செவ்வாய், 16 அக்டோபர், 2012

உரிமை பெற்ற அடிமைகள்!! (கவிதை)





ஓங்கி முழக்கம் செய்திட்டான்
    
   உரிமை என்றும் வேண்டுமென்று!
வாங்கி விட்டோம் சுதந்திரத்தை
  
   வைத்து வாழத் தெரியவில்லை!
தாங்கிப் பிடித்த ஊன்றுகோலைத்
  
   தவற விட்டே விழிப்பதுபோல்
ஏங்கி எண்ணி பார்க்கின்றேன்
  
   எங்கே நமது சுதந்திரமோ?

கம்பி கதவு வீட்டிற்குள்
  
   கைதி போன்று வாழுகின்றோம்!
நம்பி நடக்க முடியவில்லை!
  
   நகையும் களவு போகுதுங்கே!
கொம்புத் தேனாய் அரசாங்கம்
  
   கொடுக்கும் சலுகை கிடைக்குதிங்கே!
தெம்பு வரவே கேட்டாலோ
  
   வம்பு வந்து சேருதிங்கே!

கோடு போட்டு வாழுகின்றார்
  
   கொள்கை அதனுள் புதைக்கின்றார்!
தேடும் பொருளைக் கொள்வதற்கே
  
   தெரிந்தே லஞ்சம் பெறுகின்றார்!
நாடும் மொழியும் சாதியினம்
  
   நாலும் உயர்ந்தே இருக்கின்ற
ஏடும் இனிக்கும் படிப்பதற்கே
  
   எல்லாம் எதிரில் எதிர்நிலையே!

ஏட்டில் தமிழை உயர்த்துகின்றார்
  
   எதிரில் பேசத் தயங்குகின்றார்!
காட்டுப் பூவின் நறுமணம்போல்
  
   கன்னித் தமிழோ இருக்கின்றாள்!
கூட்டிக் கழித்துப் பார்த்தாலோ
  
    கேட்டு கிடைத்தச் சுதந்திரத்தை
ஓட்ட ஒதுங்கி நிற்கும்நாம்
  
    உரிமை பெற்ற அடிமைகளே!
 

அருணா செல்வம்

20 கருத்துகள்:

  1. ஏட்டில் தமிழை உயர்த்துகின்றார்
    எதிரில் பேசத் தயங்குகின்றார்!
    காட்டுப் பூவின் நறுமணம்போல்
    கன்னித் தமிழோ இருக்கின்றாள்!

    எனக்கான ஆதங்கம் தங்கள் வரிகளில் கண்டேன் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தமிழை விரும்பும் அனைத்துத்
      தமிழர்களின் ஆதங்கம் சசிகலா.

      நன்றி.

      நீக்கு
  2. உங்கள் வரிகள் உண்மையை உணர்த்துகிறது... நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  3. அருமையாகச் சொன்னீர்கள்
    நாம் உரிமை பெற்றும் அடிமைகள்தான்
    சிந்திக்கச் செய்து போகும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. கொம்புத் தேனாய் அரசாங்கம்
    கொடுக்கும் சளுகை கிடைக்குதிங்கே
    /////////////////////////////////////////////

    உண்மைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சிட்டு...
      கிரைண்டர், டீவி எல்லாம் கொடுத்து
      கரண்டை கட் பண்ணிடுறாங்க...

      நன்றி சிட்டுக்குருவி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  6. கோடு போட்டு வாழுகின்றார்
    கோள்கை அதனுள் புதைக்கின்றார்!
    தேடும் பொருளைக் கொள்வதற்கே
    தெரிந்தே லஞ்சம் பெறுகின்றார்!
    நாடும் மொழியும் சாதியினம்
    நாலும் உயர்ந்தே இருக்கின்ற
    ஏடும் இனிக்கும் படிப்பதற்கே
    எல்லாம் எதிரில் எதிர்நிலையே!

    உண்மைதான் தோழி ....அருமையாகச் சொன்னீர்கள் .
    மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகிய கருத்திற்கும்
      மி்க்க நன்றி தோழி.

      நீக்கு
  7. கோள்கை சளுகை போன்ற எழுத்துப் பிழைகளைப் பொருட்படுத்தாமல் படித்தால் உங்களின் கவிதை கருப்பொருளிலும் சரி. வார்த்தை அழகிலும் சரி. அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள் தோழா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மி்க்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீங்கள் சுட்டிக்காட்டியத் தவறுகளைச்
      சரிசெய்துவிட்டேன்.
      நன்றி ஐயா.

      நீக்கு
  8. இன்றைய அவலம்;சொன்ன விதம்நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மி்க்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  9. உண்மை வரிகள்...நல்லதொரு படைப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள்.
      உங்களின் வருகைக்கண்டு மகிழ்கிறேன்.

      கருத்திற்கு மிக்க நன்றி ரெவெரி சார்.

      நீக்கு
  10. தங்களின் வருகைக்கும் நல்ல கருத்தைத்
    தெளிவாக தந்தமைக்கும் மிக்க நன்றி ரமணி ஐயா.

    பதிலளிநீக்கு