வியாழன், 14 ஆகஸ்ட், 2014

பொறுப்பு!! (நிமிடக்கதை)


   “ஏங்க.... உங்க தம்பிக்கு கல்யாணம் வச்சிருக்கிற இந்த நேரத்துல எதுக்கு உங்க அம்மாவோட நகைகளையெல்லாம் வித்து இவ்வளவு அவசரமா அப்பாட்மெண்டு வாங்குகிறார் உங்க அப்பா....?“
   குமுதா தன் மாமானாரிடம் நேருக்கு நேராக கேட்க முடியாத கேள்வியைத் தன் கணவனிடம் கேட்டாள்.
   “இது என்னம்மா கேள்வி.... நம்ம வீட்ல ரெண்டு ரூம்தான். ஒன்னுல நாம ரெண்டு குழந்தைங்களோட இருக்கிறோம். இன்னொன்னுல அப்பா அம்மா இருக்கிறாங்க. புதுசா கல்யாணம் பண்ணிக்கிற தம்பியும் அவன் பொண்டாட்டியும் எங்க தங்குவாங்க...? அதனால தான் அப்பா அவ்வளவு அவசரமா இந்த அப்பாட்மெண்டைத் தம்பிக்காக வாங்குகிறார்ன்னு நினைக்கிறேன்“ என்றான்.
   “வாங்கலாம் தாங்க. அதுக்கு இவ்வளவு அவசரமா நகைகளை எல்லாம் வித்து வாங்கனுமா....? கொஞ்ச காலத்துக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் இல்ல...“ என்றாள் குமுதா.
   “என்ன குமுதா பேசுற? தம்பி என்ன என்னை மாதிரி அப்பாவோட மளிகை கடையிலா வேலை செய்யிறான்...? நல்ல வேலையில கைநிறைய சம்பாதிக்கிறான்.  தவிர வர்ற பொண்ணு நல்லா படிச்சவ. கொஞ்சம் வசதியான குடும்பத்துல இருந்து வருது. அதுக்கு இந்த வீடு சரிபடுமா? அப்பா எல்லாத்தையும் பொறுப்பா யோசிச்சி தான் முடிவு பண்ணுவார். பேசாம தூங்கு...“ என்று சொல்லிவிட்டு அவன் தூங்கிப் போனான்.
   அவன் சொல்வதும் உண்மைதானே.... மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து அதிக படிப்பும் இல்லாமல் இந்த வீட்டில் வாழ வந்த தனக்கு இதையெல்லாம் கேட்கக்கூட தகுதி இருக்கிறதா... என்று எண்ணிய படி அவளும் உறங்கிப் போனாள்.

   “குமுதா.... நான் பத்து மணிக்கு வீட்டுக்கு வர்றேன். நீ கிளம்பி ரெடியா இரு“ என்றார் மாமா காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டுக்கொண்டே.
   “எங்க மாமா போறோம்....?“ குமுதா கேட்டாள்.
   “ரிஜிஸ்டர் ஆபிசுக்குமா. இப்போ கடைக்குப் பக்கத்திலேயே ஒரு அப்பாட்மெண்ட் வாங்க இருக்கிறேன் இல்லையா... அதை உன் பேருக்குத் தான் ரிஜிஸ்டர் பண்ணப் போறேன். நீ கிளம்பி இரு. நான் வந்து அழைச்சிக்கினு போறேன்“ என்று சொல்லிபடி கையலம்பினார்.
   “என் பேருக்கா.... அந்த அப்பாட்மெண்டை உங்க சின்ன பிள்ளைக்கு வாங்கிறதாக தானே அவர் சொன்னார்“ சற்றுத் தயங்கியே கேட்டாள் குமுதா.
   “இல்லைம்மா. இந்த அப்பாடமெண்டை உங்களுக்காகத் தான் வாங்கறேன்“ என்றார்.
   மனம் சட்டென்று மகிழ்ந்தாலும், சற்று மன உறுத்தலுடன்... “எதுக்காக மாமா இவ்வளவு அவசரம்? கல்யாணம் முடிஞ்ச பிறகு கொஞ்சம் பொறுமையா பணம் சேர்ந்த பிறகு வாங்கலாமே. இவ்வளவு அவசரமா நகையெல்லாம் வித்து வாங்கனுமா...?“ கொஞ்சம் கவலையுடன் கேட்டாள்.
   “அவசம் தான்மா. நீ வந்ததிலிருந்து எங்களோட சேர்ந்து இருந்து நம்ம குடும்பத்தோட பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சிகிட்ட. உனக்கு குடும்பத்தை எப்படி அனுசரிச்சி போகனும் என்ற அனுபவம் வந்திடுச்சி. இனி நீங்க தனியா இருந்து குடும்ப பொறுப்புகளைச் சுமக்கனும். அது தான் நல்லது. இனிமே புதுசா வர்ற பொண்ணு உன் இடத்துல இருக்கட்டும். அவளும் இந்த குடும்பத்தோட பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சிகிட்டும். கொஞ்ச காலம் கழிச்சி அவங்க தனியா போறதுன்னா போகட்டும்.
   அது மட்டுமில்லாமல்  நீ இங்க இருந்தா... எப்போதும் போல நீயே எல்லா வேலையையும் செய்வ. சில நேரங்களில் அதுவே ஈகோவா மாறும். அதுவும் சரிபடாது. நீ இங்கே இருந்தா புதுசா வர்ற பொண்ணுக்குக் குடும்ப பொறுப்பு வராது. அதனால தான் இவ்வளவு அவசரமா இந்த வீட்டை வாங்குறேன். பத்து மணிக்கு கிளம்பி இரு. கல்யாணத்திற்கு முன்பு அடுத்த வாரத்திலேயே புதுமனை புகுவிழா வச்சிடலாம்....“ என்று சொல்லியபடியே.... கிளம்பிச் சென்றார்.
   தன் அப்பா எந்த முடிவு எடுத்தாலும் பொறுப்பாக யோசித்தே நல்ல முடிவாக எடுப்பார் என்று தன் கணவன் சொன்னதின் உண்மை புரிந்து மகிழ்ந்தாள் குமுதா.

அருணா செல்வம்

14.08.2014

24 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

.அனுபவத்தில் எடுத்த அருமையான முடிவு
சொல்லிச் சென்ற விதம் வழக்கம்போல் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
பெற்றோர்கள் பிள்ளையை பெற்றால் போதுமா? பிள்ளைகளின் மனசு சந்தோசப்படும் வகையில் நடந்தால்தான் வாழ்க்கையும் நன்றாக இருக்கும் கதை நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றித.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். சொன்னது…

இப்படி மாமனார் அமைய கொடுத்து வைத்திருக்கணும்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அனுபவத்திற்கு ஈடு இணை ஏது
அருமையான கதை
தம 4

வருண் சொன்னது…

மளிகைக்கடையில் வேலை செய்யும் மகனை கவனமாக கவனித்துக்கொள்ளும் பொறுப்புள்ள தந்தை!
அண்ணன் தம்பி உறவுகள் அவர்கள் திருமணத்திற்குப் பிறகு பலவீனப்படும் என்று அனுபவ்த்தில் அறிந்தவர்! :)

கதை நல்லாயிருக்குங்க, அருணா! :)

kingraj சொன்னது…

பொறுப்பான அப்பா. நல்ல சிறுகதை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பொறுப்புள்ள, தீர்க்கமான சிந்தனையுடன் நல்ல மாமனார்! சகோதரி நீங்கள் சொல்லியிருக்கும் நடையும் அழகு!

அம்பாளடியாள் சொன்னது…

சிறப்பான இக் கதைக்கு வாழ்த்துக்கள் என் தோழியே !

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல கதை...
வாழ்த்துக்கள் சகோதரி.

Yarlpavanan சொன்னது…

சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

சேக்காளி சொன்னது…

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஆனால் எல்லா பெற்றோரும் இப்படி உணருவதில்லையே....

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மை தான் ஸ்ரீராம் ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

என்னங்க ஆச்சு.....?
ஏதேதோ கேள்வியெல்லாம் கேட்பீர்கள் என்று பயந்து இருந்தேன்....
நல்ல நட்பு மறியாதையை எதிர்பார்க்காது!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வருண் சார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ராஜா ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

வாங்க தோழி.
உடல்நலம் தேறிவிட்டதா....? கால்வலி பரவாயில்லையா?

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஓ.கே.

வருண் சொன்னது…

அடடா இதென்ன வம்பாப்போச்சு..நல்லாயிருக்குங்கனு இதயத்திலிருந்து சொல்ல விடமாட்டீங்களா!!!!

உடனே, "இதயமா? உங்களுக்கா?" னு சிரிக்காதீங்க, அருணா! :)))

ezhil சொன்னது…

அட இது ரொம்ப நல்லாயிருக்கே.. வாழ்த்துக்கள் அருணா...