செவ்வாய், 27 மே, 2014

நித்திரை போனதடி!!நித்திரை போனதடி! நெஞ்சு நினைவிலே
சித்திரைச் சூரிய வெக்கையடி! கன்னத்தில்
முத்திரை வேண்டுமடி! மூடியதை என்றுமே
பத்திரமாய் வைத்திருப்பேன் பார்!

நித்திரை போனதடி! நெஞ்சு நினைவிலே
சித்திரைப் பெண்ணுன் சிரிப்படி! - பாத்திறம்
பாடிடும் பாவையுன்னைப் பார்த்திடும் போதெல்லாம்
பாடிடுவேன் நானும்ஓர் பாட்டு!

நித்திரை போனதடி! நெஞ்சு குழியிலே
சித்திரைச் சூரிய வெக்கையடி! – சித்திரமே
செவ்வானம் சிந்தும் மழையாக உள்ளதடி
செவ்விதழ் சிந்தும் சிரிப்பு!

நித்திரை போனதடி! நெஞ்சம் உருகுதடி!
சித்திரை காயுதடி சிந்தையிலே! – கத்தரி
முற்றிக் கிடக்குதடி! முத்தமிழே நீயின்றி
வற்றி வறண்டதடி வாழ்வு!

அருணா செல்வம்

04.04.2010

24 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

நன்றாக இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வெண்பாக்கள் அனைத்தும் நன்பாக்கள்

Unknown சொன்னது…

#கத்தரி
முற்றிக் கிடக்குதடி! #
கத்தரி வெயிலால் வறண்டு போனதோ வாழ்வு ?
த ம 2

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆஹா...! வாழ்த்துக்கள் சகோதரி...

ஜீவா சொன்னது…

சூப்பர்

ஊமைக்கனவுகள் சொன்னது…

இன்னும் எழுதத் தூண்டும வெண்பாக்கள்.

நித்திரை போனதடி! நெஞ்சில்நீ சாய்ந்துறங்கச்
சத்தமிலா மார்பு செத்திடவும் - நித்தநித்தம்
ஏங்கிநான் இங்கிருப்பேன் என்னை அறியாதுன்
தூங்கித் தொடரும் துயில்!
நன்றி!

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதம்
சொக்கவைத்தது தங்கள் வெண்பா
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha,ma 5

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை. பாராட்டுகள்.

காமக்கிழத்தன் சொன்னது…

சித்திரைச் சூரியனில் வெக்கை.
அதைப் பேசும் உங்கள் கவிதைகளில் குளிர்ச்சி!

கவிதைகள் நன்று.

Yarlpavanan சொன்னது…

நித்திரை போனதடி!
சித்திரை காயுதடி – கத்தரி
முற்றிக் கிடக்குதடி!

சிறந்த சொல்லாட்சி
சிறந்த கவிதை

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

(உங்களின் பதிவில் நான் கருத்து பதிய முன்வந்தால் தமிழ் எழுத்து வருவதில்லை. காரணம் தெரியவில்லை.)

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

நான் வெண்பா எழுத கற்றுக்கொண்ட துவக்கத்தில் “நித்திரை போனதடி“ என்ற தலைப்பில் வெண்பா எழுத சொன்னார்கள்.
நானும் மாற்றி மாற்றி எழுதிப்பார்த்து தான் இது.
நித்திரை போனது சித்திரை பெண்ணால் தான் என்றும்... சித்திரை மாதத்தில் காய்க்கும் கத்தரியையும் சேர்த்து எழுதினேன்.
நன்றி பகவான்ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

(நீங்கள் எழுதிய “அதே“ மின் அஞ்சலுக்கு இன்று ஒரு மெயில் அனுப்பினேன். திரும்பிவிட்டது !!!! உங்களின் வீட்டு தொலைபேசி எண்ணை எனக்கு கொடுக்க முடியுமா? )

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காயத்ரி.

அருணா செல்வம் சொன்னது…

அருமை ஜோசப் ஐயா.
நான் வெண்பா கற்றுக்கொண்டவுடன் எழுதிய பாடல்கள் இது.

தங்களின் வருகைக்கும் படலுக்கும்
மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காமகிழத்தன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.