வெள்ளி, 28 ஜூன், 2013

கிழிந்துபோன ஜீன்சு!!





கிழிந்துபோன ஜீன்சுபோட்டு, செம்மண் வண்ண
    கேசத்தைச் சீவிஉடன் அலைத்து விட்டு,
மழித்துவிட்ட தாடிமீசை, பேரண்ட் லவ்லி
    மணக்கின்ற முகம்மின்ன, சோலை பொம்மை
பழிக்கின்ற தொளதொளக்கும் சட்டைப் போட்டு,
    பளீரென்று அடிக்கும்நைக் செருப்பும் போட்டு
விழித்தவுடன் நான்பார்க்க எதிரில் நிற்பான்!
    விடிந்ததேனோ? விதியைநொந்து நானும் பார்ப்பேன்!!


(நமது மதுரை தமிழன் அவர்கள், “எங்களுக்குத் தேவை இந்த காலத்துக் காதலனைப் பற்றி பெண் பாடுவது மாதிரி பாடல் வேணும்“ என்று கேட்டதினால் எழுதினேன். நன்றி.)

அருணா செல்வம்.
28.06.2013
   

35 கருத்துகள்:

  1. விதியை நொந்து...?!!! சரி தான்...

    நல்லது சகோதரி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. மதுரைத் தமிழா.... இனி இப்படிக் கேப்பியா? கேப்பியா? ஹி... ஹி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏங்க இப்படி மிரட்டீனீங்க...?

      இந்த மாதிரி ஆவலுடன் பாடலை கேட்கும்
      இரசிகர்கள் கிடைக்க மாட்டார்களா... என்று
      ஏங்கும் எனக்கு ஒரு இரசிகராவது கிடைத்தாரே
      என்ற சந்தோஷத்தைத் தகர்த்து விட்டீர்களே... நியாயமா...?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கணேஷ் ஐயா.
      ( பாடல் அந்த அளவிற்கா கஷ்டத்தைக் கொடுத்தது?)

      நீக்கு
  3. இனிமே கேட்கமாட்டேன் கேட்கமாட்டேன் கேட்கமாட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “உண்மைகள்“ கணேஷ் ஐயா சொன்னதிற்காகவா
      இப்படி பயந்து விட்டீர்கள்....? அதெல்லாம் பயப்படக் கூடாது.

      மதுரை தமிழன் இந்த மாதிரி பாட்டுக்கெல்லாம்
      பயப்படலாமா...?

      தங்களின் வருகைக்கு நன்றி “உண்மைகள்“


      நீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. பரவாயில்லை. நல்ல கவி முயற்சி. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நிரஞ்சன் தம்பி.

      நீக்கு
  6. சோலை பொம்மை
    பழிக்கின்ற தொளதொளக்கும் சட்டைப் போட்டு,//

    விடிந்ததேனோ? விதியைநொந்து நானும் பார்ப்பேன்!!

    படமும் பகிர்வுகளும் நிதர்சனத்தைப் படம்பிடித்துக்காட்டுகின்றன..!

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. உண்மையில் இது நன்றாக இருக்கிறதா...?

      அப்போ... ரொம்ப நன்றிங்க நாகராஜ் ஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஆமாம்.. காலத்திற்குத் தகுந்தார் போல்
      நாமும் இரசிக்கனும்.

      நன்றி சசிகலா.

      நீக்கு
  9. விதியைநொந்து நானும் பார்ப்பேன்!
    >>
    இப்படி நொந்துக்கிட்டு பார்க்குறதுக்கு பார்க்காமலே இருக்கலாம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எப்படிங்க...?
      குதிரைக்கு வாழ்க்கைப்பட்டால் கொள்ளு தின்னு தான் ஆகனும்.

      நன்றி ராஜி மேடம்.

      நீக்கு
  10. //கிழிந்துபோன ஜீன்சுபோட்டு//

    கிழிக்கப்பட்ட ஜீன்ஸ் தான் சரி; கிழிக்க முடியாத ஜீன்சை கிழித்து போடும் நாகரீகம் இது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிழிக்கப்பட்ட ஜீன்சைப் போட்டு இருந்தாலும்
      அதுவும் கிழியும் வரை போட்டுக்கொண்டு
      திரிகிறவர்களைச் சொன்னேன் நம்பள்கி.

      நன்றி நம்பள்கி.

      நீக்கு
  11. தட்டினால் திறக்கப்படும் என்பது போல கேட்டது கிடைக்கிறது! நன்றி! நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர்களுக்கு இதுவும் ஓர் இன்பம் தானே புலவர் ஐயா.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  12. வர்ணனை அருமை தோழி. வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ இது வர்ணனை இல்லைங்க. நிதர்சனம்!!

      நன்றி தோழி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார் ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. இப்பொழுதெல்லாம் இப்படித்தான் விடிகிறது.

      நன்றி விமலன் ஐயா.

      நீக்கு
  15. ///மதுரை தமிழன் இந்த மாதிரி பாட்டுக்கெல்லாம்
    பயப்படலாமா...?///

    நாங்க [வீட்டிலே] கேட்காத பாட்டா? சில சமயம் தாளத்துடன் கச்சேரியே [எங்க மேல] அரங்கேறும்! நாங்க யாரு? எங்க போக்குவரத்து என்ன? உரலில் தலையைக் கொடுத்தாகிவிட்டது...

    இந்திய பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்ற குறிக்கோள் நிறைவேற வேண்டுமீன்றால்...இதையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி.... இந்தியப் பெண்கள் என்பதால்
      இந்த அளவோடு முடிந்துவிடும் என்பதை மனதில் வைத்துச்
      சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்.

      நாங்க [வீட்டிலே] கேட்காத பாட்டா?

      ஓ... நீங்கள் நிறைய பாட்டு கேட்கிறீர்களா...? அதனால் தான் எதிர்பாட்டு எல்லாம் பாடுகிறீர்களா...?
      ஆனால் ஒன்று மட்டும் தெரியுதுங்க. உங்க பாட்டுக்கு யாருமே எதிரா வாயைத் திறக்கமாட்டேங்கிறாங்க....

      நன்றி நம்பள்கி.

      நீக்கு
    2. ///நாங்க [வீட்டிலே] கேட்காத பாட்டா? சில சமயம் தாளத்துடன் கச்சேரியே [எங்க மேல] அரங்கேறும்! நாங்க யாரு? எங்க போக்குவரத்து என்ன? உரலில் தலையைக் கொடுத்தாகிவிட்டது...///


      அதனால் தான் நம்பள்கியும் சரி , நானும் சரி யாருக்கும் பயப்படாமல் எழுதுகிறோம்

      நீக்கு

    3. மனைவியை ஒருத்தன் சமாளித்து வாழ்கிறான் என்றால் அவன் உலகத்தையே எளிதாக சமாளித்து விடுவான்

      நீக்கு
    4. “அதனால் தான் நம்பள்கியும் சரி , நானும் சரி யாருக்கும் பயப்படாமல் எழுதுகிறோம்“

      தலைக்கு மேல் வெள்ளம் போகிறது. ஜான் போனால் என்ன?
      முழம் போனால் என்ன?... என்பது போலவா?

      “மனைவியை ஒருத்தன் சமாளித்து வாழ்கிறான் என்றால் அவன் உலகத்தையே எளிதாக சமாளித்து விடுவான்“

      அடடா... தத்துவம்... தத்துவம்... ம்ம்ம்.
      (குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் “உண்மைகள்“)

      நீக்கு
  16. அவ்வளவு மோசமாகவா இருக்கிறார்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பார்த்ததில்லையா...?

      இங்கே (பிரான்சு)வந்து பாருங்கள்...
      இந்த டீன்ஏஜ் பசங்க போடுகிற உடை...
      பார்க்க சகிக்கவில்லை...

      நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  17. \\மழித்துவிட்ட தாடிமீசை, பேரண்ட் லவ்லி
    மணக்கின்ற முகம்மின்ன,\\

    இந்த வரிகளில் மட்டும் இந்தியப் பெண்களின் ரசனை குறித்து சந்தேகம். தாடி மீசை வைத்துப் பரட்டைத் தலையுடன் திரியும் ஆண்களைத்தான் விரட்டி விரட்டிக் காதலிப்பதாகத் திரைப்படங்கள் காட்டுகின்றனவே... ரசனை மாறிவிட்டதா நம் பெண்களுக்கு? அல்லது திரைப்பட நாயகர்கள் மட்டும் விதிவிலக்கா? புரியவில்லை.

    எப்படியோ... கேட்டவுடன் கேட்டபடி இக்காலக் காதலனின் சகிக்கவியலாத் தோற்றத்தையும் மரபுப்பாவாய் தந்து ரசிக்கவைத்துவிட்டீர்கள். பாராட்டுகள் அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு