வியாழன், 28 ஆகஸ்ட், 2014

விநாயக வெண்பா!!



மங்கள வேளையில் மஞ்சள் பொடியிலும்
தங்கமாய் மின்னும் தலைவனே! - எங்களின்
சங்கடம் போக்கிநல் சக்தி தருபவனே!
இங்கென் எழுத்தில் இரு!

முக்கண் முதல்வனின் மூத்தவனே! முத்தமிழைத்
தக்கண் அளித்துத் தருபவனே! – சிக்கலாய்
எக்கண் இருக்கும் எதிர்ப்பினை வந்துடனே
இக்கண் இருந்தே எடு!

சித்திபுத்தி கொண்ட சிரத்தவனே! எங்களின்
உத்திசக்தி எல்லாம் உனதாகும்! – சித்தத்தில்
தத்தியோடும் எண்ணத்தைத் தட்டியடக்கி என்றும்நல்
புத்தியோடு வாழ புகட்டு!

பானை வயிற்றிடையில் பாம்பை அணிந்தவனே!
யானை முகத்தவனே! என்றென்றும் – வானைப்போல்
தேனைப்போல் உள்ளம் திளைக்க உயர்ந்தியென்
ஊனையும் காப்பாய் உடன்!

தும்பிக்கை தூயவனே! தொந்தி வயிற்றோனே!
அம்பிகை மைந்தனே! ஐம்பூதம் – எம்பிஎம்பி
வம்பாய்க் குதித்தாலும் வந்தருளும் உன்துணையோ
நம்பிக்கை தந்திடும் நன்கு!

எலிமேல் எழுந்தருளி இன்னளைப் போக்கும்
கலியுகத் தெய்வமே காப்பாய்! – மலிவாய்ப்
புலிபோல் நடந்திடும் போலி மனத்தைப்
பொலிவாய் அழித்துப் போக்கு!

உண்டை கொழுக்கட்டை யோடு கறுநிற
கொண்டை கடலையும் கொள்பவனே! – அண்டத்தில்
உண்ணும்தின் பண்டமும் ஊனுடலைக் காத்திடும்
தண்ணீரும் என்றென்றும் தா!

கந்த பெருமானின் காதலைக் காத்திட
முந்தி உதவிய மூத்தவனே! – அந்தமில்லா
இந்த உலகில் இயல்பாய் வளருமன்பைச்
சொந்தமாய்ச் சேர்த்தால் சுகம்!

அன்னையுடன் தந்தை அகிலமெனச் சுற்றிவந்து
நன்மையிது என்று நவின்றவனே! – பொன்னுலகில்
அன்புடன் பெற்றெடுத்து ஆக்கியரைத் தன்னுடனே
என்றென்றும் வைத்தல் இனிது!

விண்ணளைந்த கோளினை வீழ்த்தி விளையாடி
மண்ணளக்கும் மக்களைக் காப்பவனே! – பெண்நானோ
கண்ணகல உன்னருங் காட்சியால் பாடிவந்தால்
பண்ணகலும் உன்பெருமை பாட்டு!

அருணா செல்வம்

29.08.2014

32 கருத்துகள்:

  1. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

    பதிலளிநீக்கு
  2. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

    பதிலளிநீக்கு
  3. கொழக்கட்டை செய்து அனுப்பிவிங்கள்தானே? என் மனைவிகிட்ட செஞ்சு கேட்க ஆசை ஆனா நான் கேட்டவுடனே பூரிக்கட்டையால் என் உடம்பிலே அடிச்சே பண்ணிவிடுவாலோ என்று பயமா இருக்கு ஹும்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கென்ன...? எல்லாம் ஆறியதும் மாமியிடம் சொல்லி திருப்பித் தர சொல்லுங்கள்....))

      நீக்கு
  4. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. விநாயகரைப் பற்றிய வெண்பா நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  7. கவிதையும் விநாயகரைப் போலவே மின்னுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா....?

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  8. வல்ல விநாயகர் வார்புகழ் வெண்பாக்கள்!
    வெல்லமாய்த் தந்தீர் விருந்து!

    அற்புத விநாயகர்மேல் பாடிய அருமையான வெண்பாக்கள்!
    மிகச் சிறப்பு!
    விநாயகன் அருள் அனைவருக்கும் கிடைத்திட
    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. இன்பத் தேன் சுரக்கும் இனிய நற்பாவால்
    அன்புற்றது உள்ளம் மகிழ்ந்து !
    வாழ்த்துக்கள் என் தோழியே .
    த .ம .6

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    பாடிய வெண்பாக்கள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வு க்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  11. அதி சிறந்த விநாயகரை பாடி
    மதிமயங்க செய்தாய் மகிழ்வுகள்கூடி!

    வினையாக சதுர்த்தி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வினையாக.....???...)))

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  13. அருமை! விநாயகர் எங்கள் அகத்திற்கு தாமதமாக வந்ததால்....தாமதமான வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் அகத்தில் எப்பொழுதுமே விநாயகரைக் குடி இருக்க வைத்துவிட்டால் போதுமே...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  14. சிறந்த பாவரிகள்

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு

  15. வணக்கம்!

    செம்மைத் தமிழ்ஊட்டி! சிந்தனைச் சீரூட்டி!
    எம்மை இனிதே இயக்கிடுக! - இம்மண்ணின்
    நம்பிக்கை நாதனே! நல்ல கணபதியே!
    தும்பிக்கை யால்எனைத் துாக்கு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் விநாயக துதிக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  16. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு