சனி, 15 ஜூன், 2013

காதல் கடிதம் எழுதப்போகிறேன்!! (நகைச்சுவை புனைவு)




 
   “எனக்கு ஒரு காதல் கடிதம் எழுதிக்கொடு“ என்று வெள்ளைத்தாளையும் பேனாவையும் என் முன் நீட்டினான் அருண். எனக்கோ அதிர்ச்சி!
   “ஏண்டா.... உனக்குக் காதலிக்க கூட தெரியுமா...?“ அதிர்ச்சி மாறாமல் கேட்டேன்.
   “எனக்குக் காதலிக்க எல்லாம் தெரியும். ஆனால் காதல் கடிதம் தான் எழுதத் தெரியாது. அதனால தான் உங்கிட்ட கேட்டேன்“ என்றான் சற்று கோபமாக.
   எனக்கும் கொஞ்சம் கோபம்தான். இந்த மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா.... என்று யோசித்தபடியே “அதெல்லாம் என்னால முடியாது“ என்றேன்.
   “நீதான் எழுதி தரனும். எனக்கு வேற யார் இருக்கிறா? தவிர, நீ எழுதி கொடுத்தால் உடனே அது சக்சஸாயிடுமாம். எவ்வளவு பேருக்கு எழுதி கொடுத்திருக்கிற. நான் உன் ஃபிரெண்டு தானே... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடி... ப்ளீஸ்....“ கெஞ்சினான்.
   அவனைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தது. “சரி. எழுதி தர்றேன். அதுக்கு எனக்கு நீ என்ன தருவே...?“
   “சக்சஸாயிட்டா.... ஆரூரார், பாலா சார்... எல்லாம் ஏதோ சீனா ஓட்டலுக்குப் போனாங்களாம். அங்க உன்னைக் கூட்டிக்கினு போறேன். என் செல்லம் இல்ல... எழுதி குடும்மா...“
   “சரி சரி. உட்கார். முதல்ல அவளோட பெயரைச் சொல்லு“
   “அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.“
   “என்ன... பெயரைக்கூட சொல்லமட்டியா...? பிறகு எப்படி எழுதறதாம்...?“
   “பேரெல்லாம் போட வேண்டாம்“
   ம்ம்ம்.... எனக்குத் தெரியக்கூடாதுன்னு நெனைக்கிறே... இருக்கட்டும்... நானே கண்டு பிடிச்சிக்கிறேன்என்று மனத்துள் நினைத்தபடி... “சரி... நம்ம குருப்புல தானே... இல்ல வேற இடமா...?“ கேட்டேன்.
   “நம்ம குருப்புல தான்“ என்றான் கொஞ்சம் அசடு வழிய.
   “அப்போ எதுக்கு காதல் கடிதம் எல்லாம்? நேராய் போய் சொல்லிவிடேன்“
   “ஐயோ... யாரு லத்தியடி வாங்குறதாம்....“
   “லத்தியடியா...? நான் கண்டு புடிச்சிட்டேன். நம்ம போலிஸ்காரர் வீட்டு அகிலா தானே...?“
   “ஐயோ... அவங்க இல்லை. அவங்க என்னை விட சீனியர்“ என்று உடனே மறுத்தான்.
   “ஓஓஓ... சரி. பார்க்க எப்படி இருப்பாள்“
    “ரொம்ப... ரொம்ப... அழகா இருப்பாள்“ சொல்லும் பொழுதே அவன் முகம் ஜொலித்தது. லைட்டா ஜொள்ளு கூட வழிந்தது. சட்டையில் துடைத்துக் கொண்டான்.
   ரொம்ப அழகா....? என்னைவிட இந்த குருப்புல யார் அப்படி அழகாய் இருக்கிறா...? கொஞ்ச நாளாக உலக அதிசயம்ன்னு ராஜியைத் தான் எல்லாம் சுத்தி சுத்தி வந்தாங்க. என்ன, ராஜிகூட பெரிய அழகி இல்லை. என்னை விட கூட கொஞ்சம் கலர் அதிகம். அவ்வளவு தான். ஆ...மாம்... நம்ம ஊர் ஆண்கள், பொண்ணுங்க அழகாய் இல்லைன்னாலும் கலரா இருந்தாலே போதும் என்பவர்கள் தானே...என்று மனத்துள் ராஜியைப் பொறாமையாக நினைத்துக் கொண்டு... “யாரு அந்த உலக அதிசய ராஜியா...?“ என்று கேட்டேன்.
    “என்னநீ... உலக அதிசம்ன்னு எல்லாரும் பார்த்தா... நானும் பார்க்கனுமா...? இது வேற.... அவ பேரிலேயே இளமை இருக்கும். பார்வையே சில்லுன்னு இருக்கும். பேசினாலே கவிதை கொட்டும்...“
    “பேரிலே இளமையா? பார்வை சில்லுன்னு இருக்குமா? கவிதை கொட்டுமா...? கண்டு புடிச்சிட்டேன். கவிதையிலேயே பேசுற இளமதி தானே?“
    “ஐஐயோ... அவங்க இல்ல. இவளும் கவிதை எழுதுவா. ஆனால் கவிதையில கிராமிய மணம் வீசும். பேசும் பொழுது பாசம் பொங்கும்...“
   “ஆய்... இரு. இரு... கிராமிய மணம்... பாசம் பொங்கும். இப்போ சரியா கண்டு பிடிச்சிட்டேன். நம்ம தென்றல் தானே...“
   “இல்லை. இல்லை. உன்னால அவளைக் கண்டு பிடிக்கவே முடியாது. விட்டுவிடு“ என்றான் கோபமாக.
    “சரிசரி... வேற என்ன என்ன ப்ளஸ் பாயிண்ட் இருக்குது? சொல்லு.“ நானும் கண்டுபிடிக்க முடியாத கோபத்தில் கேட்டேன்.
    “ப்ளஸ் பாயிண்ட்டா...? அவள் ஒரு புரட்சிப்பெண். புதுமைவிரும்பி.“
     புரட்சிப்பெண், புதுமை விரும்பி.... ஒரு சமயம் நம்ம எழிலாக இருக்குமோ...என் மைண்டில் ஓடியது இவனுக்கு எப்படி கேட்டதோ...
   “இல்லை. இல்லை. அவங்க இல்லை. இவ வீட்டுக்குள் நுழைந்தாலே ஏதோ கோவிலில் நுழைந்தது போல இருக்கும். அவ்வளவு தெய்வ பக்தி.“
   “தெய்வ பக்தியா....? பேரிலேயே அம்பாளை வைத்திருக்கு நம்ம ரூபிகா தானே....“ வாய் தவறி கண்டுபிடித்ததைக் கேட்டுவிட்டேன்.
   “ஐயோ... அவங்க ரொம்ப நல்லவங்க. இவ வாயாடி. எங்க போனாலும் துறுதுறுன்னு எதையாவது பேசிடுவா. எதுக்கும் பயப்பட மாட்டாள்“
   “ஓ... அவளா...?“
   “யாராம்...?“ அவன் அதிர்ச்சியுடனும் பயத்துடனும் கேட்டான்.
   “அதான்... தான் ஒரு பொண்ணா இருந்துக்கினு எப்பப் பார்த்தாலும் ஆம்பளை பேசுற மாதிரி... எழுதுற மாதிரி... எதையாவது குழப்பிக்கினே இருக்குமே... அந்த திருட்டுக்குட்டி அருணா தானே...“
   “ஐயோ... அதுவா...? வேண்டாம்பா சாமி... அது மாதிரி ஒரு பொண்ணுன்னா... எனக்குக் காதலே வராதுடி“ என்றான் அருண் பயந்தவனாய்.
   “அப்போ யாருதான்? சொல்லித் தொலையேன்.“
   “அதெல்லாம் கடைசியா சொல்லுறேன். நீ முதல்ல நான் சொன்னதை எல்லாத்தையும் வச்சி ஒரு அழகான காதல் கடிதம் எழுதிக்கொடு. அது போதும்“ என்றான்.
   “சரிசரி. ரெண்டு மூனு நாள் கழிச்சி வா. எழுதி வைக்கிறேன்“ என்றேன்.
   “ரெண்டு மூனு நாளா...? அதெல்லாம் முடியாது. அதுக்குள்ள வேற யாராவது செலெட் ஆயிடுவா. இப்பவே எழுதிக் கொடு“ என்றான் கோபமாக.
   “இதோ பாரு அருண்.... எனக்கு இப்போ காதல் கடிதம் எழுத மூடு வரலை. இப்பவே அவசரமா எழுதிக் கொடுத்தா அது உனக்கு சக்சஸ் ஆகாது. கொஞ்சம் பொறு. ரெண்டு மூனு நாளில் நல்லதா எழுதித் தர்றேன். இப்போ கிளம்புறேன். ஆளை விடு“  என்று சொல்லி, அதற்கு மேல் அங்கே நிற்காமல் எழுந்து வந்துவிட்டேன்.
   எந்தப் பெண்ணாக இருக்கும்...யோசிக்க மண்டை காய்ந்தது.

   இரண்டு மூன்று நாள் கழித்துத் தொடருகிறேன்.

அருணா செல்வம்.
(நட்புறவுகளே... இது சும்மா ஒரு ஜாலிக்காக எழுதியது. யாரையும் வருத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தவறெனில் நான் வருந்துகிறேன். நன்றி)

36 கருத்துகள்:

  1. ஜாலியாக எழுதிய பதிவு
    ஜாலியாகவே இருந்தது
    ஜாலியாக ரசித்தோம்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும்
      ஜாலியாக படித்து வாழ்த்தியமைக்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  2. விரைவில் போட்டியில் பங்கு (பெற்று ?) பெறப் போகும் கடிதத்தையும் எதிர்ப்பார்க்கிறேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ போட்டியா....? அதெல்லாம் இல்லைங்க.
      இது சும்மா...

      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. ம்ம் எல்லா பெண் பதிவர்களும் ஓன்று கூடிட்டாங்க போல ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இல்லைங்க ஃபிரெண்ட்.

      ஆனால் கூடிவிட்டால்....!!!

      நன்றி பிரேம்.

      நீக்கு
  4. இதுவும் நாலாதான் இருக்கு ரெண்டு மூணு நாள் எல்லாம் காத்திருக்க முடியாது உடனே கண்டு புடிச்சி சொல்லுங்க.அப்படியே கடிதத்தை போட்டிக்கு அனுப்பிடுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் அடுத்த பதிவில் கணடு பிடிச்சி சொல்லி விடுகிறேன்.
      நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  5. காதல்கடிதப் போட்டிக்கு தயாராகிறீர்கள் போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ.... அப்படியெல்லாம் இல்லைங்க.
      இது சும்மா ஜாலிக்குத் தான்.

      நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  6. ஹா ஹா சிரிச்சு சிரிச்சு படிச்சேன்! சூப்பர்!! ஆனா கடைசி வரைக்கும் அவ யாருன்னே சொல்லலியே? எனக்கென்னவோ, அது “அருணா” போலத்தான் இருக்கு :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிஞ்சி அது “அருணா“ வா இருக்காதுன்னு
      நினைக்கிறேன் மணி ஐயா.

      அது தான் அவனே சொல்லிட்டானே...
      “ஐயோ... அதுவா...? வேண்டாம்பா சாமி... அது மாதிரி ஒரு பொண்ணுன்னா... எனக்குக் காதலே வராதுடி“ ன்னு.
      அதனால நிச்சயமா அருணா இல்லைன்னு தான் நினைக்கிறேன்.
      ஆனால் சொல்ல முடியாது... காதலுக்குக் கண் இல்லையாம்... பார்ப்போம்.

      நன்றி மாத்தியோசி அவர்களே.

      நீக்கு
  7. ஆஹா... நல்லாத்தான் இருக்கு.
    போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கம் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  8. ஹலோ இங்க என்னதான் நடக்குது? இப்பவே எனக்கு தெரிஞ்சாகனும்..,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்க எதுவுமே நடக்கலைங்க.
      எல்லாமே ஒரே இடத்துல தான் இருக்கிறது.

      நீக்கு
  9. ராஜிகூட பெரிய அழகி இல்லை. என்னை விட கூட கொஞ்சம் கலர் அதிகம்.
    >>
    ஹலோ இதெல்லாம் ரொம்ப ஓவர்.., நான் ரொம்ப அழக்காக்கும்.., 8 மாசக்குழந்தையா இருக்கும்போது.., யாருப்பா அது எருமைக்கூட குட்டில அழகாதான் இருக்குன்னு சொல்றது?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் சரிதான்... ஆனால்...

      “எருமைக்கூட குட்டில அழகாதான் இருக்குன்னு சொல்றது?!“
      இது தேவைதானா?
      நான் சொல்லைப்பா.

      தங்களின் வருகைக்கும் பதிவை ஜாலியாக
      எடுத்துக்கொண்டு கருத்திட்மைக்கும்
      மிக்க நன்றி ராஜி மேடம்.

      நீக்கு
  10. காதல் கடிதம் எழுதுவதற்கான முன்னோட்டமே கலகலக்கவைக்கிறதே.. கலக்குங்க அருணா செல்வம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  11. pottiyila jeyikka advance vaazhthukkal ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டிக்கெல்லாம் போகலைங்க.
      இது சும்மா ஜாலிக்குத் தான்.

      வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  12. அடுத்து போட்டிக் கடிதம் வரும் ........ காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருமா...?
      நானும் காத்திருக்கின்றேன்.

      நன்றி மாதேவி தோழி.

      நீக்கு