செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

படித்ததில் சிரித்தது!! (நகைச்சுவை)


1.
ஒருவன் - “புது செருப்பு ஏன் கடிக்குது?“
மற்றொருவன் – “இதுக்கு முன்னாடி யாரும் அதைக் காலில் போட்டு மிதிச்சிருக்க மாட்டார்கள்.... அதுதான் கோபம் வந்து கடிக்குது.“

2.
நோயாளி – “மசால்வடை, மைசூர் போண்டா எல்லாம் தின்னக்கூடாதுன்னு என்னைச் சொன்னது உடல் நலத்துக்காகத் தானே டாக்டர்?“
டாக்டர் – “ஆமாம். இதுல என்ன சந்தேகம்?“
நோயாளி – “பொறாமையில சொல்லலியே?!“

3.
டாக்டர் – “உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சி“
நோயாளி – “அப்படியா? ஆச்சரியமா இருக்கிறது. நான் என் கிட்னியைப் படிக்க வைக்கவே இல்லையே டாக்டர். அப்புறம் எப்படி அது பெயில் ஆகும்?“

4.
பையன் – “எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீர்களே.....“
பெரியவர் – “அப்படியா? அவர் பெரிய வயலினிஸ்ட்டா?“
பையன் – “இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.“

5.
ஒருவர் – “தலைவரை ஏன் மேடையில வச்சி எல்லோரும் இப்படி அடிக்கிறாங்க?“
இன்னொருவர் – “ஓட்டப்பந்தையத்தில முதலாவதா வந்த ஒரு பொண்ணுக்கு “ஓடுகாலி“ன்னு பட்டம் கொடுத்திட்டாராம்“

6.
கேள்வி – “நெப்போலியனுக்கு பயம்ன்னா என்னன்னு தெரியாது.... ஏன்?“
பதில் – “ஏன்னா.... நெப்போலியனுக்குத் தமிழ் தெரியாது“

7.
வந்தவர் – “என் பொண்டாட்டி சமையலை வாயில் வைக்கவே முடியாது சார். அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும் சார்.“
ஊழியர் – “யோவ். பாங்குல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்லுற?“
வந்தவர் – “நம்ம கஷ்டத்தை சொன்னால் தான் இங்க லோன் கிடைக்கும்ன்னு சொன்னார்கள்“

8.
வந்தவர் – “ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்...“
டாக்டர் – “சரி. அதுக்கு ஏன் ஆபிரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க?“
வந்தவர் – “ஆவி பிடிக்கலாம்ன்னு தான்!“

9.
ஒருவன் – “நடிகருக்கும் மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?“
மற்றொருவன் – “இரண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டருல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டு இருப்பார்கள்“

10.
டாக்டர் – நீங்க உடனடியா மீன், ஆடு கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்“
நோயாளி – “அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்....?“

படித்ததில் சிரித்தது

அருணா செல்வம்

17 கருத்துகள்:

  1. அனைத்தும் சூப்பர் சகோ! வாழ்த்துக்கள் ...! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  2. ரசிததேன்
    சிரித்தேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. 4, 5, 6, 7, 10 ஆகியவை குபீரென்று சிரிக்க வைத்தன அருணா. சூப்பர் தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குபீரென்று சிரித்தீர்களா..... எப்படிங்க இப்படி முடியும்.....???!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கணேஷ் ஐயா.

      நீக்கு
  4. சிறந்த நகைச்சுவை வெளியீடு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  6. அனைத்துமே சிரி(ற)ப்பு தான்.

    பதிலளிநீக்கு
  7. நகைச்சுவைகள் ,என்னை புன்னகை பூக்க வைத்தன!
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... வாய்விட்டு சிரிக்க வைக்கலையா.... அது தானே.... திருப்பதிக்கே லட்டு கொடுக்க நான் நினைக்கலாமா....?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  8. எனக்குத் தொப்பை இல்லை. வயிறு குலுங்காமல் சிரித்தேன்.

    படஜோக்கும் சிரிக்க வைத்தது. இது உங்கள் கற்பனை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ..... இதெல்லாம் என் கற்பனை இல்லைங்க. எல்லாம் “சுட்டது“ தான்.

      வயிறு குலுங்காமல் சிரிக்க முடியுமா...?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நம்பி ஐயா.

      நீக்கு
  9. சிரித்தேன். ஆனால் வயிறு குலுங்கவில்லை! நாங்கல்லாம் ரொம்ப "ஃபிட்"டாம். :))) எவ்ளோ சிரித்தாலும் குலுங்குமளவுக்கு வயிறு இல்லை எங்களுக்கு! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் உங்களின் யுன்னி ஊர்ஸ் (கரடி) படத்தைப் பார்த்துவிட்டு பெரிய தொப்பையுடனே கற்பனை செய்து வைத்திருந்ததால்.... வயிறு குலுங்க குலுங்க சிரித்திருப்பீர்கள் என்று எண்ணி விட்டேன்....(((

      தவிர எவ்வளவு தான் வயிற்றைப் ஃபிட்டாக வைத்திருந்தாலும் சிரிக்கும் பொழுது கொஞ்சம் “லூசா(க்)கி“ விடுவது தான் நல்லது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி வருண் சார்.

      நீக்கு