புதன், 23 ஜூலை, 2014

இம்சை தத்துவங்கள்!! (இது வெறும் மொக்கை)



1. டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டி தான் சாம்பாதிக்கிறாங்க. அதனால அவங்களை வெட்டி வேலை செய்யறாங்கன்னு சொல்ல முடியுமோ...

2. பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். பால் போடுறவன் பால்காரன். தபால் போடுறவன் தபால்காரன்.... நான் கேட்கிறேன்.... அப்போ பிச்சைப் போடுறவன் பிச்சைக்காரனா?

3. என்னதான் நீங்க அகிம்சாவாதியாக இருந்தாலும், அமைதியை நேசிப்பவராக இருந்தாலும்.... சப்பாத்தியைச் “சுட்டு“தான் சாப்பிடனும்.

4. என்ன தான் “தி மு க“ காரர்கள் மாடுகளுக்குச் செல்லம் கொடுத்து ஆசை ஆசையாய் வளர்த்தாலும், அது “அம்மா“ என்று தான் கத்தும்.

5. நீங்க எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும், மகா வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்சாலும் கரெண்ட் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது.

6. ரயில் எவ்வளவு தான் வேகமாகப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத் தான் போகும்.

7. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் சரி. அது தியேட்டரில் ரிலீஸ் ஆகாது.

8. தையல் போடுறாங்க என்பதற்காக டாக்டரை எல்லாம் டைலர்கள் என்று சொல்லக்கூடாது.

9. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்குத் தலையில கொம்பு முளைக்காது.

10. நான் கேட்கிறேன்.... கழுதை தேஞ்சி கட்டெரும்பானால், அது பேப்பர் சாப்பிடுமா? சர்க்கரை சாப்பிடுமா?

சும்மா ஒரு மாறுதலுக்காக..... யாரும் கல்லை எடுக்காதீங்க.... ப்ளீஸ்....


அருணா செல்வம்.


52 கருத்துகள்:

  1. ஒரு மொக்கைப் பதிவுக்கு ஒரு ‘மொக்கை’ப் பின்னூட்டம்..........
    கவிதை எழுதுறவர் கவிஞர். கதை எழுதுறவர் கதாசிரியர். ‘மொக்கை’ போடுறவரை ‘மொக்கையர்’னு யாரும் சொல்றதில்லை!

    பத்து மொக்கைகளைப் படிச்சுட்டுப் பத்து நிமிசங்களுக்கு மேலா சிரிச்சேன்; இன்னமும் சிரிச்சிட்டிருக்கேன்.

    பாராட்டுகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொக்கைப் போடுறவர் மொக்கையர்..... ஹா ஹா ஹா....

      தங்களின் வருகைக்கும் “மொக்கைக்கும்“
      பாராட்டிற்கும் மிக்க நன்றி ... நம்பி ஐயா.

      நீக்கு
  2. வணக்கம்
    உண்மையில் இம்சை தத்துவங்கள்நன்று .............
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  3. ஹா... ஹா... உங்களையும் அடிச்சிக்க ஆள் கிடையாது... (!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொக்கை போடுவதிலா.....???!!!
      இப்படியெல்லாம் நீங்கள் கலாய்ச்சாலும் இப்படி சிலநேரம் மொக்கை போடலாம் என்றே நினைக்கிறேன்....

      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. தசாவதாரம் எடுத்த மொக்கைகளை ரசித்தேன் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  5. ஐயோ சகோதரி ! செம கடி ஜோக்ஸ்! இதுல சில இங்க பசங்க அடிச்சுக் கேட்டாலும், தாங்கள் இங்கு கொடுத்திருப்பதில் 2, 8, 9 10 புதுசு! திரும்பக் வாசிச்சாலும் கூட செம ரசனையான கடிதாங்க...

    2 , 8 வது ரொம்பவே சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டக்கு வந்த பசங்க அடிச்ச ஜோக்ஸ் தான் இது .

      தங்களின் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  6. அருணா சகோதரி மொக்கைப் பதிவும் போடுவாங்கனு தெரியுது....ஹாஹஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குப் பிடித்தமான சிறுகதையை இரண்டு பதிவாகப் போட்டேன். அதன் முடிவு பிடிக்கவில்லை என்றாலும்..... உண்மையான வாழ்க்கையில் நடப்பதைத் தான் எழுதினேன்.
      ஆனால் கதையான இருந்தாலும் திரைப்படமாக இருந்தாலும்
      ரசிப்பவர்களின் போக்கில் தான் கதையை அமைக்க வேண்டம் என்ற கட்டாயம் இருக்கிறது அல்லவா? அது கொஞ்சம் மாறியதால்..... சரி ஒரு நகைச்சுவையைப் போடலாமே என்று நினைத்தேன்.
      வீட்டில் லீவுக்கு வந்த பிள்ளைகள் சொன்ன இந்த நகைச்சுவைகள் நன்றாக இருந்ததால் எழுதி வெளியிட்டேன்.

      இதுவும் ஒரு சந்தோஷத்தைத் தானே கொடுக்கிறது.

      இனி இது போன்ற நகைச்சுவைகளைப் படித்தாலோ கேட்டாலோ உங்களுக்கும் பகிர்கிறேன்.
      நன்றி ஐயா.

      நீக்கு
  7. இப்படி அருமையான தத்துவங்களை சொல்லிட்டு கடைசியில் அதை மொக்கைன்னா எப்படிங்க

    பதிலளிநீக்கு
  8. எமதர்மனும் மக்களை கொல்லுறான் கவிஞர்களும் கவிதை எழுதி மக்களை கொல்லுறாங்க அதுக்காக எமதர்மனை கவிஞன் என்று அழைக்க முடியுமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமதர்மன் மக்களைக் கொல்லறான். ஆனால் மக்களால் எமதர்மனைக் கொல்ல முடியுமோ......

      என்னதான் நீங்கள் அதிபுத்திசாலியாக இருந்தாலும்
      பல் துலக்கும் போது இளிச்சவாயன் தான்....)))

      நீக்கு
    2. பல்லா துலக்குவதா ச்சே ச்சே அந்த பழக்கம் எங்க பரம்பரைக்கே கிடையாதுங்க

      நீக்கு
    3. நான் அப்பவே நினைச்சேன்... பல் இல்லாதவங்க எப்படி பல் துலக்குவார்கள் என்று.

      (ஆஹா... அருணா... உனக்கு அபார மூளைப்பா...)))

      நீக்கு
  9. ///நீங்க எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும், மகா வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்சாலும் கரெண்ட் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது.///

    பொண்டாட்டி பூரிக்கட்டையால் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொண்டாட்டி பூரிக்கட்டையால் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது

      இது என்னேவோ உங்கள் விசயத்தில் உண்மை தான் போல..

      நீக்கு
  10. ///தையல் போடுறாங்க என்பதற்காக டாக்டரை எல்லாம் டைலர்கள் என்று சொல்லக்கூடாது.//

    சமைச்சு தருகிறாள் என்பதற்காக மனைவியை குக் என்று சொல்லக்கூடாது


    அப்படி சொன்னால் அவள் நம்மை குக் பண்ணிவிடுவாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்கள் வேலைக்குப் போவதால்அவர்களை வேலைக்காரன் என்றா சொல்ல முடியுமா....

      நீக்கு
  11. ///நான் கேட்கிறேன்.... கழுதை தேஞ்சி கட்டெரும்பானால், அது பேப்பர் சாப்பிடுமா? சர்க்கரை சாப்பிடுமா?///

    அது சுகர் பேஷ்ண்டாக இல்லாமல் இருந்தால் சர்க்கரை சாப்பிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ... சுகர் வந்தவுங்க பெனாத்துர மாதிரியே பெனாத்துறீங்களே....

      சுகர் பேஷன்டாக் இல்லை என்றால் பேப்பரைச் சாப்பிடுமா...?

      நீக்கு
    2. நீங்க பேப்பர் சாப்பிடுபிங்களா இல்லையா என்று சொல்லுங்க அதை வைச்சே கழுதை பேப்பர் சாப்பிடுமா இல்லையா என்று சொல்லிவிடலாம்

      நீக்கு
    3. நான் கட்டெரும்பைச் சொன்னேன்..... கழுதையை இல்லை.

      நான் பேப்பரைப் படித்துச் சுவைப்பேன்.

      நீக்கு
  12. //சும்மா ஒரு மாறுதலுக்காக..... யாரும் கல்லை எடுக்காதீங்க.... ப்ளீஸ்....//

    ஆமாங்க மாறுதலுக்காக கடப்பாரையையோ அல்லது அருவாளையோ தூக்குங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கு இந்த கொலை வெறி.....

      தங்களின் வருகைக்கும் நகைச்சுவையான பின்னோட்டங்களுக்கும் மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  13. சிரிக்கவும் வைத்தன. சிந்திக்கவும் வைத்தன.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரித்தீர்களா....

      தங்களின் வருகைக்கும் ரசித்ததைப் பின்னோட்டமாக
      சொன்னதற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  14. சிந்திக்க வைக்கிறியள்
    சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
  15. மொக்கும் (மொட்டு) பூ வாகும் ஒருநாள்!
    மொக் கை-யின் "கை" எழுதிடுமோ இன்கவிதை?
    புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்“கை“ வைத்தால் மொக்“கை“யும் கவியெழுதும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நம்பி ஐயா.

      நீக்கு
    2. நன்றி நம்பி ஐயா - என்று நம்பிக்"கை" வைத்து பதில் தந்தமைக்கு மிக்க நன்றி!
      "நம்பினோர் கெடுவதில்லை இது நான்மறை தீர்ப்பு"
      வலைதளம் பக்கம் வாருங்கள் சிலை வைக்கிறேன்.
      புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)

      நீக்கு
  16. 1வாய் விட்டு (ஒலிவர) சிரித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்விட்டு நீங்கள் சிரித்தீர்களா ஐயா...
      உண்மையில் என்றோ ஒரு நாள் தான் இப்படி மனம்விட்டு சிரிக்க முடிகிறது....
      தங்களின் வருகைக்கு
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  17. ****பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். பால் போடுறவன் பால்காரன். தபால் போடுறவன் தபால்காரன்.... நான் கேட்கிறேன்.... அப்போ பிச்சைப் போடுறவன் பிச்சைக்காரனா?***

    நம்ம எல்லாருமே பிச்சைக்காரங்கதாங்க.. நாம் போடும் பிச்சை எங்கேயோ, யாரிடமோ எடுத்த பிச்சைதான். யாராவது நமக்குக் கொடுத்ததைத்தான் யாருக்காவது நாம் கொடுக்கிறோம். :) நாம் கொடுத்தது பிச்சைனா, நாம் அதைப் பெற்றதும் பிச்சைதான். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைத்து சம்பாதிப்பதைப் பிச்சை என்று சொல்வீர்களா....?

      தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா என்றார் கண்ணதாசன். ஆனால் நம்மைப் பெற்றெடுங்கள் என்று நாமாக அவர்களிடம் கேட்கவில்லையே....

      மற்றவர்களிடமிருந்து எதையுமே கொடுக்காமல் ஒன்றைப் பெறுவது தான் பிச்சை என்பது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி வருண் சார்.

      நீக்கு
    2. எனக்கெல்லாம் உழைத்து சாப்பிடுவது எளிதுங்க. ஆனால் நம்ம சுயமரியாதையை விட்டு விட்டு "பிச்சை" கேட்பதுதான் மிகவும் கடினமான ஒன்று. :( ஒருவரிடம் சிறு உதவி கேட்கவே சங்கடப்படுகிறோம். மற்றவரிடம் பிச்சை எடுப்பதென்பது ரொம்ப கஷ்டமான ஒன்று- இம்ப்பாஸிபில்னு சொல்லலாம். :(

      நீக்கு
  18. பலவற்றை ரஸித்தேன். சிரித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். உங்களை என் வலையில் கண்டதும் மகிழ்ந்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  19. பள்ளி காலத்தில் " இம்சை அரசர்கள் " என்ற தலைப்பில் மொக்கை நாடகம் எழுதிய அனுபவம் எனக்குண்டு !

    " என்ன தான் “தி மு க“ காரர்கள் மாடுகளுக்குச் செல்லம் கொடுத்து ஆசை ஆசையாய் வளர்த்தாலும், அது “அம்மா“ என்று தான் கத்தும். "

    சூப்பர அரசியல் கடி !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களுமா....? நானும் நகைச்சுவை நாடகங்கள் எழுதி இருக்கிறேன். சிறு வயதில் அது தான் என் பொழுது போக்கு. அந்த ஸ்கிரிட்டை எல்லாம் அம்மா வைத்திருப்பதாகச் சொன்னார்கள். ஒரு நாள் வாங்கி பார்க்க வேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சாமானியன்.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் “ஆகா“ என்று ரசித்தமைக்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  21. தாங்க முடியலை.

    ஆனாலும் நல்லா ரசிச்சேன் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சொக்கன் ஐயா.

      நீக்கு
  22. தங்களது பதிவுக்கு முதல் முறையாக வருகிறேன் சகோதரி நல்லாவே கடிக்கிறீங்க... நானும் இதைப்போலவே ஒருபதிவு தயார் செய்து வைத்துள்ளேன் இதை ப(க)டித்ததும் அதன் ஞாபகம் வந்து விட்டது..
    தற்போது எனது பதிவு ''தாலி''

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வருக கில்லர் ஜி.

      (ஏற்கனவே வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்)

      ஓ.... நீங்களும் கடிப்பீர்களா....? அவசியம் வருகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கில்லர் ஜி.

      நீக்கு