ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

சமாதானமும் குழப்பமும்!!


   வழக்கமாக நெற்றியில் நாமம் போட்டுக் கொள்கிறவர்கள் இருபுறமும் வெள்ளைக் கோடுகளும் நடுவே சிவப்புக் கோடும் போடுவதுதான் வழக்கம்.
   ஆனால் கலைவாணர் ஒரு சமயம் தன் நெற்றியில் இருபுறமும் சிவப்புக் கொடுகளும் நடுவே வெள்ளைக் கொடுமாக நாமம் போட்டிருந்தார்.
   அதைக் கண்ட அவரது நண்பர்கள் ஆச்சரியமும் அதே சமயம் குழப்பமும் அடைந்தனர்.
   “என்ன... நாமத்தை வழக்கத்திற்கு மாறாகப் போட்டிருக்கிறீர்கள்?“ என்று கேட்டார் ஒரு நண்பர்.
   “இது தான் இன்றைய இந்தியா!“ என்றார்“ கலைவாணர்.
   “புரியவில்லையே!“ என்றார் நண்பர்.
   அதற்குக் கலைவாணர், “வெள்ளை சமாதானத்தின் சின்னம். சிவப்பு டேஞ்சரஸ். முன்பெல்லாம் நம் நாட்டில் சமாதானத்தின் நடுவே குழப்பம் இருந்தது. இப்போது குழப்பத்தின் நடுவே சமாதானம் இருக்கிறது“ என்று தன் நெற்றியில் போட்டிருந்த நாமத்தைக் காட்டியபடி சொன்னார்.
   அப்போதைய குழப்ப இந்தியாவை ஒரு சாதாரண நாமத்தின் மூலம் வெளிப்படுத்திய கலைவாணரின் அறிவை எண்ணி நண்பர்கள் வியந்தனர்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

14 கருத்துகள்:

  1. திரைக்கு வெளியிலும் ரசிக்க வைத்த கலைஞர்.

    பதிலளிநீக்கு
  2. மேதைகள் என்றுமே மேதைகள்தான். கலைவாணரைப் பற்றிய ஒவ்வொரு சம்பவத்தைக் கேள்விப்படுகையிலும் வியப்பும் பிரமிப்பும்தான்.

    பதிலளிநீக்கு
  3. அறிஞர்கள் எப்போதுமே சிந்தித்துக்கொண்டுதான் இருப்பார்கள் போலும்...

    பதிலளிநீக்கு
  4. வியப்பான விடயம் தான் ரசித்தேன் ! பதிவுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  5. நாமம் நெத்தியில்தானே போடுவார்கள் ஆனால் என் மனைவியோ பூரிக்கட்டையால் என் உடம்பு முழுவதும் போடுகிறாள் அதுவும் ரெட்கலரில்தான் இருக்கிறது அவள் அதை போட்டு முடித்ததும் நான் ஒயிட் கலர் பேண்டெய்டுவை அதை சுற்றி போட்டு வருகிறேன்.. ஆளுக்கு ஆளு ஊருக்கு ஊரு இப்படி நாமம் போடுவதில் எவ்வளவுதான் வித்தியாசங்கள்..

    ஆமாம் உங்க வீட்டில் எப்படி நாமம் போடுவீங்க அதில் யாரு அதிகம் நாமம் போடுபவர்..

    பதிலளிநீக்கு
  6. நான் அறிந்திடாத புதிய விசயம் நன்றி சகோதரி.
    எனதுபதிவு சுட்டபழம். காண்க...

    பதிலளிநீக்கு
  7. கலைவாணர் என் எஸ் கே, கொஞ்சம் வேற பின்புலத்தில் இருந்து வருபவர். அதனால் ட்ரடிஷ்னலா வேற மாதிரி நாமம் போட்டாரோ என்னவோ! :) மத்தபடி இந்த நாமம் பத்தி எல்லாம் எனக்குத் தெரியாதுங்க. என்னுடிய அம்மா ஒரு குங்குமம் (எங்கே வாங்கினாங்கனு தெரியவைல்லை) நெத்தியில் வைக்கும்போது அது நெத்தியிலே ஏதோ அல்ர்ஜிக் ரியாக்சனாயிடுச்சு. என்ன கெமிக்கலை மிக்ஸ் பண்ணினாங்கனு தெரியலை. அப்புறம் வேற ப்ராண்ட் மாத்திட்டாங்க. நாமம் அதுபோல் நெத்தியை பாழ் செய்யாமல் ஹார்ம்லெஸ் கெமிக்கல்களில் செய்தால் எல்லாருடைய நெத்தியும் தப்பும். :))) அவன் அவன் பிரச்சினை அவன் அவனுக்கு. என் பிரச்சினையை பார்தீங்களா, அருணா? :)))

    பதிலளிநீக்கு
  8. கலைவாணர் பற்றிய சுவையான செய்தி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நாமம் மூலம் ஒரு பெரிய செய்தியைச் சொல்லி விட்டாரே....

    பதிலளிநீக்கு
  9. கலைவாணர் என்.எஸ்.கே எப்போதுமே வித்தியாசமானவர். நந்தனாரை கிந்தனாராக மாற்றியவர். எல்லோரிட்மும் உரிமையாக பேசுபவர். – எல்லாம் உங்களைப் போல படித்து தெரிந்து கொண்டதுதான். பகிர்வுக்கு நன்றி!
    த.ம.7

    பதிலளிநீக்கு
  10. சூப்பர் சுவையான செய்திங்க.....கலைவாணர் பற்றி....என்ன ஒரு செய்திப்பா......நாமம் போடறவங்க அப்படின்னு சொல்லுவாங்க..கேலியாக....ஆனா அந்த நாமத்துல இப்படி ஒரு செய்தி இருக்கு பாருங்க...டைம்லி!

    பதிலளிநீக்கு
  11. கலைவாணரின் அறிவு பற்றிய
    சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  12. சுட்ட பழம் என்றாலும் இங்கு இட்ட முறை நன்று!

    பதிலளிநீக்கு
  13. சென்ற ஆண்டு நானும் ஐரோப்பிய சுற்றுப் பயணம் போனேன் !இலண்டன் தொடங்கி சுவிஸ் வரைமட்டுமே பயணம் பற்றி எழுதினேன் .மேலும் வாடிகன் நகர் வரை சென்று திரும்பியதை எழுதவில்லை . சீன சுற்றுப் பயணம் முடித்து பிறகு இதனை எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு