ஞாயிறு, 24 ஜூன், 2012

பாப்பா பாட்டு!!





சிட்டுக் குருவி
   சிறகை விரித்துச்
      சீராய் வந்துவிடு!
பட்டுப் பாப்பா
   பல்லைக் காட்ட
     பாக்கள் பாடிவிடு!
கட்டும் பாட்டில்
   கன்னல் தமிழைக்
     கருத்தாய்ச் சேர்த்துவிடு!       
சொட்டுத் தேனாய்ச்
   சொற்கள் இனிக்கச்
      சொக்க வைத்துவிடு!

வட்ட நிலவின்
   வண்ணக் கதையை
      வகையாய்ச் சொல்லிவிடு!
பட்டுப் புழுவின்
   பண்பு வாழ்வைப்
      பாட்டில் கலந்துவிடு1
எட்டுத் திக்கும்
   ஏற்கும் தமிழை
      என்றும் நீகலந்தால்
மெட்டு போட்டே
   மேலும் பாப்பா
      மேன்மை கவிபடைப்பாள்! 


15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க முனைவர் ஐயா.

      நீக்கு
  2. சிட்டுக் குருவி
    சிறகை விரித்துச்
    சீராய் வந்துவிடு!//

    வந்துட்டோமில்ல....:) என்னப்பத்தின பாட்டு இல்லியே...:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி... உங்களைப் பற்றிய பாட்டை அடுத்த வாரம் எழுதுகிறேன். இந்த வாரம் வெளியுர் செல்கிறேன். வந்ததும் மறக்காமல் கண்டிப்பாக எழுதுகிறேன்.

      அன்புடன் அருணாசெல்வம்

      நீக்கு
  3. பாப்பா பாட்டு சூப்பர் தொடருங்கள்.....உங்க பாட்ட என் அக்க பசங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன் ஓ K

    பதிலளிநீக்கு
  4. பள்ளிப்புத்தகத்தில் வைத்தால் குழந்தைகளுக்குப் பாட்டோடு தமிழும் உவகையாகும். அழகானப் பாட்டு. அருமை அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
  5. பாப்பா பாட்டு அருமை...ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பாட்டு. சந்தம் உள்ள பாட்டு. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  7. பாடிப் பாத்தேன்பா அருணா. ராகம் தவறாம சூப்பராவே இருக்கு. (என்னை மாதிரி) பாப்பாங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் இந்தப் பாட்டு.

    பதிலளிநீக்கு