புதன், 27 பிப்ரவரி, 2013

மாதுதான் மதுவோ...!!







கள்ளிருக்கும் மலர்களிலே
உள்ளிருந்து பிறந்தவளோ!
சொல்லிருக்கும் இதழ்தனிலே
மெல்மயக்கம் கொடுப்பவளோ!!

இமைதிறந்து பார்த்தாலே
இதயமதோ மயங்கிவிட
கணைதொடுக்கும் பார்வையாலே
காமனவன் கெஞ்சிடுவான்!

போதைதரும் வார்த்தைகளோ
புரியாமல் புரியவைக்கும்!
கோதையவள் நடையழகோ
கூப்பிட்டு மயக்கிவிடும்!

கலகலக்கும் சிரிப்பொலியோ
கண்ணாடிச் சிதறல்கள்!
பளபளக்கும் பல்வரிசை
பளிங்கான பனிக்கட்டி!

பாராமல் இருந்தாளோ
பாரமான சுமைதெரியும்!
பார்த்துவிட்டு முறைத்தாலும்
பாரமெல்லாம் குறைந்துவிடும்!

தொடுவதற்கே அஞ்சுவதும்
தொட்டபின்பு தொடர்வதுவும்
படுவதற்கே இறைவனவன்
படைத்திட்ட மயக்கமிது!!




அருணா செல்வம்.

26 கருத்துகள்:

  1. "பளபளக்கும் பல்வரிசை" தானே...

    கடைசி வரி கலக்கல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பளபளக்கும் பல்வரிசை“ தாங்க

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  2. மதுவும் மாதுவும் தொட்டாலும் போதை
    தருவதுதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ராஜலஷ்மி அம்மா.

      நீக்கு
  4. அழகான அருமையான சொல்லாடல்.
    மயங்கிவிட்டேன் தோழி!
    வாழ்த்துக்கள்!!!

    மயக்குகின்றதென்ன மதுவா மாதுவா
    வியக்குமிந்ததேவதை தேனா தீந்தமிழா
    இயக்கம் தருவதென்றும் மாதெனும் மதுதான்
    தயக்கம் ஏதுமில்லை தரணியிலே இதுவேதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுவைக் குடித்த மலர்வண்டாய் ஆனேன்
      இதுதான் மயக்குமென கேட்டு! - பொதுவாய்
      வடித்தக் கவிதை! இளமதி வாழ்த்தால்
      நெடிது புகழ்பெறும் நின்று!

      தங்களின் வருகைக்கும் அழகிய கவிதையுடன்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.


      நீக்கு
  5. சிறப்பான கவிதை! அழகான ஒப்பீடு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  7. வரிகளே அம்புட்டு போதை தருகிறது மேடம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து... விழுந்துவிடாதீர்கள்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அரசன் (ஐயா)

      நீக்கு
  8. பாட்டாகவே பாடிவிட்டேன்...அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிங்களா...? சரியாக சந்தம் அமைந்து வந்ததா...
      எனக்கு பாட வராதுங்க.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரெவெரி சார்.

      நீக்கு
  9. //பார்த்துவிட்டு முறைத்தாலும்
    பாரமெல்லாம் குறைந்துவிடும்!//

    அருமை,சும்மா அடிச்சு தூள் கிளப்பறிங்க போங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஆதிரா.

      நீக்கு
  10. இனிய வணக்கம் சகோதரி...

    நலமா??



    தேன்சுவை சுரக்கும்

    தெள்ளுதமிழ் சொற்களால்

    புனையப்பட்ட கவியது

    என்னில் உவகை அள்ளியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.
      நலமுடன் இருக்கிறேன். நன்றி.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மகி அண்ணா.

      நீக்கு
  11. தலைப்பே போதையை சிந்திக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தீர்களா...?
      அருந்தாமலேயே போதை என்பதை சிந்திக்க வைத்து விட்டது...
      அதனால் தான் அப்படி எழுதினேன்.

      நன்றி சசிகலா.

      நீக்கு
  12. மது போதையா? மாது போதையா?
    பருகினால் மது போதை!
    பார்த்தாலே மாது போதை!
    ஆணுக்கு காலில்லா மதுவும்
    காலுள்ள மாதுவும் போதையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி....

      கால் இல்லாதது எல்லாம் பேய்.. பிசாசுக்களாம்.

      அதையெல்லாம் புடிப்பீங்களா...?
      ஓ... சாரி. குடிப்பிங்களா...?

      நீக்கு
  13. என் கவிதையை எழுத்துக் குறியீடு இல்லாமல் எழுதியதால் அர்த்தம் புரியாமல் போகக் கூடாது என்பதற்காக மறுபடியும் அந்த கடைசி வரி...

    கால் இல்லாத 'ம'துவும் காலுள்ள 'மா'துவும் போதையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.கே... ஓ.கே... இப்போ புரிஞ்சிடுச்சி.

      கால் இல்லாத பே.. ம்
      கால் உள்ள பெ...ம் போதை தான் என்று.

      நன்றி நம்பள்கி.

      நீக்கு