புதன், 21 மே, 2014

உள்ளுக்குள் மறைத்தேன்!!

        எடுப்பு

உள்ளுக்குள் மறைத்தேனடி தோழி
உணர்ந்திட அதுதேனடி!

        தொடுப்பு

சொல்லுக்குள் மறைத்தேனடி அதைச்
சொல்லிடச் சுவைத்தேனடி!

         முடிப்பு

கரும்புக்குள் இருந்திடும் கற்கண்டு
கண்களில் தெரியுமோ சொல்இன்று!
உருவத்தில் இருந்திடும் உயிர்கண்டு
ஒலித்திட முடியுமோ சொல்நின்று!       (உள்ளுக்குள்)

மலருக்குள் வீசிடும் வாசமதை
மதியுடன் பிடித்துடன் காட்டிவிடு!
கலந்திட்ட நதிகளின் நன்னீரைக்
கடலினில் பிரித்துடன் காட்டிவிடு!        (உள்ளுக்குள்)

வண்ணத்தில் ஆடிடும் ஆசைகளை
வார்த்தையில் வடித்திட ஏதெல்லை!
எண்ணத்தில் இருந்திடும் அவன்செயலை
எழுதிட நினைப்பதோ வீண்வேலை!      (உள்ளுக்குள்)


அருணா செல்வம்
21.05.2014

24 கருத்துகள்:

கும்மாச்சி சொன்னது…

இசைப்பாட்டு அருமை, வாழ்த்துகள் அருணா.

Seeni சொன்னது…

ஆஹா..
அழகிய பாடல்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகிய தமிழில் அருமையான ஒரு கவிதை! உள்ளுக்குள் மறைத்தது தெரிந்ததே!

மிகவும் ரசித்தோம்!

அம்பாளடியாள் சொன்னது…

இனிமையான கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை அருமை சகோதரி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிமை.....

Yarlpavanan சொன்னது…

சிறந்த இசைப்பாடல்

saamaaniyan சொன்னது…

" வண்ணத்தில் ஆடிடும் ஆசைகளை
வார்த்தையில் வடித்திட ஏதெல்லை! "

மிக நல்ல வரிகள் !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இனிய இசைப்பாடல் நன்று.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான பாடல்! நன்றி!

KILLERGEE Devakottai சொன்னது…

கரும்புக்குள் இருந்திடும் கற்கண்டு
கண்களில் தெரியுமோ சொல் இன்று
இனிமையான வரிகள் சகோதரி.
Killergee
www.killergee.blogspot.com

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீனி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தெரிந்துவிட்டதா...?

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

இல்லைதானுங்க....?

தங்களின் வருகைக்கும் ரசித்த வரிகளைச் சுட்டிக்காட்டி வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சாமானியன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி முனைவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

உண்மையில் எனக்கும் அந்த வரி பிடித்திருந்தது.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சகோ. (என்ன அண்ணா பேர் இது? கில்லர்ஜி...ம்ம்ம்))))

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.