புதன், 6 பிப்ரவரி, 2013

மகளைக் கற்பழித்தால் ரூபாய் 2,661,282 அபராதம்!!

மகளைக் கற்பழித்தால் ரூபாய் 2,661,282 அபராதம்!!

   சவுதியில் பிரபல போதகரான பஹ்யான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் கற்பழித்துக் கொலை செய்துள்ளார்.
    சவுதியில் தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றும் போதகர் பஹ்யான் அல் கம்தி. அவர் தனது ஐந்து வயது மகள் லாமா அல் கம்தியை பல முறை கற்பழித்து, அடித்து துன்புறுத்தியுள்ளார். இதில் கிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், இடது கை எலும்பு முறிவு, ஆங்காங்கே சிராய்ப்புகள் மற்றும் தீப்புண் உள்ளிட்டவை ஏற்பட்டன.
    படுகாயமடைந்த சிறுமியை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிட்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பஹ்யான் சில மாதங்களே சிறையில் இருந்தார். அதன் பிறகு லாமாவின் தாய்க்கு ரூபாய் 2,661,282 பணம் கொடுத்ததை அடுத்து அவர் விடுவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
     மகளை கற்பழித்து கொடூரமாக கொன்ற தந்தை தற்போது சுதந்திரமாக வெளியே சுற்றுவது குறித்து அறிந்தவர்கள் சமூக வலைதளங்களில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்படியும் ஒரு சட்டம்...!! இப்படியும் மனிதர்கள்... !!


அருணா செல்வம்.8 கருத்துகள்:

Seeni சொன்னது…

appadiyaa.....!!l....!!!?

ezhil சொன்னது…

செய்தியை அறியவே கொடூரமாக இருக்கிறதே....

ezhil சொன்னது…

என்னுடைய முக நூலில் பகிர்ந்துள்ளேன்

சித்தாரா மகேஷ். சொன்னது…

தீங்கு நடந்த பெண்ணுக்கு என்ன தீர்வு கொடுத்தார்கள்?அவள் உயிர் போனபின் தாய்க்கு பணம் கொடுத்தால் அவள் உயிர் பழி தீருமா?இல்லை அந்த பணம்தான் மகளுக்கு ஈடாகுமா?

அருணா செல்வம் சொன்னது…

நாட்டில் இப்பொழுதெல்லாம்
இப்படி தான் நடக்கிறது தோழி.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

பணம் இருப்பவர்கள்
எந்தத் தீமையையும் செய்யலாம்...
அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்...
தீதி தேவதை கண்களைக் கட்டிக்கொண்டு
காசு வாங்கி விடுகிறது...

பாவம் பெண்கள்...!!
நன்றி சித்தாரா.

பெயரில்லா சொன்னது…

இது மீடியாவில் வந்த பிழையான செய்தியாம். இதில் உண்மையில்லை என்று மறுக்கிறது சவூதி.

http://gulfnews.com/news/gulf/saudi-arabia/killer-cleric-not-sentenced-yet-saudi-arabia-1.1143203