வியாழன், 29 மே, 2014

பெண்களின் பார்வையில் கோச்சடையான்....!!!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
   நான் எப்படியாவது கோச்சடையான் திரைப்படத்தைத் திரையரங்கில் தான் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் அதை நேற்று நிறைவேற்றிக் கொண்டேன். ஆனால்.....

   நான், என் தோழியர் இருவர் மட்டும் படம் பார்க்கப் போவதாக முன்பே பேசி நேரம் குறித்துவிட்டோம். ஆனால்..... கடைசி நேரத்தில் எங்கள் மூவரின் கணவர்மார்களும் கூடவே வருவோம் என்று அடம்பிடித்ததால்....(?!) வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்ல நேர்ந்தது. இதனால் என்ன குறை என்கிறீர்களா....? பின்னே இருக்காதா...?
    ரஜினியின் தீவிர ரசிகையான என் ஒரு தோழி(1).... ரஜினியைத் திரையில் காட்டியதும் கைதட்டி விசில் அடிக்கப் போவதாக ஏற்கனவே சொல்லி இருந்தாள். இவர்கள் உடன் வந்ததால் மரியாதை நிமிர்த்தமாக அந்த ஆசை நிறைவேராமல் போய்விட்டதே...!!!

    நாங்கள் மூன்று பெண்கள் படம் பார்த்ததைப் “பெண்களின் பார்வையில் கோச்சடையான்“ என்ற தலைப்பிட்டது ஏன் என்றால் இரண்டு பெண்கள் சேர்ந்தாலே அதைக் கூட்டம் என்று கூறலாம் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லி இருக்கிறார். இங்கே மூவர்! தவிர பெண்கள் இரண்டு பேர் எதையாவது பேசினாலே... அதைக் கேட்கும் மற்ற பெண்களின் பேச்சும் அதுவாகவே தான் இருக்கும். அதனால் தான் இந்த தலைப்பு.
    சரி விசயத்திற்கு வருகிறேன். திரையரங்கிற்குள் போனதுமே.... “என்ன.... ஒரு டிக்கெட் 13.95 யுரோவா....? நம்ம ஊருக்கு ஆயிரம் ரூபாயிக்கு மேலேயே ஆகிறதே.... இவ்வளவு பணம் கொடுத்து பார்க்கத்தான் வேண்டுமா....? இன்டர்நெட்டிலேயே வீட்டில் பார்த்துவிடலாம்“ என்றாள் ஒரு தோழி(2) (தோழிகள் இருவரும் தன் பெயரை வெளியடுவதை விரும்பவில்லை)
   இருந்தாலும் 3டி கண்ணாடி அணிந்து ஒரு வழியாக படம் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.
   வெளியில் வந்ததும் எங்களின் கணவர்கள் எங்களை ஒரு பூங்காவில் விட்டுவிட்டு கால்பந்தாட்ட மைதானத்திற்குச் சென்று விட்டார்கள்.
   அப்பொழுது எங்களுக்குள் பேசியது. உங்களுக்கும்....

அருணா- “படம் எப்படி இருந்தது...?“
தோழி 1 – “சூப்பர். ஆயிரம் என்ன இரண்டாயிரம் கூட கொடுக்கலாம். என்னதான் அனிமேஷன் படம் என்றாலும் நம் நாட்டிற்கே உரிய கதையமைப்புக்கு கே.எஸ் ரவிக்குமாரைப் பாராட்டலாம். அதைவிட புதிய தொழில் நுட்பத்தைத் தமிழ் படத்தில் அறிமுகப் படுத்திய சௌந்தர்யாவிற்கு ஒரு சலுட் பண்ணலாம்“ என்றாள்.
தோழி 2 – “என்னமோ தெரியலையடி. ரஜினி மற்றும் மற்றவர்களையும் ஏதோ குட்டை க்குட்டையாகக் காட்டியது போல் இருந்தது. அதிலும் கோச்சடையான் உருவத்தில் இடுப்பிலிருந்து மேல் பாதியை அருமையாக வடிவமைத்துக் கீழ் பாதியைக் குட்டையாகவும் கோணல் காலாகவும் இல்லாமல் வடிவமைத்து இருக்கலாம்.“
அருணா – “ஏய் இப்படியெல்லாம் சொல்லாதே. ரஜினி ரசிகர்கள் உன்னைச் சும்மாவிட மாட்டார்கள்.“
தோழி 2 “அதற்கெல்லாம் நான் கவலை படலை. நான் உண்மையைத் தான் எப்பொழுதும் பேசுவேன். அந்தக் கதாநாயகி உருவத்தில் ஏன் கண்களுக்கு அவ்வளவு மை? அந்த தீபிகா படுகோணுடைய அழகு அதனால் கொஞ்சம் குறைவாகவே தான் தெரிந்தது. ஒரு முறை தான் உருவத்தை வடிவமைக்கிறார்கள். அதை அழகாக செய்திருக்கலாம்.“
அருணா – “நீ இதையெல்லாத்தையும் கூட பாப்பியா...?!“
தோழி 1 – “அவளை விடுடி. நான் சொல்லுறதைக் கேள். ஒளிப்பதிவு ராஜிவ் மேனன். என்னமா அற்புதமாக இருந்தது. நாம எதிர்பார்க்காத இதுவரையில் பார்த்திராத பிரமான்டமான அரண்மனை அமைப்புகள். அதில் வடிவமைத்துள்ள சிலைகள் அற்புதம். பாடல் காட்சிகளில் அந்த மலையமைப்புகள்.... பள்ளத்தாக்குகள்.... சோலை.... அடடா... நாம் வாழ்நாளிலே உண்மையில் இந்த மாதிரியெல்லாம் பார்க்கவே முடியாது. கண்கொள்ளா காட்சிகள்“
தோழி 2 – “ஆமா.... எல்லாம் அனிமேஷன் தானே. ஏதோ எல்லாம் கிட்டகிட்ட தெரியும் என்று பார்த்தால்... தொடக்கத்தில் சூப்பர் ஸ்டார் எழுத்து மட்டும் தான் கிட்ட தெரிந்தது. மற்றதெல்லாம் சாதாரணமாகத் தான் இருந்தது. வாள் வீசும் பொழுது, சண்டையிடும் பொழுதெல்லாம் இந்த 3டியைக் கொஞ்சம் பயன்படுத்தி இருந்தால் கொஞ்சம் திகிலுடன் படம் பார்த்தது போல் இருந்திருக்கும்.“
தோழி 1 – “அப்படி இருந்தால் சின்ன பிள்ளைகள் பயப்படும் என்று தான் அப்படி எடுக்கவில்லை. சும்மா இரு. எதையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்காதே. சரி. படத்தோட பாடல் எப்படின்னு சொல்லு.“
தோழி 2 – “எட்டு பாட்டு. கேட்க கேட்கத் தான் மனசுல பதியும்ன்னு நினைக்கிறேன். கோச்சடையானக பாடும் பாடலில் உள்ள கருத்துக்கள் ஏற்கனவே கேட்டது போலவே இருக்கிறது. ஒரு சமயம் வைரமுத்து வரிகளோ.... ஆனால் நான் இசையமைப்பைக் குறையே சொல்ல மாட்டேன்ப்பா. ஏ.ஆர்.ரகுமான் சும்மா வெளுத்துக் கட்டியிருக்கிறார்.“
அருணா – “படத்துல வர்ற நாகேஷ் கேரட்டரைப் பற்றி எதுவுமே சொல்லலையே.“
தோழி 2 – “புது உத்தி தான். பாராட்டலாம். ஆனால்.... இப்பொழுது வாழும் பழங்கால நடிகருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம்.“
தோழி 1 – “நீ எதையாவது குறை சொல்லிக்கிட்டே இரு. உண்மைய்யைச் சொல்லுடி. இந்த படத்தில் நீ நிறைவாக எதையும் நினைக்கலை...?“
தோழி-2 - ஏன் இல்லை. நாம் கொடுத்த பணம், ரசினி கோச்சடையானாக ஒரு ருத்திர தாண்டவம் ஆடுகிறாரே.... அது ஒன்றுக்கே செரித்துவிடும். நான் மிகவும் இரசித்த காட்சி அது. சரி அருணா. கோச்சடையானுக்கு எவ்வளவு மார்க கொடுக்கலாம்.
அருணா – மார்க்கா...?
புது தொழில் நுட்பத்திற்கு
ரஜினி + சௌந்தர்யா      – 20
இசை                    - 10
கதை வசனம்            - 10
ஒளிப்பதிவு               - 10
சண்டை பதிவு           - 10
மற்றவை                - 5

மொத்தம் நாற்றுக்கு 65 மார்க் கொடுக்கலாம்பா. என்னடி நான் சொன்ன அளவு சரியா...?
தோழி -2 சரியான அளவு தான்.
தோழி -1- ஓரளவிற்கு சரிதான். என்று முடித்தாள்.

அருணா செல்வம்

29.05.2014

27 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஹி ஹி ஹி....அப்படியெல்லாம் இல்லை ஸ்ரீராம் ஐயா.
      நான் படம் பார்த்துவிட்டதை உங்களுக்கெல்லாம் தெரிவித்தேன்ங்க.

      திரைப்பட விமர்சனம் பண்ணுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லைங்க.
      நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  2. சரி சரி பார்த்துட்டீங்க! நாங்க இன்னும் பார்க்கலை....
    பார்க்கணும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரியும் நீங்கள் ஏன் இவ்வளவு கோபப் படுகிறீர்கள் என்று.....
      நீங்க திருவரங்கத்தில் இருந்தும் படம் பார்க்க முடியலையே என்ற கடுப்பு தானே..... டெல்லியில் இருந்திருந்தால் எப்பவோ இண்டர்நெட்டில் படம் பார்த்திருக்கலாமே என்ற கோபம் தானே....))))

      திரையரங்கில் போய் பாருங்கள் நாகராஜ் ஜி. நன்றி.

      நீக்கு
  3. அறிஞர் சொன்னது சரி தான்... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொன்னதாக சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று தான் அறிஞர் என்று எழுதினேன். அப்பாடா.... எப்பயோ ஏற்றுக் கொண்டீர்கள்.
      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு

  4. நான் படத்தை பார்க்கமலே சொல்லுவேன் 65 மார்க் ரொம்ப அதிகமே என்று. ஒருவேளை நீங்கள் தமிழ் டிச்சராக இருந்திருப்பீர்கள் அதனால்தான் இப்படி மார்க்கை அள்ளிக் கொடுத்திருக்கீங்க பள்ளி பரிட்சையில் விடைகள் சுமாராக இருந்தாலும் அழகான எழுதுக்கு, தெளிவான படத்திற்காக மார்க் சற்ரு அதிகம் போடும் டீச்சரை போலதான் நீங்கள் இட்ட மார்க்கும் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் “உண்மைகள்“

      எப்படி நீங்கள் படத்தைப் பார்க்காமலேயே இதைச் சொல்கிறீர்கள்....? நீங்க பெரிய ஞானிங்க.


      “பள்ளி பரிட்சையில் விடைகள் சுமாராக இருந்தாலும் அழகான எழுதுக்கு, தெளிவான படத்திற்காக மார்க் சற்ரு அதிகம் போடும் டீச்சரை போலதான் நீங்கள் இட்ட மார்க்கும் இருக்கிறது“-

      உண்மை தான். படம் மொத்தம் நாற்பத்தைந்து மதிப்பெண் தான் பெரும். மீதி இருபது..... புது தொழில் நுட்பத்தைத் தமிழில் முதன்முறையாக கொண்டு வந்த செந்தர்யாவிற்கு “ஊக்க“ மதிப்பெண்.

      அடுத்து நான் தமிழ் டீச்சர் இல்லைங்க. இருந்திருந்தால் இவ்வளவு தாராளமாக மதிப்பெண் கொடுத்திருக்க மாட்டேன்.

      நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  5. நான் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சினிமாவே பார்ப்பதில்லை[நம்புவீர்களா?]. ஆனாலும், உங்கள் சினிமா விமர்சனப் பதிவைப் படித்துச் சுவைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாதுதுதுதுது..... பதினைந்து ஆண்டகளாக சினிமா பார்ப்பதில்லையா....?
      என்ன ஐயா இப்படி செய்துவிட்டீர்கள்...? வாழ்க்கையில் நிறைய சந்தோஷங்களை இழந்து இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பேராசிரியர். என்னதான் சங்க இலக்கியத்தையும், இன்றைய எழுத்துக்களையும் படித்துக்கொண்டே இருந்தாலும்.... நாம் நம்மை மறந்து கொஞ்சம் நேரம் இருக்கிறோம் என்றால் அது சினிமாவால் தான் சாத்தியம் என்று நான் நினைக்கிறேன் ஐயா.
      உங்களைப் போன்று சொல்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரையரங்கிற்குப் போய் படம் பார்ப்பதில்லை. ஆனால் வீட்டியேலே பார்த்து விடுகிறார்கள்.
      நீங்கள் சினிமாவே பார்ப்பதில்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை தான் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காமக்கிழத்தன் ஐயா.

      நீக்கு
    2. @அருணா செல்வம்

      நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. உண்மையை சொல்ல போனால் சினிமா பார்க்க பார்க்க நம்து மனதின் ஒருநிலைப்படுத்தும் தன்மை குறைந்துவிடும். அது மட்டுமில்லாமல், அது எவ்வளவு தான் அழகாக தோன்றினாலும் நமது பாரம்பரியத்தை அழிப்பதில் அதற்கும் பண்பு உண்டு.

      உலகில் பல பேர் தவறான வழியில் செல்லும் பொழுது நேர் வழியில் செல்லுமொரு மாமனிதரை இப்படி சொல்லார்தீர்கள்

      நீக்கு
  6. உங்கள் தோழிகளின் உரையாடல் மூலம் அழகாக விமர்சனம் வைத்து 65 மார்க்கும் கொடுத்துவிட்டீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  7. நான் இன்றைக்குப் போய்ப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். உரையாடல் மூலம் படத்தினைப் பற்றிய மூவரின் கருத்துக்களையும் படிக்கையில் வெகு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தைப் போய் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கணேஷ் ஐயா.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி
    படம் இன்னும் பார்க்கவில்லை. தங்கள் பதிவைப் பார்த்த பிறகு படம் பார்க்காமல் இருக்க முடியாதே! இன்றே செல்ல வேண்டுமெனும் ஆவல் பிறந்திருக்கிறது. அழகான அதே சமயம் நேர்மையான பார்வை. கோச்சடையான் உங்கள் (பெண்கள்) பார்வையில் பாஸ் ஆகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாண்டியன்.

      நீக்கு
  9. ஹா..‍ஹா...

    பெண்களின் பார்வை, 13.95 யூரோ டிக்கெட், கால்பந்தாட்ட மைதானத்துக்குள் நுழைந்த கணவன்மார்கள் என ஒரு திரை விமரிசனத்துக்குள் பல சமூக செய்திகள் ! அருமை !!

    படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை,ஆனால் தமிழ் சினிமாவின் அனிமேசன் முயற்சி என்ற வகையில் நிச்சயம் பாராட்டலாம்.

    ( எனது புதிய பதிவு : முபாரக் )

    http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சாமானியன்.

      நீக்கு
  10. பார்க்கவில்லை இன்னமும்
    விமர்சனம் வித்தியாசமகச் செய்திருந்தீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி டாக்டர்.

      நீக்கு
  11. தங்கள் சிறந்த மதிப்பீட்டை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. சிறப்பான விமர்சனம்! புதிய முறையில் எழுதியமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. விமர்சனம் நல்ல முறையில் அமைந்திருந்தது. போர் அடிக்காமல் சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள் அதற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். நான் படம் பார்த்தேன் முதல் படம் தானே இது, அபாரம் என்றே எனக்கு தோன்றியது. புதிய தொழில் நுட்பத்தில் நம் பாணியில் கதையும் காட்சிகளும் அமைந்தது உண்மையில் சிறப்பே. அனைவரும் அரும்பாடு பட்டு எடுத்திருக்கிறார்கள். குறைகள் இருக்கலாம் அதை நான் குறையாக காணவில்லை ஏனெனில் ஒரு குழந்தையின் சித்திரத்தை குழந்தையின் உருவில் தான் ரசிக்கலாம்.
    பெரியவரின் சித்திரத்தை ஒப்பிட்டு பார்க்க முடியாதல்லவா? என்பதாலோ என்னவோ தான். கார்டூன் தானே என்று அரை மனதோடு தான் சென்றேன். பின்னர் நன்றாக ரசித்தேன். நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு