சனி, 2 மார்ச், 2013

உன்னை நான் நேசிக்கிறேன்..!





நிழலே....
என் நிழலே..
என்னைவிட உன்னை
நான் நேசிக்கிறேன்!

நிச்சயம் தெரியும்
நான் இறந்தாலும்
நீ மட்டும் என்னைவிட்டு
போகவே மாட்டாய் என்று!

உன்னைக் கண்டு
பயப்படுபவர்களுக்குத்
தெரிவதில்லை..

நிழல் என்று
ஒன்று விழுந்தால் தான்
எங்கேயோ கொஞ்சம்
வெளிச்சம் நிச்சயம்
உண்டு என்பதை!

நிழலே விழாமலிருக்க
இருட்டிற்குள்
நின்று கொண்டு
பயந்து சாவதா..?

வெளிச்சத்திற்கு
வந்து விட்டால்
நாம் பயந்த நிழல்
நம் காலடியில்
பதுங்கினாலும்
நம்முடனே தானிருக்கும்!

அதனாலே...
நிழலே... நிழலே...!!

என்னை விட
உன்னை நான்
நேசிக்கிறேன்!!


அருணா செல்வம்.

24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  2. உங்கள் நிழலை நீங்கள் நசுக்கலாம்!
    உங்கள் நிழலை நீங்கள் மறைக்கலாம்!
    உச்சி வெயிலில் வெளி வந்தால்,
    உங்கள் நிழல் உங்கள் காலடியில்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      சரியாக சொன்னீர்கள்.
      (ஆமாம்.... நிழலை எப்படி நசுக்குவீர்கள்...?)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
    2. நல்ல கேள்வி!
      நீங்கள் எப்படி நிழலை நேசிக்க முடியும் என்று சொல்லுங்கள்; பிறகு, நான் எப்படி நிழலை நசுக்க முடியும் என்று சொல்கிறேன்.!

      நீக்கு
    3. நல்ல பதில்!

      என் நிழலை நான் நேசிப்பதால் தான்
      அதனை என்னால் நசுக்க முடியவில்லை.

      பதில் கொடுத்தமைக்கு நன்றி நம்பள்கி.

      நீக்கு
  3. // நிழலே விழாமலிருக்க
    இருட்டிற்குள்
    நின்று கொண்டு
    பயந்து சாவதா..?//

    நிழலைக் கண்டு பயப்படாமல் நேசிக்க கற்றுக் கொள்வோம். நல்ல சிந்தனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ராஜலட்சுமி அம்மா.

      நீக்கு
  4. நிழலுக்கு ஒரு நீலாம்பரி ராகம் பாடிவிட்டீர்கள்...
    நானும் நேசிக்கிறேன் சகோதரி..
    நிழலையும் நிழலுக்கான உங்கள் கவிதையையும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. நன்றி. நன்றி... மகி அண்ணா.

      (ஆனால் நீலாம்பரி ராகம் என்பது
      என் கவிதைக்குச் சரிவருதா...?
      சும்மா ஒரு பேச்சிக்குச் சொன்னீர்களா...?)

      நீக்கு
    2. அன்புநிறை சகோதரி...
      ராகம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது...
      பொதுவாக மனதுக்கு பிடித்த
      ஒரு பொருளையோ அல்லது
      சூழலையோ பாடுகையில்
      நீலாம்பரியை தேர்ந்தெடுப்பார்கள்...
      அதற்காகத்தான் சொன்னேன்...

      நீக்கு
    3. தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.
      எனக்கும் இசை பிடிக்கும்.
      ஆனால் இராகத்தைப் பற்றிக் கேட்டால் “கிலோ எவ்வளவு?” என்று கேட்கும் ஞான சூன்யம் தான்.

      நீங்கள் “நீலாம்பரி என்று சொன்னதும்
      நம்மையுமறியாமல் அந்த இராகத்தில் எழுதியிருக்கிறேனா
      என்று உள்ளுக்குள் வந்து சந்தோஷத்துடன் சந்தேகமாகக் கேட்டேன்.
      தெளியவைத்தமைக்கு மிக்க நன்றி மகி அண்ணா.

      (இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்கிறதே இந்தப் பெண் என்று நினைத்து... அடுத்தப் பின்னோட்டத்தில் “அருமை“ என்று மட்டும் பதிலைச் சுருக்கிவிடாதீர்கள்.)

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  6. தோழி!
    நிழலைக்கண்டு பயம் கிடையாது. மாறாக வெறுப்பெனலாம். ஏனெனில் நான் எவ்வளவு உண்மையாக இருந்தாலும் இது ஒருபோதும் நிஜத்தைக் காட்டுவதேயில்லை...
    கறுப்பு வண்ணத்திலேயே இருந்துகொண்டு கர்த்தால் பண்ணிக்கொள்ளுகிறது...

    மாயா மாயா மாயா மாயா எல்லாம் சாயா சாயா எல்லாம் சாயா...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று என்ப(து) இன்றுஇல்லை!
      நேரம் என்றும் நிற்பதில்லை!
      காற்று என்ப(து) என்றுமுண்டு!
      கண்ணால் என்றும் கண்டதில்லை!
      நாற்று போல்நாம் இருந்தாலும்
      நம்மை விட்டே விலகிடாமல்
      கூற்றன் கொண்டு சென்றாலும்
      கூட வருமே நம்நிழலே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. இப்படி திடீரென்று நேரே போட்டு உடைத்திவிட்டீர்களே என்று சற்றே பயந்து போனேன். பிறகு பார்த்தால் நிழல் அது இதுன்னு.... அட போங்க இப்படி ஏமாத்திபுட்டிங்களே !

    அட நான் தாங்க. . .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு தான் எதையும் முழுமையாகப் படித்து ஆராய வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். இப்படி அறைகுறையாகப் படித்தால் இப்படித்தான் பயம் வரும். (ஆமாம்.... எதற்கு பயந்தீர்கள்...? எதற்காக ஏமார்ந்தீர்கள்...?)

      நன்றி தோழா(ழி)

      நீக்கு
  9. அருமை ...நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சொல்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மலர் பாலன்.

      நீக்கு
  10. அழகான கவிதை, மிகவும் ரசித்தேன்
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு