செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பாயும் மனமோ தினம்மாறும்!!





கதையாய்ப் படித்தால் போதாது!! (2)

மாயக் கண்ணன் கதையினையே
    மாற்றி வடித்தான் கம்பனவன்!
பாயும் மனமோ தினம்மாறும்
    பண்பை நன்றே புரியவைத்தான்!
தேயும் மனத்தில் பெண்ணைமட்டும்
    தேக்கி டாதே என்றுரைத்தான்!
தாயாய் சேயாய்ப் பெண்ணவளைத்
    தானே நினைக்க வேண்டுமென்றான்!

உலகம் உள்ள வரையினிலும்
    உதவும் அவன்சொல் என்றென்றும்!
கலக்கம் இன்றி வாழவைக்கும்
    கற்பே இதுதான் என்றுரைக்கும்!
நிலத்தில் பிறந்த மானிடர்கள்
    நிலையாய் வாழ வேண்டுமெனில்
விளக்கம் தந்த கவிச்சொல்லை
    விரும்பி நன்றாய்ப் படித்திடுக!

பிறந்தான் கம்பன் தமிழ்நாட்டில்
    பிறந்த பயனை அளித்திட்டான்!
இறந்தும் அவனை நினைக்கின்றோம்!
    இறவாப் புகழைத் தந்திட்டான்!
பரந்த உலகில் புகழ்காத்துப்
    பாடும் கவிதைப் போற்றுவதால்
சிறந்த புகழால் தமிழ்நாடு
    சிறப்பாய் என்றும் வாழியவே!!


அருணா செல்வம்.

(பிரான்ஸ் கம்பன் கழக கவியரங்கில் “கம்பன் பிறந்த தமிழ்நாடு“
என்ற தலைப்பில் பாடிய பாடல் இது)


19 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  2. அருணா! வணக்கம்!
    [[ மாயக் கண்ணன் கதையினையே
    மாற்றி வடித்தான் கம்பனவன்!
    பாயும் மனமோ தினம்மாறும்
    பண்பை நன்றே புரியவைத்தான்!]]

    கம்பனை உயர்த்தி சொல்ல எழுதிய கவிதை என்ற அளவில் சரி. இருந்தாலும், கம்பன் மொழிமாற்றம் செய்தது வால்மீகியையே! புகழ் வால்மீகிக்கு தானே செல்லனும்...இவ்வாறு இருக்க எப்படி கம்பனை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      வால்மீகி இராமயணம் துளசி இராமயணம் என்று பல இருந்தாலும்
      அதைத் தமிழரின் பண்பாட்டிற்குள் கொண்டுவந்து வெறும் விருத்த நடையில் மட்டும் தமிழில் படைத்தக் கம்பனைப் பாராட்டுவதில் தவறில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி .

      (வெறும் மொழிமாற்றுப் படங்களை மட்டுமே எடுத்து நம் ஆட்கள் தனது என்று புகழ் வாங்க வில்லையா...? கம்பனார் வால்மீகியைத் தான் தழுவினேன் என்று சொல்லிதான் காதையைத் துவங்குகிறார்.
      கம்பனைப் படிப்பதர்க்கு முன்பு என்னிடமும் நிறையக் கேள்விகள் அதில் நையாண்டித் தனமும் இருந்தது. ஆனால் படித்தப்பிறகு சில ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் இருந்தாலும் அதில் உள்ள வர்ணனைகளில் மூழ்கி விட்டேன்.
      அதில் எனக்குப் பிடித்த வர்ணனைகளை மட்டும் தனியே எடுத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் கட்டுரை எழுதிட ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு நேரம் தான் இல்லை. ஒரு சமயம் வயதானப்பிறகு இருந்தால் எழுதுவேன்)




      நீக்கு
  3. அருமையான வரிகள் .. அழகிய கவிதை ..
    வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு
  4. கம்பன் புகழ்பாடும் அருமையான கவிதை..... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  5. கவிச்சக்ரவர்த்தி பற்றிய அழகான கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  6. கம்பன் புகழை கண்ணனின் செய்தியை சிறப்பாக கவிப்படைதுள்ளீர்கள்அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  7. பாயும் மனமோ தினம்மாறும்
    பண்பை நன்றே புரியவைத்தான்!
    தேயும் மனத்தில் பெண்ணைமட்டும்
    தேக்கி டாதே என்றுரைத்தான்!

    கவிபாடும் கம்பனுக்கு கவிதை ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  8. அருணா! நான் கேள்வியை சரியாக உங்களுக்கு புரியவைக்கவில்லை என்று நினைக்கிறேன்..

    கண்ணன் கதையினையே மாற்றி வடித்தவன் வால்மீகி. அந்த கண்ணன் எதற்கு பெயர் போனவன் எனபது ஊரறிந்தது. அந்த அலைபாயும் "பண்பை" மாற்றி நல்ல ஏக பத்தினி விரதனாக நல்ல பண்பு உள்ள இராமனாக மாற்றியது வால்மீகியே?

    [[மாயக் கண்ணன் கதையினையே
    மாற்றி வடித்தான் கம்பனவன்!]]

    மொழி மாற்றம் செய்தது மட்டுமே கம்பன்; ஆனால், மாயக் கண்ணன் கதையை கம்பன் மாற்றி எழுதியது மாதிரி இருந்தது உங்கள் கவிதை.

    பின்குறிப்பு:
    இந்த கேள்வி கேட்டதற்கு காரணம்...நீங்கள் எப்படி சாமர்த்தியமாக பதில் சொல்லப் போகிறீர்கள் என்று தான்!

    கவிதை மிக அழகு!
    நன்றி!




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் வணக்கம் நம்பள்கி.

      நீங்கள் கேட்டக் கெள்விக்குப் பதில் சொல்ல சாமார்த்தியம் தேவையில்லை.
      வால்மீகியைப் படித்திருந்தாலோ... அல்லது வால்மீகியின் கதையை முழுதாகக் கேட்டிருந்தாலோ போதும்.
      எனக்கு வால்மீகி கதை வெறும் கேள்வி ஞானம் தான்.
      அவரின் கதை பிரகாரம் இராமன் திருமணத்திற்கு முன் பல பெண்களுடன் இருந்தான் என்றே இருக்கிறது.

      ஆனால் அந்த இராமனை ஏக பத்தினி விரதனாகக் காட்டினார் மொழி மாற்றம் செய்த கம்பர்.

      இதை அறிந்ததால் தான் நான்

      [[மாயக் கண்ணன் கதையினையே
      மாற்றி வடித்தான் கம்பனவன்!] என்று எழுதினேன்.

      நீங்கள் வால்மீகியைப் படித்திருந்தாலும்.... அல்லது அதை ஆழ்ந்து படித்தவரிடத்திலும் இதைக் கெட்டு நன்கு அறிந்து கொண்டு உண்மையை எனக்கும் தெரிவித்தால் நானும் ஏற்றுக்கொள்வேன்.

      நன்றி நம்பள்கி.
      (“கவிதை மிக அழகு!“ ... நீங்கள் கவிதை நல்லாவே இல்லை என்று சொன்னாலும் கொபித்துக்கொள்ள மாட்டேன். “ஐஸ்“ எல்லாம் வேண்டாம்.)


      நீக்கு
  9. கம்பனுக்குப் பொருத்தமாய்க் கவிதாஞ்சலி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சேட்டை ஐயா.

      நீக்கு