திங்கள், 3 செப்டம்பர், 2012

திரையிசைப் பாடலில் “அந்தாதி“!!!





வணக்கம்!!

    நான் போன பதிவில் எழுதிய “அன்னையின் அன்பு“ என்ற அந்தாதியை நிறைய பேர் படித்தீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

   அந்தாதியின் மிகச்சுருக்க விளக்கம் என்னவென்றால்
எந்த ஒரு பாடலை எழுதினாலும் அந்தப் பாடலின் கடைசி வரியையோ அல்லது வார்த்தையோ அடுத்த பாடலுக்கு முதல் வரியாகவோ முதல் வார்த்தையாகவோ வைத்துப் பாடலை அமைக்க வேண்டும்.
 
அது மட்டுமல்லாமல்
ஒவ்வோர் பாடலின் தொடக்கத்தில் உள்ள வரியையோ அல்லது தொடக்கச் சொல்லோ பாடலின் கடைசி வரியாகவோ கடைசி சொல்லாகவோ கொண்டு முடிக்க வேண்டும்.


இந்த இலக்கணத்தில் பத்து பாடல்களை அமைத்தால் அதை “பதிற்றந்தாதி“ என்றும் நூறு பாடல் அமைத்தால் அதை “நூற்றந்தாதிஎன்றும் பெயர் பெரும்.

இந்த அந்தாதியை எந்த இலக்கண பாடலுடனும் எழுதலாம்.

இதற்கு மிகவும் எளிய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் மூன்று முடிச்சிபடத்தில் வரும் “வசந்த கால நதிகளிலே... என்ற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலைக் குறிப்பிடலாம்.

பாடலைக் கீழே எழுதியிருக்கிறேன். படித்துப் பார்க்கும் பொழுது அதில் அமைந்த “அந்தாதி தொடை“ அழகாக விளங்கும்.
நன்றி.


வசந்த கால நதிகளிலே
வைர மணி நீரலைகள்

நீரலைகள் நீந்தலிலே
நெஞ்சிரெண்டில் நினைவலைகள்!

நினைவலைகள் தொடர்ந்துவந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்!

கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள்!

மலர்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்!

பஞ்சணையில் பள்ளிகொண்டால்
மடியிரண்டும் தலையணைகள்!

தலையணையில் முகம்புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்!

புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மனவினைகள்!!

மனவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்!!

விதிவகைகள் முடிவுசெய்யும்
வசந்தகால நீரலைகள்!!


நன்றி
அருணாசெல்வம்.

(நட்புறவுகளே!! எனக்குத் தெரிந்த விளக்கத்தை மிகமிகச் சுறுக்கமாக எழுதியிருக்கிறேன்.)


25 கருத்துகள்:

  1. அன்பரே பள்ளிக்கூட தமிழ் வகுப்பை கிளறி விட்டீர்கள் அந்தாதி விளக்கம் எளிமை அருமை

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு விளக்கம் உண்மைச் சொன்னால் இது பற்றி நான் இப்போது தான் அறிகிறேன்...

    கண்ணதாசன் வரிகள் அற்புதம்

    பதிலளிநீக்கு
  3. எளிமையான விளக்கம்! புரியும்படி இருந்தது!

    எனது களிமண் மூளையில் கப்பென்று பற்றிக்கொள்ளும் வகையில் அருமையான சினிமா பாடல் ஒன்றை உதாரனப்படுத்தியது சிறப்பு!

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பிடித்த, ரசித்த பாட்டு... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல் தோழரே!

    இட்லி சுவைக்க என் வலைக்கு வாருங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ.
      நான் இட்லியைச் சுட்டதும் சாப்பிட்டு விட்டேன்.

      நீக்கு
  6. அருமையான பாடலை உதாரணமாகக் கொடுத்து
    அந்தாதியை விளக்கியவிதம் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரமணி ஐயா.

      இப்படி நமக்குத் தெரிந்த உதாரணம் கொடுத்தால் உடனே நமக்கு நன்றாக மூளையில் பதிந்துவிடும் என்பதற்காகக் கொடுத்தேன்.
      நன்றி ஐயா.

      நீக்கு
  7. திரைப்பட பாடலை வைத்து எளிமையா விளக்கி விட்டீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முரளீதரன் ஐயா.

      மற்ற அந்தாதி வகைகளைக் காட்டி உதாரணம் கொடுத்தால் புரிந்து கொள்ளச் சற்று சிரமம்பட வேண்டியிருக்கும்.

      அதனால் மிகவும் எளிமையாகவும் மிகமிக சுறுக்கமாகவும் எழுதியுள்ளேன்.
      நன்றி ஐயா.

      நீக்கு


  8. நீண்ட இடைவெளி!வெளிநாட்டுப் பயணம் பதிவர் விழா, எனப் பல்
    வகை காரணங்களால் வரயிலவில்லை!
    அந்தாதியும் விளக்கமும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயா...
      நீங்கள் வரவில்லை என்றாலும் உங்களைப் பற்றிய நல்ல நல்ல செய்திகளை வலைப்பதிவர்கள் இட்டுக்கொண்டே இருந்ததால் நீங்கள் தொடர்பிலேயே இருந்தது போலவே இருந்தது.

      உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  9. அருமையான படப்பாடலைக் கொண்டு அழகான அந்தாதி விளக்கம்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    பதிலளிநீக்கு
  10. நானும் அந்தாதி முயற்சித்தேன் வரவில்லை அருணா.உங்கள் விளக்கம் உதவி சேய்யுமோ...பார்க்கலாம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...

      முயற்சி செய்யுங்கள். நம்மால் முடியாதது எதுவும் இல்லை.

      நன்றி தோழி.

      நீக்கு
  11. அந்தாதிக்கு அருமையான சுருக்கமான விளக்கம் இவ்வாறு சொல்லிவிட எவரால் முடியும் வாழ்த்துக்கள் நலம்பெற்று தமிழ் வளர்க்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நட்பே.

      நீக்கு
  12. சிறந்த விளக்கம் - அதற்கு
    எடுத்துக்காட்டாகத் தந்த
    கண்ணதாசன் பாட்டு - அதனை
    மேலும்
    விளங்கிக்கொள்ள உதவுகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  13. மிகவும் அருமையான விளக்கம் அந்தாதி யின் பொருள் உணர்த்தும் கண்ணதாசனின்அழகானபடப்பாடல்வசந்தகாலநதியினிலே வைரமணி நீரலைகள்

    பதிலளிநீக்கு