செவ்வாய், 17 ஜூலை, 2012

மறக்க முடியும்...!! (கவிதை)





மண்வேண்டிப் புரட்சிசெய்த பாரதியின் வீர
    மணிக்கவியை நான்மறந்து விடமுடியும் என்றால்
பண்ணிற்கே பாபடைத்த பாவேந்தர் வண்ணப்
    பாக்களையும் நான்மறந்து விடமுடியும் என்றால்
கண்போன்ற கருத்தொளிரும் கண்ணதாசன் காதல்
    கவிகளையும் நான்மறந்து விடமுடியும் என்றால்
பெண்விழியால் கவிபடைக்க வழிநடத்தும் பேதைப்
    பெண்ணுன்னை நான்மறந்து விடமுடியும் என்பேன்!!


    

23 கருத்துகள்:

  1. வழிபடைத்த
    வழி நடத்தும்
    இருவரையும் மறவாது
    இதுபோன்ற அற்புதக் கவிகள் தர
    அன்புடன் வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க
      நன்றிங்க ரமணி ஐயா.

      நீக்கு
  2. ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  3. ரசிக்கக் கூடியது தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. வேல்விழியாளின்
    வீசுகதிர் பார்வையினால்
    வித்திட்ட கவிகள் எல்லாம்
    இங்கே எங்கள்
    கண்களுக்கு விருந்தாகட்டும்
    அந்த மீன்விழியாளை
    நெஞ்சோடு இருத்தி
    கவி படைத்திடுங்கள்...

    நண்பரே...
    விடுமுறையில் இருந்ததால்
    வலைப்பக்கம் வரவில்லை ..
    இனி தொடரும் என் வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே!

      ஏதோ கோபமாக இருக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன்.
      நான் உங்களிடம் விளக்கம் கேட்டெழுதியதை நீங்கள் தவறாகவும் புரிந்து கொண்டிருக்கலாம். உண்மையில் எனக்கு விளக்கம் தெரியாமல் தான் கேட்டேன். அதைத் தவறான முறையில் எழுதிவிட்டேனா என்று கூட பலமுறை யோசித்துப் பார்த்தேன். எனக்குத் தவறாக படாதது உங்களுக்குப் பட்டதோ என்றும் மனக்கவலை அடைந்தேன்.
      உங்கள் பதில் என்னை நிம்மதில் ஆழ்த்தியது. நன்றிங்க நண்பரே!

      நீக்கு
    2. நண்பரே...
      தங்களிடம் எனக்கு கோபமா...
      ஒருபோதும் இல்லை....
      எப்போதும் என் மனதில் தங்களின் கவிதைக்கு நீங்காத
      இடம் உண்டு..
      நேரமின்மை என்னை வரவிடாது செய்துவிட்டது...

      நீக்கு
  5. பதில்கள்
    1. காதலித்துப் பாருங்கள் நண்பரே.... (கல்யாணம் ஆகியிருந்தால் வேண்டாம்)
      இன்னும் நிறைய வரும்.

      நன்றிங்க நண்பரே!

      நீக்கு
  6. பிரமாதம்.அருமையான இறுதி வரிகள்.
    மன்னிக்கவும் ஒரு சந்தேகம்! 'விடமுடியும்' என்ற இடத்தில் ஓசை அதிகமானது போல் தோன்றுகிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.

      நீங்கள் சொல்வது சரிதான். காய்- காய்- மா- தேமா இது தான் பெருவழக்கில் உள்ள எண்சீர் விருத்தம்.

      நான் எழுதியது காய்- காய்- காய்- மா என்று வைத்து சீர் அழகுக்காக எழுதினேன். இதுவும் எண்சீர் விருத்தத்தில் ஒரு வகை தான்.

      இந்த வகைப்பாடல் திருவருட்பாவில் உள்ளது.

      தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
      சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
      தனித்தநறுந் தேன்பெய்து.....

      இப்படி அமைந்திருக்கும்.

      உங்களின் வருகைக்கும் சருத்திற்கும்
      மிக்க நன்றிங்க ஐயா.

      நீக்கு
  7. மறந்துடுவிங்களோ? அழகு சகோ.

    பதிலளிநீக்கு
  8. அழகான கவிதை... ரசித்தேன்...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் :
    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      நீக்கு
  9. எதிர்மறையாகச் சொல்லி மறத்தல் இயலாது என்பதை ஸ்தாபிச்சுட்டீங்க அருணா... கவியழகும் உத்தியும் மனசைப் பறிச்சது. இன்னும் நிறையக் காதலிச்சு... ஸாரி... காதலிச்சதை இன்னும நிறைய கவிதைல எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  10. நிரஞ்சனா...

    இன்னும் நிறைய காதலிச்சே... எழுதுகிறேன் ஃபிரெண்ட்.

    நன்றிப்பா.

    பதிலளிநீக்கு