வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

எச்சில் சாப்பாட்டு மகிமை..!! (அனுபவம்)




நட்புறவுகளுக்கு வணக்கம்.
     சில வீடுகளில் கணவன் சாப்பிட்டுமுடித்து எழுந்துவிட்ட உடன் அதே தட்டிலோ அல்லது இலையிலோ மனைவி அமர்ந்து சாப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள். நானும் அதை ஏதோ பாரம்பரியம் என்றோ சம்பிரதாயம் என்றோ தான் நினைத்திருந்தேன்.
    ஆனால் அதற்கான உண்மை எனக்கு இன்று தான் தெரிந்தது. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். இருந்தாலும்... நான் இன்று அறிந்ததை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

    என் அப்பா வழி சொந்தக்காரர் கூட்டுக்குடும்பம். பெரிய வீடு... நிறைய பேர் இருப்பார்கள். அந்தத் தாத்தா பாட்டிக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு பெண்கள். வீடு நிறைய குழந்தைகள் இருந்தது. அவர்கள் வீட்டில் இப்படித்தான். ஆண்கள் அனைவரும் வேலை காரணமாக வேறுவேறு நேரத்தில் சாப்பிட வருவார்கள். இருந்தாலும் அவர்கள் வந்து சாப்பிட்டு வைத்தத் தட்டை மூடி வைத்து மற்றவர்கள் அனைவருமே சாப்பிட்டப் பிறகு பாட்டி முதற்கொண்டு பெண்கள் கணவர் வைத்தத் தட்டிலேயே சாப்பாடு போட்டுச் சாப்பிடுவார்கள்.
    எனக்குத் திருமணம் முடிந்தக்கையோடு அவர்களின் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தார்கள். எனக்கு விருப்பமில்லை என்றாலும் போய் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் போனேன். அதுவரையில் பரவாயில்லை... இருவருக்கும் தனித்தனி இலையில் தான் பரிமாறினார்கள். அப்பொழுது அவர்களில் அண்ணன் ஒருவர் மட்டும் ஏதோ அவசர வேலையாய் வெளியே போனதால் அண்ணியை எங்களுடன் அமர்ந்து சாப்பிட அழைத்தும் “அவர் சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேன்“ என்று சொல்லி விட்டு எங்களுக்குப் பரிமாறினார் அந்த அண்ணி.
    இவர்களுக்கு கணவரின் மேல் எவ்வளவு அன்பு.... நமக்கு அந்த அளவு அன்பு வரவில்லையே என்று மனத்தில் நினைத்தாலும்... அவர்கள் போல் செய்ய இன்று வரையில் எனக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை.

இப்பொழுது விசயத்திற்கு வருகிறேன்....

    கொஞ்ச நாட்களாக அந்த அண்ணிக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதால் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பேசும் பொழுதே அண்ணன் வேலை முடித்து வரவில்லை என்று சொன்னார். நன்றாகத்தான் பேசினார்கள். தன் உடல்நிலை குறித்தும் மருந்து குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது மணி நம்மூர் நேரத்திற்கு மதியம் ஒன்று இருக்கும்.
    நான் பேச்சு வாக்கில் “சாப்பிட்டீங்களா அண்ணி...?“ என்று கேட்டேன். நிச்சயம் அவர்கள் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்றே நினைத்தேன். ஆனால் அண்ணியோ.... “நான் சாப்பிட்டு விட்டேன் அருணா... அண்ணன் வந்தால் அவரே போட்டு சாப்பிட்டுக் கொள்வார்“ என்றும் சொன்னார். எனக்கு மனத்திற்குள் ஆச்சர்யமாக இருந்தாலும்... “நீங்கள் பொதுவா அண்ணன் சாப்பிடாமல் சாப்பிட மாட்டீர்களே.... உடம்பு சரியில்லாததால் உங்கள் சம்பிரதாயங்களை நீங்கள் மாற்றிக் கொண்டது நல்லது தான் அண்ணி...“ என்றேன்.
    “சம்பிரதாயமா....? எதைச்சொல்லுற...?“ என்றார்
    “உங்கள் மாமியார் வீட்டில் ஆண்கள் சாப்பிட்டப் பிறகு தான் பெண்களெல்லாம் சாப்பிடுவது என்ற சம்பிரதாயம் இருந்ததே.... இப்போ தனியாக வந்ததிலிருந்து அப்படி இல்லையா...?“ என்றேன்.
    அதற்கு அண்ணி சொன்னார் கோபமாக.... “அது ஒரு சம்பிரதாயமும் இல்லை. ஒரு மண்ணும் இல்லை. அது கூட்டுக் குடும்பம். நிறைய பேர்கள் இருப்பதால் கடைசில் சாப்பிடும் எங்களுக்கு பிடித்தப் பதார்த்தம் எதுவும் மீறாது. அதனால் கணவன் தட்டில் அதிகமாக வைத்து விடுவோம். இவர் எப்படியும் மீதி வைத்து விடுவார் என்று தெரிந்தே தான் வைப்போம். அவரும் ஓரளவிற்குச் சாப்பிட்டு விட்டு தன் மனைவிக்கு இந்தப் பதார்த்தம் பிடிக்குமே எனறு வைத்து விடுவார். என் கணவர் வைத்த எச்சில் தட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள் இல்லையா... நாங்கள் அதிலேயே சாப்பாடு போட்டுச் சாப்பிடுவோம்....“ என்றார்.
     “அடக்கடவுளே.... இது தான் காரணமா.... நான் ஏதோ உங்களின் கணவரின் மேல் உள்ள அன்பால் தான் அவரின் எச்சில் தட்டிலேயே சாப்பிடுகிறீர்கள் என்று நினைத்தேன்....“ என்று என் ஆச்சர்யத்தைச் சொன்னேன்.
     அதற்கு அண்ணி, “அவர் நமக்குப் பிடித்ததை வைத்துவிட்டுப் போவதிலேயே அவரின் அன்பு புரிகிறது தானே அருணா....என்றார்
இருந்தாலும்.. எனக்கு.. இது இவ்வளவு தானா என்றே தோன்றுகிறது.

அருணாசெல்வம்.
 14.02.2013   

40 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நீங்கள் சொன்னது உண்மை தாங்க.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  2. இப்படியெல்லாம் இருக்கிறதா என்ன இதில்....புதிய தகவல்தான் எனக்கு....






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி.... பழையவர்கள் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள்....?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. தினமும் தொடரும் அன்பு அருமை.என்னக்கும் இப்போதுதான் புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பெல்லாம்... இது தினமும் தொடர்ந்த அன்பு “தொல்லை“ என்று தான் எனக்குத் தோன்றியது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  4. அட...இதுதன் அந்த இரகசியமா...ஆம்..கூட்டுக்குடும்பத்தில் இது உண்மைதான். என்ன ஒரு ஆண் ஆதிக்கம்...சாப்பாடாகட்டும், இல்லை பதார்த்தமாகட்டும், உண்பதிலும்,அதுவும் அதிகமாக கொடுக்கவேண்டும் முதல் உரிமை ஆண்களுக்கே...இதுவும் ஒருகாரணமாக இருக்கலாம்...அதாவது ஆண்கள் உழைப்பாளிகள்...அவர்கள் வீட்டில் என்ன இருக்கிறது, என்ன சமைத்தார்கள் என்றெல்லாம் பார்ப்பதும் இல்லை கேட்ப்பதும் இல்லை. அதனால் பெண்கள் அவரக்ளாகவே ஆண்களின்மேல் ஒரு ஈடுப்பாடும், இரக்கமும் கொண்டு முதல் உரிமை கொடுத்தார்கள்..பிள்ளைகலெல்லாம் அப்புறம்தான்..எதையும் தகப்பன்மார்களுக்கு எடுத்து வைத்தபின் பிள்ளைகலுக்கு கொடுப்பார்கள்..

    இன்று நிலமை அப்படி இல்லை...ஆண்களூம் பெண்களூம் உழைக்கிறார்கள்..ஆண்களூம் எதுவும் எதிர்ப்பார்பதில்லை..எல்லாமே பிள்ளைகளுக்குத்தான்..அவர்களூக்கு போக மீந்ததென்றால் தாய்/தந்தையர்களூக்கு...அன்றய காலக்கட்டங்களில் நிறைய குழந்தைகள், உறவுகள்..இன்று அப்படியா இல்லையே..தாய்,தந்தை குழந்தைகள்.அவ்வளவுதான் குடும்பம்...நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வு எப்போதென்று தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  5. அவரவர் மனநிலைக்கு ஏற்ப இருக்கும் அருணா. நான் எங்க வீட்ல இருக்கிற வரை அக்கா தம்பி அம்மாவோட தான் சாப்பிடுவேன். இப்போது தனியா சாப்பிட பிடிக்காததால் அவர் வர லேட் ஆனாலும் காத்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் தவறில்லை தானே சசிகலா...?

      (ஆனால்... அவர் வந்தப் பிறகு அவர் சாப்பிட்டு விட்டு முடித்தப்பிறகு மீதிக்காகக் காத்திருக்க மாட்டீர்கள் தானே...)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      அவர் வந்

      நீக்கு
  6. நல்ல ஸ்வாரஸ்யமான பதிவு. நானும் இதுபற்றிக் கேள்விப்பட்டும் பார்த்தும் உள்ளேன்.

    *சாப்பிட்ட தட்டிலோ இலையிலோ சாப்பிடும்போது அது அவர்களுக்குள் மேலும் ஒரு ஈர்ப்புடனான அன்னியோன்னியத்துக்கு வழியமைக்குமாம்.

    *கணவர் சாப்பிட்டு மீதம் விடும் போது அவருக்கு எதில் அதிகம் பிடித்தவை பிடிக்காதவை என இலகுவில் புலப்படுமாம். மீதம் அதிகமாக இருக்கும் பதார்த்தம் அவருக்குப் பிடிக்கவில்லை எனவும் கருத்துண்டாம்

    *மனைவி நான் சாப்பிட்ட பின்னரே என் தட்டில் சாப்பிடுவாள் , காத்திருப்பாள் என்னும் நினைவை இப்படிக் கணவனுக்கு உணர்த்தும் போது அவன் ”வேறு வீட்டில் ”கை நனைக்கமாட்டானாம்.

    இதெல்லாம் நானும் சொல்லக் கேட்டதுதானுங்கோ...:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா.....!!!
      அப்படியா....!!!
      அப்படியா....!!!

      நானும் இப்படியெல்லாம் என்று தான் நினைத்திருந்தேன்.
      ஆனால் அண்ணி சொன்னதும் “இவ்வளவு தானா..” என்று
      ஆதங்கப்பட்டாதால் வலையில் எழுதினேன்.

      தங்களின் விபரங்கள் கூடிய கருத்துரைக்கு
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. கூட்டுக் குடும்பம் குறைந்ததற்கு இது ஒரு காரணாம் போல! விலைவாசி இப்படி இருக்கும் போது முதலில் பரிமாறும் அண்ணியார் எல்லாவற்றையும் கொட்டிவிட்டால்!

    பின் குறிப்பு:
    உண்மையான காரணம் பக்கா மூடநம்பிக்கை; இப்ப மக்களுக்கு அறிவு வந்து கேள்வி கேட்கற்தினால்
    இப்படி. சிறு வயதில், நிறைய வீடுகளில் தாத்தா சாப்பிட்ட இலையில் பாட்டி சாப்பிட்டதை நான் பார்த்திருக்கிறேன் (போட்டிக்கு யாரும் இல்லாவிட்டாலும்)

    கோலம் போட்டதும் இப்படித்தான். மூடநம்பிக்கை; இப்ப வெண்டைக்கா அறிவியில் விளக்கம்...இந்த அரிசிமாவினால் போடும் கோலம் ஆயிரம் எறும்புகளுக்கு அன்னம் அளிப்பது மாதிரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி... நம் முன்னோர்கள் மிகுந்த புத்திசாளிகள்.
      மக்கள் கடைபிடிக்க வேண்டியதை அழகாக சொன்னாலும் அதை எப்படிச் சொன்னால் நம் மக்கள் கடைபிடிப்பார்கள் என்று
      தெரிந்து அறிந்து தான் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

      நாம் தான் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல்
      கடைபிடிக்கிறோம்.
      அதே சமயம் அதை ஆழ்ந்து யோசிப்பவர்கள் அதன் விளக்கத்தைச் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் “மூடநம்பிக்கை” என்று சொல்கிறாகள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  8. எங்க வீட்டிலே அந்த பிரச்சனையே இல்லை; சமைச்சா தானே இந்த கேள்வி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெறும் பர்கரும் சாண்டுவீச்சும்
      சாப்பிட்டால்... நீங்கள் சொல்வது போல் பிரட்சனை வரவே வராது தான் நம்பள்கி.

      மீண்டும் நன்றி.

      நீக்கு
  9. //“அது ஒரு சம்பிரதாயமும் இல்லை. ஒரு மண்ணும் இல்லை. அது கூட்டுக் குடும்பம். நிறைய பேர்கள் இருப்பதால் கடைசில் சாப்பிடும் எங்களுக்கு பிடித்தப் பதார்த்தம் எதுவும் மீறாது. அதனால் கணவன் தட்டில் அதிகமாக வைத்து விடுவோம். இவர் எப்படியும் மீதி வைத்து விடுவார் என்று தெரிந்தே தான் வைப்போம். அவரும் ஓரளவிற்குச் சாப்பிட்டு விட்டு தன் மனைவிக்கு இந்தப் பதார்த்தம் பிடிக்குமே எனறு வைத்து விடுவார். என் கணவர் வைத்த எச்சில் தட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள் இல்லையா... நாங்கள் அதிலேயே சாப்பாடு போட்டுச் சாப்பிடுவோம்....“ என்றார்.//

    //“அவர் நமக்குப் பிடித்ததை வைத்துவிட்டுப் போவதிலேயே அவரின் அன்பு புரிகிறது தானே அருணா....” //

    காரண்மும் புரிந்தது. மிகவும் சுவாரஸ்யமான பதிவாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு
  10. பட்டென்று உடைபட்டு விட்டதே!...அடடா சுவாரஸ்யம் குறைந்து விட்டது..
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா....
      ஆனால் விடை தெரிந்து விட்டதும் நல்லது தானே..

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோவைக்கவி.

      நீக்கு
  11. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது பதிவு.
    அன்பை தெரிவிக்கும் வழியோ?
    நன்றி பகிர்விற்கு,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பைத் தெரிவிக்க இதுவும் ஒரு வழி என்று தான் நானும் நினைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  12. இது மாதிரிச் சம்பிரதாயங்களில் எவ்வளவு விஷயம் இருக்கு?
    அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தாங்க குட்டன் ஐயா.
      நா(ம்) தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  13. நல்ல யோசனைதான்! ஆனால் இது சுகாதார கேடானதும் கூட அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சுகாதார கேடானதும் கூட அல்லவா?“

      அப்படியா....?
      இது வரையில் இந்த நிகழ்ச்சி அன்பின் வெளிபாடு என்ற
      கருத்தில் தான் பதில் அளித்து இருக்கிறார்கள். (ஒருவரைத் தவிர)
      அதனால்... எனக்குத் தெரியவில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  14. உங்களை நல்லா நாலு 'நல்ல' வார்த்தையில் வாழ்த்தனும் போல இருக்கு! உங்கள் ஊக்கத்தால் நானும் தமிழ் கவிதை (அல்லது கழுதையா) எழுத முடியுதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி.... அது என்ன நாலு நல்ல வார்த்தை....

      வாழ்த்தனும்ன்னு வந்துவிட்டீர்கள்... பிறகென்ன.... நிறையவே வாழ்த்திவிடுங்கள்.

      என்தன் ஊக்கத்தால் நீங்களும் தமிழ் கவியாய் (அல்லது கழுதையாய்) மாற முடிந்ததே....!!! (ஆச்சர்யமாக இருக்கிறது)

      நன்றி நம்பள்கி.



      நீக்கு
  15. இதில் உண்மை இல்லை என்றே நினைக்கிறேன் அது ஒரு மரபு என்றே தோன்றுகிறது அன்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரபா.....?
      இருக்கலாம். இளமதியும் இப்படித்தான் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.
      அப்படியே மரபாக இருந்திருந்து.... அந்தக் கணவனுக்கு ஏதோ நோய் இருந்திருந்தால்... அந்த மனைவி அந்த உணவை உண்பாளா...?
      என்னமோ போங்க பாஸ்...

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. சும்மாவா சொன்னாங்க பெண்கள் புத்திசாலிகள் என்று, தனக்கு பயன் தராத எதையும் செய்ய மாட்டங்களே, அப்துல் தயுப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையென்றால்... இந்நேரம் பெண்ணினமே
      அழிந்து விட்டல்லவா இருக்கும்...!

      வள்ளுவர் சும்மாவா சொன்னார்...

      “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
      சொற்காத்துச் சோர்விலாள் பெண்“ என்று!!

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி அப்துல் அண்ணா.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  18. இதுவும் ஒரு பார்வைதான்! இப்படிக் கூட ஒன்று இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கை ஏற்றி விட்டின் நடுவில் வைத்தால்
      அதன் ஒளி எல்லாப் பக்கங்களிலும் பரவும்.
      இந்த இடத்திற்குத் தேவையில்லை என்று
      அந்த இடத்திற்கு மட்டும் வெளிச்சத்தைக் குறைக்காது.

      அது போல தான் இதுவும் ராம் அவர்களே...

      தேடல் தானே வாழ்க்கை.
      நாமும் தேடி நல்லதைப் புரிந்துக்கொள்வோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.


      நீக்கு
  19. அட, எச்சில் கோப்பையில் இவ்வளவு ரகசியம் இருக்கா? இளமதி சொன்ன தகவல்களும் ஆச்சரியமானவை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணி அண்ணா.... இளமதி அவர்கள் சொன்னதைத் தான்
      என் ஆயாவும் சொன்னார்கள்.
      ஆனால் அண்ணி சொன்னது தான் எனக்கு ஆச்சர்யம்!!

      தாங்கள் நீண்டநாட்கள் கழித்தும்
      என்னை மறவாமல் வந்து கருத்திட்டமைக்கு
      மிக்க நன்றி.

      நீக்கு

  20. உன்னை தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
    அதுவே போதும் என்று பெண்மை இன்று ஏற்றுகொண்டது...!
    என்பது போல்தான்
    கணவனுக்கு இனிப்பது மனைவிக்கும் இனிக்கும் என்பதால் ...
    இந்த பண்பாட்டை என்றும் வரவேற்போம் !!

    (என் எண்ணம் தவறாக தாங்கள் நினைத்தால் மன்னிக்கவும் )

    அன்பு தம்பி மல்லன் 19/02/2013

    பதிலளிநீக்கு
  21. மல்லன் அண்ணா....

    காற்று... எல்லோரையும் (எல்லாத்தையும்)
    தொட்டு விடுகிறது. அது காற்றின் தன்மை!

    “கணவனுக்கு இனிப்பது மனைவிக்கும் இனிக்கும் என்பதால் ... இந்த பண்பாட்டை என்றும் வரவேற்போம் !!“

    நல்ல பண்பாடுதான்.
    ஆனால்....

    கணவன் பத்திய சாப்பாடு சாப்பிடுபவனாக இருந்தால்... பாவம் அவன் மனைவி.

    (என் எழுத்தைத் தவறாக தாங்கள் நினைத்தால் மன்னிக்கவும் )

    நன்றி மல்லன் அண்ணா.

    பதிலளிநீக்கு