திங்கள், 5 மே, 2014

சட்டென்று வந்துவிடு!!






நட்டநடு இரவினிலே
நற்பாடல் நானெழுதக்
கொட்டகொட்ட விழித்திருந்தேன்
கோணச்சொல் வரவில்லை!

பட்டமர வாழ்வதையும்
பளிங்குபோல் காட்டவரும்!
பட்டுவிரி வாழ்வதையும்
பளபளக்க எழுதவரும்!

எட்டிஎட்டி யோசித்தேன்
எட்டாமல் போனதனால்
எட்டாமல் ஏமார்ந்த
இளநரியின் நிலையானேன்!

கட்டான கவியெழுதக்
கவித்தமிழே எங்குநின்றாய்?
சட்டென்று வந்துவிடேன்
சந்தமுடன் எழுதிவிட!

மொட்டொன்று பூப்பதுபோல்
முகமலர்ந்து சிரிப்பாயே!
மெட்டோடு கவியெழுத
மெதுவாகச் சிரித்துவிடேன்!

பட்டென்று கண்ணிரண்டும்
படபடக்க பார்ப்பாயே!
பாட்டொன்று நானெழுதப்
பார்க்காமல் பார்த்துவிடேன்!

அருணா செல்வம்
06.05.2014

26 கருத்துகள்:

  1. சட்டென அழகாக வந்து விட்டதே...

    ரசித்தேன் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. கட்டான கவியொன்னை
    சந்தமுடன் நீர் எழுத
    சட்டென்று வந்துவிட்ட
    கவிதை அருமை சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. வாவ்...! கவிதை எழுதுவதற்கான அவஸ்தையையே தனிக் கவிதையாக அழகுற வடித்து அசரடித்து விட்டீர்களே அருணா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்தீர்களா....?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கணேஷ் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அந்தப் படத்தைத் தானே சொன்னீர்கள்....?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவிதை வீதி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தளிர்.

      நீக்கு
  7. இதோ வந்து விட்டதே இனியும் என்ன வேண்டும் ?..எதுகை மோனைகள் எல்லாமும் உனக்குள்ளே தான் என் தோழியே வளமான தமிழ்கொண்டு இதமாக பாடி விடு வாழ்த்துச் சொல்லியே நாமும் மகிழ்வோம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ எழுதப்போய் இப்படி வந்துவிட்டது...
      இருந்தாலும் இதுவும் நன்றாகத் தானே இருக்கிறது என்று வெளியிட்டு விட்டேன் தோழி.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  8. /// நட்டநடு இரவினிலே
    நற்பாடல் நானெழுத
    கொட்டகொட்ட விழித்திருந்தேன்///

    அழகான பெண் கவிஞரல்லவா இவ்வளவு நாளா கவிதை எழுதி வந்தது என்று நினைத்த எனக்கு இன்றுதான் புரிந்தது ஒரு மோகினி பிசாசு நடு இரவில் கண்கொட்ட விழித்து எழுதி வந்ததது என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகினி பிசாசும் அழகான பெண்ணைப் போல தான் இருக்குமாம்.

      நீக்கு
  9. கவிதை எழுதுவதில் இவ்வளவு அவஸ்தையா நான் என்னவோ தமிழில் புலமை பெற்றவர்கள் கிறுக்குவது எல்லாம் கவிதை என்று நினைத்து இருந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழில் புலமை பெற்றவர்கள் கவிதையாகவே கிறுக்குவார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  10. பதில்கள்
    1. பரிந்துரையில் நானும் பதிந்திட தந்தீர்
      அறிந்து மகிழ்ந்திட்டேன் ஆழ்ந்து!

      நன்றி கவிஞர்.

      நீக்கு
  11. சட்டென வந்துவிட்டதே
    கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்
    தொடர வைத்தவர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு