வியாழன், 13 ஜூன், 2013

நாங்க.. அப்பவே அப்படி!! (நிமிடக்கதை)


   “டேய் மூர்த்தி.... உன்னால இதை நிச்சயம் செய்ய முடியாதுடா...“ மூர்த்தியைப் பார்த்து அலட்சியமாகச் சொன்னான் கார்த்தி.
    “டேய் கார்த்தி... நான் மட்டும் மனசு வச்சேன்னா... இந்த ஊரையே நடுஜாமத்துல தனியா சுத்தி வந்திடுவேன் தெரியுமா....?“ மார்பினைத் தட்டிச் சொன்னான் மூர்த்தி. தட்டியதால் அவனின் அழுக்குச் சட்டையில் படிந்திருந்த தூசி பறந்தது.
    “இந்த ஊரையெல்லாம் நீ சுத்த வேணாம். நாளைக்கி மதியானம் பகல் பன்னென்டு மணிக்கு நம்ம ஊர் சுடுகாட்டுக்குப் போய் ஒரு புடி மண்ணைக் கொண்டாந்தால் போதும். நீ பெரிய இவன்னு நாங்க ஒத்துக்கிறோம்.“ சுதாகர் உதட்டைப் பிதுக்கி நையாண்டியுடன் சொன்னான்.
   “டேய்... அவனே ஒரு தொடைநடுங்கி... அவன்கிட்ட போய் இந்த மாதிரி சேலஞ்சியெல்லாம் வச்சிக்கினு.... விடுங்கடா பாவம் அவன். மூர்த்தி... நீ போடா. உன்னோட ஆத்தா காத்திருக்கும். பழைய கஞ்சிய குடிச்சிட்டு தூங்கு. போ. எங்க கூட இருக்கனுமின்னா அதுக்கு ஒரு தகுதி வேணும். சும்மா டவுனு பள்ளிக்கூடத்துல படிச்சிட்டா மட்டும் போதாது. போ“ என்றான் குமரன்.
   விடுமுறைக்கு வந்தவனை அவனின் பழைய நண்பர்கள் இப்படி அலட்சியப்படுத்தியதை மூர்த்தியால் தாங்க முடியவில்லை. அவன்களிடம் தான் தைரியசாளி தான் என்பதை நிருபிக்க வேண்டும். ஆனால் சுடுகாட்டிற்குப் போகனுமாம். அதுவும் பகல் பன்னென்டு மணிக்கு... அந்த நேரத்தில் சுடுகாட்டு பேயெல்லாம் சாப்பிடுவதற்காக யாராவது வர்றாங்களான்னு காத்திருக்குமாம். அப்பாத்தா சொன்னது இன்னும் மூர்த்தியின் காதில் ஒலித்தது. முடியுமா...? நினைத்தாலே பயம் நெஞ்சை அடைத்தது. இருந்தாலும் இதை இப்படியே விடக்கூடாது. சற்று யோசித்தவன்...
    “சரிடா. நாளைக்கி பகல் பன்னென்டு மணிக்கு நான் தனியா போய் சுடுகாட்டுல இருந்து ஒரு கைநிறைய மண்ணு கொண்டு வர்றேன். ஆனால் அதன் பிறகு என்னை யாரும் தொடைநடுங்கின்னு சொல்லக் கூடாது என்ன...“ என்றான் மூர்த்தி.
    “ஓ... உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா? சரிடா. நீ மட்டும் மண்ணைக் கொண்டுவா. நீ பெரிய தைரியசாலின்னு நாங்க ஒத்துக்கினு உன்னை எங்களோட திரும்பவும் சேர்த்துக்கிறோம்“ என்று குமரன் சொல்ல மற்றவர்களும் தலையாட்டினார்கள்.

   மறுநாள் மூர்த்தி கொண்டுவந்து மண்ணைக் காட்ட... மற்றவர்கள் ஒருவர் முகத்தை ஒருவராகப் பார்த்தார்கள்.
   “டேய்... பாத்திங்களாடா. நானே தனியா சுடுகாட்டுக்குப் போய் கொண்டு வந்தேன். இப்போ என்னடா சொல்லுறீங்க...?“ மூர்த்தி கர்வத்துடன் கேட்டான்.
   மற்றவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் மூர்த்தி உண்மையிலேயே சுடுகாட்டிலிருந்து தான் மண்ணை எடுத்துக்கொண்டு வருகிறானா... என்று அவனுக்குத் தெரியாமல் அவன் பின்னாலேயே சென்று பார்த்தார்களே...!! அவன் தைரியசாலி தான் என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும்.
   “சரி சரி. நீ தைரியசாலி தான். ஆனால் எப்படிடா அந்த நேரத்துல தனியா சுடுகாட்டுக்குப் போன?“ கார்த்தி ஆச்சர்யம் மாறாமல் கேட்டான்.
   “நான் எங்கடா தனியா போனேன். நான் உண்மையிலேயே சுடுகாட்டுக்குத் தனியாதான் போகிறேனா? சுடுகாட்டுல தான் மண்ணை எடுக்கிறேனான்னு பார்க்க என்னை நம்பாமல் நீங்களும் என் பின்னாடியே வருவீங்கன்னு எனக்குத் தெரியாதா...? நீங்க என் கூட வர்ற தைரியத்துல தான் நான் போய் மண்ணு எடுத்தேன். டேய்... நானும் உங்க ஃபிரெண்டு தான்டா...“ என்று சிரித்தான் மூர்த்தி.

அருணா செல்வம்.
13.06.2013
  


  

34 கருத்துகள்:

  1. குட்டிக்கதை அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  2. அருமை அருமை
    பாம்பின் கால பாம்பு அறியும் மாதிரி...
    நண்பர்களைப்பற்றி நண்பனுக்கும் தெரியும்
    என்பது மிகச் சரி
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வெவரமான “பையன்“ என்று சொல்லி இருக்கலாம்.
      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. கதை அருமை தோழி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  6. அதானே... தைரியம் இருக்கிறதோ இல்லையோ புத்திசாலித்தனம் இருக்கிறது. அதனால் பிழைத்துக்கொண்டான் பிள்ளை! அழகான கற்பனை என்றாலும் அதிலுருக்கும் உண்மையும் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தாங்க கதையைக் கதையாகப் படிக்கிறீர்கள்....
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  7. கதை நல்லாயிருந்துச்சு....

    பதிலளிநீக்கு
  8. எங்க ஊருலயும் இந்த கதை சொல்வாங்க.. ஆனா, கிளைமேக்ஸ் வேற மாதிரி இருக்கும்.., சரி, என்ன அதுன்னு கேக்குறீங்களா?! அதை நான் ஒரு பதிவா போடுறேன்.., ஒரு பதிவை தேத்த ஹெல்ப் பண்ணாதுக்கு நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ... ஒவ்வொரு ஊருலேயும் இப்படி ஒரு கதை இருக்கிறதா...? நான் கற்பனையில் எழுதுவதும் நிஜமாவே நடக்கிறதா....?
      ஆனால் வேற க்ளைமேக்ஸ்....!! என்னவாக இருக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். சீக்கிரமாக உங்களின் பதிவை இடுங்கள்.
      நன்றி ராஜி மேடம்.

      நீக்கு
  9. நல்லா வெவரமாத்தான் இருக்குது புள்ள! சிறப்பான குட்டிக்கதை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. உயர்ந்திட ஓட்டை அளித்திட்டீர்! வாழ்த்த
      தயங்துவதேன் நற்றமிழில் சொல்!

      நன்றி கவிஞர்.

      நீக்கு
  11. முடிவை எதிர் பார்க்கவில்லை. கதையிலும் கலக்குகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...?
      இது குட்டிக்கதை தானே...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  12. அட இது எப்புடி என் கண்னிலிருந்து மீண்டும் எஸ்க் ஆச்சு....

    ம்.ம் ரசித்தேன். நீங்க அப்பவே அப்படீன்னு...:).
    வாழ்த்துக்கள் தோழி!

    த ம. 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் என் பதிவு உங்களின் கண்ணிலிருந்து எஸ் ஆனாலும் அதைப் பிடித்துப் படித்துக் கருத்துடன் ஓட்டும் போட்டு என்னை என்றென்றும் ஊக்குவிக்கும் தோழியே... மிக்க நன்றி.

      நீக்கு
  13. தன் நண்பர்கள் மேல் இப்படி ஒரு நம்பிக்கை.... :)

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம நண்பர்கள் இல்லையா...?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  14. ramani sir kooriyathai nan vazhimozhigiren..arumaiyana kathai thozhi..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  15. அன்பின் அருணா செல்வம்

    இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - கதை அருமை - செல்லும் விதம் இயல்பாக இருக்கிறது - நச்சென்று முடிகிறது - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  16. அன்பின் அருணா செல்வம் - இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - கதை இயல்பாகச் சென்று நச்சென்று முடிகிறது. இரசித்தேன் - நல் வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  17. எதிர்பாராத முடிவு. இப்படித்தான் ஏதாவது ஒரு நம்பிக்கையில் தான் வாழ்க்கை நகர்கிறது.

    பதிலளிநீக்கு
  18. நாலு நண்பர்கள் பின்னால் இருந்தால் நாட்டையே ஆளலாம்.சுடுகாட்டுக்குப் போகமுடியாதா?

    பதிலளிநீக்கு