1. மேலே இடிவிழுந்த பிறகு, இடி விழும் பலனைப்
பஞ்சாங்கத்தில் பார்க்க வேண்டியதில்லை.
2. எப்போதும் கண்களைத் திறந்து கொண்டே இரு. வாயை
அல்ல.
3. அழகில்லா மனைவியும், அறிவில்லா வேலைக்காரியும்
விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்.
4. ஒருவன் பதவியில் இல்லாத போது கண்டிக்கிற அந்தக்
குற்றங்களைப் பதவியில் அமர்ந்தவுடன் அவனே செய்கிறான்.
5. ஒருவனை நண்பனாகக் கொள்வதில் நிதானமாக இருக்க
வேண்டும். ஆனால் நட்புக் கொண்ட பின் அதில் உறுதியாகவும் நிலையாகவும் இருக்க
வேண்டும்.
6. சாட்டையை இழந்து விட்டால் அதில் தங்கப்பிடி இருந்தது
என்பான் மனிதன்.
7. ஒரு குடும்பத்தைப் பாழாக்குவது திறமையற்ற பிள்ளைகள்
அல்ல. கெட்டிக்கார பிள்ளைகளே! ( இது சரியா??? )
8. அமைதியாக எழுபவன் லாபத்துடன் தூங்குவான்.
9. தாகம் ஏற்படுவதற்கு முன்பாகவே கிணற்றைத் தோண்ட
வேண்டும்.
10. மனிதர்கள் அன்பாக உள்ள இடத்தில் தண்ணீர் கூட
இனிப்பாக இருக்கும்.
11. மிக முக்கியமான விஷயங்களுள் முதன்மையானது, நம்முடைய
மன சாட்சியை நாம் ஏமாற்றாமல் இருப்பது தான்.
12. மற்றவர்களின் வடு நமக்கு பாடமாக அமைய வேண்டும்.
13. உன்னுடைய விரோதிக்கு நீ அடிக்கடி கோபத்தை
மூட்டினால் அவனை விட அது உன்னையே அதிகம் அழிக்கும்.
14. புன்சிரிப்பு செய்யவே இயலாதவன், புதிய கடையைத்
திறக்க தகுதியற்றவன்.
15. உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாள் சாப்பாடும்
விருந்து தான்.
அருணா செல்வம்
படித்ததில் பிடித்தது.
வணக்கம்
பதிலளிநீக்குஅறியாத பழ மொழிகள் நன்றாக சொல்லியுள்ளீர்கள பகிர்வுக்கு வாழ்த்துக்ள
த.ம2வதுவாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரூபன்.
பயன்தரு பழமொழிகள் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
ஆறாவது பாய்ண்ட் உண்மைதான். தொலைந்தபின்தான் அந்தப் பொருளின் அருமை தெரியும் என்பார்கள். நம் மக்கள் அதைக் கொஞ்சம் கூட்டியே சொல்வார்கள்!
பதிலளிநீக்கு7 வது பாய்ண்ட் சாத்தியம் அதிகம்!
7 வது பாய்ண்ட் சாத்தியம் அதிகமா.....? (நான் இன்னும் புரிந்து கொள்ளாத முண்டமாகத் தான் இருக்கிறேன்)
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
நல்ல பழமொழிகள்.பழமொழிகள் யாவும் வாழ்வின் வடுக்கள்/
பதிலளிநீக்குஉண்மை தான். அனுபவத்தின் வடுக்கள்!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி விமலன் ஐயா.
ஒருவன் பதவியில் இல்லாத போது கண்டிக்கிற அந்தக் குற்றங்களைப் பதவியில் அமர்ந்தவுடன் அவனே செய்கிறான்.
பதிலளிநீக்குஎனக்குப் பிடித்தது! காரணம்! இன்றைய நடைமுறை இது தானே!
7 வது சாத்தியமாகாது என்பதே! ஆனால், யாராவது வேறு விளக்கம் அதற்கு இருந்தால் தரலாம்.....மற்ற பழ மொழிகள் பலதும் நம் தமிழிலும் வேறு வார்த்தைகளில் உள்ளது போல தோன்றுகின்றது.....முயற்சி செய்து பார்க்கிறோம்....
பதிலளிநீக்கு4 மிகவும் யதார்த்தம் அது போல 12ம்......நல்ல பகிர்வு!
சகோதரி!
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை, திரு.துளசீதரன் சொல்வதுபோல் தமிழிலும் வேறு மொழியிலும் இதே கருத்தில் இருக்க வாய்ப்புண்டு.
7 ஆவது சாத்தியமே! இங்கு குடும்பமென்பதில் உறவை பற்றியே குறிப்பிடுகிறது. கெட்டிக்கார (கற்ற) பிள்ளைகள் உறவைப் பேணுவதில்லை. அக்கறை கொள்வதுமில்லை. கெட்டிக்காற (கற்ற) நகர்ப்புற குடும்பங்களில் கிராமங்கள் போல் வலுவான குடும்ப உறவில்லை. இதை ஒரு நீயா நானாவில் மிகத் தெளிவாகப் பேசினார்கள்.