புதன், 20 நவம்பர், 2013

“சும்மா“ ஒரு ட்ரீட்!!

நட்புறவுகளுக்கு வணக்கம்.










   நேற்று எனக்குக் கிடைத்த அங்கீகாரத்தை வலையில் வெளியிட்டு இருந்தேன். அதை நான் பெரியதாக எடுத்துக் கொள்ளாததால் பதிவின் கீழே ஒரு செய்தியாக எழுதியிருந்தேன்.
   அப்படிக் கூடாது. அந்த செய்தியை முன் வைக்க வேண்டும் என்று சில நண்பர்கள் சொன்னதால் அதைத் திரும்பவும் மாற்றி வெளியிட்டேன்.
   வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. வெறும் நன்றி மட்டும் போதாது. எங்களுக்கு “ட்ரீட்“ வேண்டும் என்று கேட்ட (அடம்பிடித்த “மதுரைத் தமிழன்“) நட்புறவுகளுக்காக (இங்கே பிரான்சில் எனக்குப் பிடித்தவைகளை) இதை வெளியிட்டேன்.
   இதன் செய்முறைகளைக் கேட்பவர்களுக்கும் விளக்கிச்சொல்ல தயாராக உள்ளேன். (எப்படி இணையத்திலிருந்து சுடுவது? என்பதைத் தான்)

அன்புடன்

அருணா செல்வம்.

28 கருத்துகள்:

  1. வணக்கம்
    அருமையான உணவுகள்.....வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மேடம் ... இந்த ட்ரீட் வேண்டாம் எங்களுக்கு நிஜ விருந்து வேண்டும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி அரசன்.

      கீழே இரமணி ஐயா சொல்வது போல்.... பதிவர் சந்திப்பில் நான் கலந்து கொள்ளும் பொழுது நிச்சயம் நிஜ விருந்து கொடுத்துவிடுகிறேன். நன்றி.

      நீக்கு
  3. இப்படி எல்லாம் ஏமாற்ற கூடாது நீங்க என் நாட்டுக்கு 6 மணிநேர பயண தூரத்தில்தான் இருக்கிறீங்க. அதனால் இங்கே போட்டது எல்லாவாற்றையும் அப்ப்டியே விட்டிற்கு எடுது வந்து தந்தா நல்லா இருக்கும் நான் வந்துருவேன் அங்க ஆனா வயசான காலத்திலே அலைய முடியாதுல்ல...அப்படியே அங்க வருவதுன்னாலும் எங்க வீட்டு சாமி வரம் கொடுக்குமா என்று தெரியவில்லை படம் 5, 6 ல் உள்ளதை எங்க வீட்டு நாய்க் கூட்டிதான் சாப்பிடும் அதையும் மறக்காமல் எடுத்து வாருங்கள் ஹீ.ஹீ இப்ப நான் வேலைக்கு போவதால் மீதி கச்சேரியை அப்புறம் வந்து வைச்சுக்கிறேன் அதுக்கு முன்னால எல்லா சுவிட்டையு இங்கே வர ஏற்பாடு செய்யுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “இப்படி எல்லாம் ஏமாற்ற கூடாது நீங்க என் நாட்டுக்கு 6 மணிநேர பயண தூரத்தில்தான் இருக்கிறீங்க. அதனால் இங்கே போட்டது எல்லாவாற்றையும் அப்ப்டியே விட்டிற்கு எடுது வந்து தந்தா நல்லா இருக்கும்“

      டிக்கெட் பணம் மட்டும் கட்டிவிடுங்கள்.

      “நான் வந்துருவேன் அங்க ஆனா வயசான காலத்திலே அலைய முடியாதுல்ல...“

      அடடா..... எழுத்து இளமையாக இருப்பதைக் கண்டு நான் ஏமார்ந்து விட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதைப் போல இந்த வயசான காலத்தில் கஷ்டப்பட வேண்டாம்.

      “அப்படியே அங்க வருவதுன்னாலும் எங்க வீட்டு சாமி வரம் கொடுக்குமா என்று தெரியவில்லை“

      வரம் கொடுக்கவில்லை என்றால்... சாமியையும் உடன் அழைத்து வாருங்கள்.

      “படம் 5, 6 ல் உள்ளதை எங்க வீட்டு நாய்க் கூட்டிதான் சாப்பிடும் அதையும் மறக்காமல் எடுத்து வாருங்கள் ஹீ.ஹீ“

      உண்மை தான். இதையெல்லாம் பல்லு போனவர்கள் சாப்பிடி முடியாது தான். இந்த விசயத்தில் உங்களை வி நாய் கூட்டி கொடுத்து வச்சது தான்.

      “இப்ப நான் வேலைக்கு போவதால் மீதி கச்சேரியை அப்புறம் வந்து வைச்சுக்கிறேன் அதுக்கு முன்னால எல்லா சுவிட்டையு இங்கே வர ஏற்பாடு செய்யுங்க“

      நிச்சயமாக. அதற்கு ஒரு வழி இருக்கிறது. நானே கொண்டு வருவதன்றால் நீங்கள் சொன்னது பொல் குறைந்தது ஆறு மணி நேரமாவது ஆகும். அதனால் உங்களின் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுகிறேன்.


      நீக்கு
    2. உன்னை ப்ர்ஸ்ட் க்ளாஸில் இலவசமா இடம் தருவாங்க..

      ///அடடா..... எழுத்து இளமையாக இருப்பதைக் கண்டு நான் ஏமார்ந்து விட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதைப் போல இந்த வயசான காலத்தில் கஷ்டப்பட வேண்டாம்.///

      நீக்கு
    3. ///டிக்கெட் பணம் மட்டும் கட்டிவிடுங்கள்.///

      டிக்கெட்டுக்கு பணமா என்னம்மா விவரம் இல்லாத புள்ளையா இருக்க? மதுரைத்தமிழன் பெயரை சொல்லுமா உன்னை ப்ர்ஸ்ட் க்ளாஸில் இலவசமா இடம் தருவாங்க..

      ///அடடா..... எழுத்து இளமையாக இருப்பதைக் கண்டு நான் ஏமார்ந்து விட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதைப் போல இந்த வயசான காலத்தில் கஷ்டப்பட வேண்டாம்.///

      நல்ல இரக்ககுணமுள்ள பெண்ணாய் இருக்கிறீங்க... நான் கஷ்டப்படவில்லை நீயே கொண்டு வந்துடும்மா

      ///சாமியையும் உடன் அழைத்து வாருங்கள்.///

      பக்தையே சாமி உன் வீட்டுக்கு வரணும்ணா நீ நிறைய பரிகாரம் எல்லாம் பண்ணனும் அப்பதான் அது உங்கள் வீட்டுக்கு வரும்.


      //இதையெல்லாம் பல்லு போனவர்கள் சாப்பிடி முடியாது தான். இந்த விசயத்தில் உங்களை வி நாய் கூட்டி கொடுத்து வச்சது தான்.///

      உங்க லாஜிக்படி நான்வெஜ் சாப்பிடாத ஆளுங்க எல்லாம் பல்லு போன தாத்தா பாட்டியா?

      நீக்கு
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள் அருணா....

    விதம் விதமாய் சாக்லேட் கேக்! எடுத்துக்கொண்டேன் - அது சரி கண்ணாடி டம்ளரில் அது என்ன பானம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “சம்பெய்ங்” - இது இல்லாமல் இங்கே எந்த விருந்தும் விழாவும் இல்லை. அதனால் தான் அதையும் சேர்த்தேன்.

      தங்களின் வாழ்த்துக்கு நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  5. பதிவர் சந்திப்பின் போது
    நிஜ டிரீட் கொடுத்துவிடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கலந்து கொண்டால் அவசியம் ட்ரீட் கொடுக்கிறேன் இரமணி ஐயா.

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. “சொந்தமே....“ ஆஹா... இந்த வார்த்தைக்கே
      உங்களை இரு கைகூப்பி வணங்குகிறேன்.
      நன்றி சீனி அண்ணா.

      நீக்கு
  7. அருணா நான் உண்ண முடியாதவை இவை! எனக்கு வேண்டாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சோ.... என் விருந்தில் நீங்கள் உண்ணாமல் செல்வதா...? இதோ உடனே வடை பாயாசத்துடன் உணவைச் “சுட்டு“ வைக்கிறேன் புலவர் ஐயா.

      நன்றி.

      நீக்கு
  8. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்.

    பதிலளிநீக்கு
  9. அட.. அட.. பார்ட்டியோ...:)
    சுட்டுச் சுட்டு அமர்க்களப்படுத்தீட்டங்களா.. அருமை!

    எனக்கு முதலாவதும், கடைசியும் பிடித்தமானதே.
    முதலாவதில் கொஞ்சமும் கடைசியாயுள்ளதை அப்படியே
    எடுத்துக்கறேன்.

    பிரான்ஸ் எனக்குப் பக்கத்தில்தான்.. ஒருநாளைக்கு அங்கு வந்து உங்க கையாலேயே விருந்து சாப்பிடத்தான் வேண்டும்.
    ஆனால் சைவம் மட்டும் எனக்கு...:)

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் வாருங்கள் தோழி.

      நான் அசைவம் மட்டுமல்ல சைவமும் நன்றாக செய்வேன்.
      அதிலும் நான் புது புது வகைகளைச் செய்து என் கணவரைத் தான் முதலில் சாப்பிடச் சொல்லுவேன்.

      பயப்படாதீர்கள். முதலில் அவருக்குக் கொடுத்து டேஸ்ட் (டெஸ்ட்) பண்ணிவிட்டு பிறகு தான் உங்களுக்குக் கொடுப்பேன். ஹீ ஹீ ஹீ

      நன்றி தோழி.



      நீக்கு
  10. வணக்கம்
    இனிப்பில் என்றும் நமக்கு இஸ்டம் இல்லையே ஆதலால் கேட்டவருக்கே கொடுங்களேன் ஹா ஹா ஹா

    நன்றிமறவாமை நன்றே
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீராளன் ஐயா.

      (பாவம். கேட்வருக்கு சுகர் இருக்கிறது போல. கமுக்கமாக இனிப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டார்.)

      நீக்கு
  11. இதுல எதுவுமே எனக்கு வாணாம்...ம்...ம்... நான் கேட்கறதை வாங்கி குடுக்கலைன்னா... அலுதுடுவேன்......! அப்புறம் என்னை அல வச்ச பாவம் வரக்கூடாதுன்னா... இங்க வரும் போது நான் கேக்குறத எல்லாம் நல்ல புள்ளையா வாங்கி குடுத்துடனும் என்ன? ஆமா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலுவாதே உஷாம்ம்ம்மா. நீ கேக்கப் போகும் குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியையும் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டேன்.
      நிச்சயம் ஊருக்கு வரும் போது கொண்டு வருகிறேன்.

      நன்றி உஷா.

      நீக்கு
  12. இப்போ தான் ட்ரீட்டா? சிக்கன் பிரியாணி இல்லையா

    பதிலளிநீக்கு