாமியார்களே வில்லிகள்; திருமணம் ஆண் பின்பு மகனுக்கு மனைவி சுகம் தேவை என்பதை ஏன் அவர்கள் அறிந்து கொள்வதில்லை? வீட்டில் இடம் இல்லாவிட்டாலும் மனது இருந்தால் இளம் தம்பதியினருக்கு தனிமை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      நீங்கள் சொன்னக் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். பல வீடுகளில் நடப்பதைத் தான் எழுதுகிறேன். என் கதையைப் படிக்கும் மாமியார்களோ... அல்லது உங்களின் கருத்தைப் படிப்பவர்களோ புரிந்து கொண்டால் நல்லது தான்.

      சோகத்திலும் ஒரு சுகம் இருக்கிற மாதிரி கதை எழுத இனி முயற்சிக்கிறேன்.

      கருத்திற்கு மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  14. வீடு வசதியில்லாதபோது உறவுகளால் நிறைந்திருந்தது. இப்போது வசதிகள் உண்டு. வீடு நிறைக்க உறவுகள்தாம் இல்லை. மனதைத் தொட்ட கதை. பாராட்டுகள் அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன கருத்து தான் என் கதையின் கரு.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  15. நடுத்தர வர்க்கத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது கதை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. உணர்வுகளை முடிவிலேயே வெளிபடுத்திவிட்டீர். கதையின் முடிவை அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காசிலிங்கம் ஐயா.

      நீக்கு
  17. ஒரு நிமிடக்கதை பலவருடம் நினைவில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா. ஒருசில விசயங்கள் நமக்குப் பிடித்திருந்தால்
      உடனே மனத்தில் பதிந்து தான் விடுகிறது.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  18. Paradox என்பது இதுதான்!
    சின்ன வயதில் எவ்வளவு வேண்டுமானாலும் இனிப்பு சாப்பிடலாம் பணம் இருக்காது. வயதானவுடன் பணம் இருக்கும். சர்க்கரை வியாதி இனிப்பு சாப்பிட முடியாது!

    நல்ல கதை அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன அருமையான இந்தக்கரு தான் இந்தக் கதையின் கரு அம்மா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அம்மா.

      நீக்கு
    2. நீங்கள் சொன்ன இந்த அருமையான கருதான்
      என் கதையின் கருவும் அம்மா.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அம்மா.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அருள் ஐயா.

      நீக்கு