வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சின்னச் சின்னப் பாட்டு!!


 
அன்னை!!

இன்பமாய் என்றும் இயங்கும் உலகத்தில்
துன்பங்கள் வந்திடும் நேரத்தில் – கண்துடைத்துத்
தன்பால் இழுக்கும் தனிப்பெரும் ஆரமுதை
அன்பால் அளிப்பாள் அணைத்து!


கவிஞன்!!

சொல்லில் இருக்கும் சுவையைக் கவிஞனோ
கல்லும் கரைய இயற்றிடுவான்! – நல்ல
கரும்பாய் இனிக்கச் சுடும்நெருப்பைக் கூட
கருத்தாய் வடிப்பான் கவி!


சிற்பி!!

கல்லில் இருக்கும் கலையை அருஞ்சிற்பி
சொல்லி வடிப்பான் சுவையாக! – மெல்ல
ஒதுக்கிட வேண்டியதை நீக்கி உளியால்
செதுக்கிட மின்னும் சிலை!


ஆண்!!

ஆண்களின் செய்கையை ஆண்கள்தான் போற்றுவர்!
தூண்போல் துணைசெய்யும் காப்பியங்கள்! – வீண்பேச்சு!
சந்தர்ப்பம் சாதகமாய் வந்திட்டால் யாருமே
சிந்தைமாறிப் பாடுவார் சிந்து!


அருணா செல்வம்

25 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  2. நான்கு குறுங்கவிதைகளும் நன்று. எனினும் அன்னையிலும், சிற்பியிலும் ரசனை கொஞ்சம் தூக்கல். நன்று அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றைக்கும் அன்னைக்குத் தானே முதலிடம்...

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

      நீக்கு
  3. அன்னை!!

    இன்பமாய் என்றும் இயங்கும் உலகத்தில்
    துன்பங்கள் வந்திடும் நேரத்தில் – கண்துடைத்துத்
    தன்பால் இழுக்கும் தனிப்பெரும் ஆரமுதை
    அன்பால் அளிப்பாள் அணைத்து!

    அன்பான கவிதை ..வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி இம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. கொஞ்சமாவது புரிந்ததே...
      அது போதும் கோவை நேரம்.

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி

      நீக்கு
  5. சின்ன சின்னச் சிட்டு
    நெஞ்சை அள்ளிப் போனது
    பார்வை பட்டு...
    ஏதோ இப்படி கிறுக்கத்தான் தெரியும் எனக்கு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்படி கிறுக்கிறுக்கித் தான்
      ஓரளவிற்கு கற்றுக்கொண்டேன்.

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  8. அன்னை உடலின் உயிர்மூச்சு!
    கவிஞன் கற்பனைப் பொக்கிஷம்!
    சிற்பி கலைநயம்காட்டும் பிரம்மா!
    ஆண் அனைத்துமானவன்!!!...

    அருமையான படைப்பு! பதிவு! வாழ்த்துக்கள் தோழி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண் அனைத்துமானவன்!!!...

      ஆஹா.. ஆஹா.. ஆஹா...

      வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தொழி.

      நீக்கு
  10. இதற்க்கு சரியான அர்த்தம் (பொழிப்புரை?) என்ன என்று எளிய தமிழில் சொல்லமுடியுமா?

    ஆண்களின் செய்கையை ஆண்கள்தான் போற்றுவர்!
    தூண்போல் துணைசெய்யும் காப்பியங்கள்! – வீண்பேச்சு!
    சந்தர்ப்பம் சாதகமாய் வந்திட்டால் யாருமே
    சிந்தைமாறிப் பாடுவார் சிந்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி....

      இப்பாடலுக்குச் சரியான பொழிப்புரை...

      ஆண்களின் செய்கையை ஆண்கள்தான் போற்றுவர்!
      தூண்போல் துணைசெய்யும் காப்பியங்கள்! – வீண்பேச்சு!
      சந்தர்ப்பம் சாதகமாய் வந்திட்டால் யாருமே
      சிந்தைமாறிப் பாடுவார் சிந்து!

      புரிந்ததா...? புரியவில்லை என்றால் திரும்பத் திரும்பப் படித்து
      தலையைப் பி...துக் கொள்ளுங்கள்.

      நன்றி நம்பள்கி.

      நீக்கு
  11. சின்னச் சின்ன பாட்டினிலே
    என்னை கட்டிப் போட்டீரே
    வண்ண வண்ணப் படம்போட்டு
    எண்ணம் இனிக்க வைத்தீரே
    அன்னைக்கெழுதிய வெண்பாவில்
    அமிழ்ந்தேன் உணர்வில் நிஜமாக
    ஆணுக்கெழுதிய வெண்பாவில்
    அறிந்தேன் மனதில் சலனமற !

    எல்லாம் அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நட்பே.

      நீக்கு