சனி, 19 ஜனவரி, 2013

கசகசப்பு!!




கடக்கின்ற வண்டிகளில்
காதலியைக் காணாமல்
கண்கள் இரண்டும் தவமிருக்க!

உச்சி வெயில் பிளக்க
உள்ளிருக்கும் உதிரமெல்லாம்
உணர்விழந்து காயாமல்...

வெளியேறி நாற்றமடித்து
வெளிவேசம் களைத்துவிடும்
வியர்வைக்குத் தெரிந்திடுமா?

கால் கடுக்கக் காத்திருக்கும்
காளையென் உள்ளத்தின் கசகசப்பு
உடலில் இல்லை
மனத்திலென்று!

அருணா செல்வம்



31 கருத்துகள்:

  1. ''..கால் கடுக்கக் காத்திருக்கும்
    காளையென் உள்ளத்தின் கசகசப்பு
    உடலில் இல்லை
    மனத்திலென்று..''

    mmm...ம்...சிறு கரு...ஓரு இணைப்புநல்லது..
    .இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  3. மனதிலிருக்கிற கசகசப்பு வெழ்லியி தெரிவதில்லைதான்,உடலி இருக்கிற வேர்வையின் கசகசப்பு வெளியில் தெரிகிறது,விலைமதிக்க முடியாத வேர்வை வரிகள் என்றும் மேன்மையானவையே/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் கவிதையின் உட்பொருளைப்
      புரிந்து கொண்டு வாழ்த்தியமைக்கும்
      மிக்க நன்றி விமலன் ஐயா.

      நீக்கு
  4. கசகசப்பு உடலில் இல்லை, மனதில். உங்களின் சிந்தனைப் பொறி நன்று. ரசிக்க வைத்தது. தேடிப் பிடித்து வெளியிட்டிருக்கும் படமும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தை இணையத்திலிருந்து தேடி எடுத்தேன்.
      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  5. நல்ல கவிதை. மனதின் கசகசப்பு உடம்பினில் தெரிந்ததுவோ!

    த.ம. 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடலில் இருந்தக் கசகசப்பு
      அவ்வளவாகத் தெரியலையாம் அந்தக் காளைக்கு!
      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஐயா.

      நீக்கு
  6. கசகசப்பு மனக்கசப்பாக மாறாமல் இருந்தால் சரி.
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலியைக் கண்டுவிட்டால்
      கசகசப்பு ஏது சசிகலா....?

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  8. கடைசி வரிகள் அருமை! அருமையான படைப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  9. இந்த செல் போன் காலத்தில் ஒரு SMS போதுமே அவ எப்ப வருவான்னு தெரிஞ்சுக்க!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டுமென்றே காத்திருக்க வைக்கும்
      பெண் என்றால்....

      காதலிக்கும் போது தானே பெண்கள்
      அவர்களைக் காத்திருக்க வைக்கிறார்கள்...

      (உங்களின் வலையைத் திறக்க முடியவில்லை. பாருங்கள்)

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தாஸ் ஐயா.

      நீக்கு

    2. அப்படியா ?! இன்றும் பலமுறை திறந்தேன் பிரச்சினை யதுவும் இல்லையே?! தற்போது கூட திறக்கிறது. பாருங்கள்.

      http://jayadevdas.blogspot.com/2013/01/blog-post_20.html

      நீக்கு
    3. நண்பரே....
      நான் இப்பொழுதும் திறந்துப் பார்த்தேன்.
      திறந்தாலும் பதிவு துள்ளுகிறது.
      எதையும் படிக்க முடியவில்லை.
      தலைப்பை மட்டும் படித்துவிட்டு வந்து விட்டேன்.

      எனக்கு உங்களின் பதிவைப் படிக்கக் கொடுத்து வைக்கவில்லை போலும். ம்ம்ம்...

      நீக்கு
    4. நண்பரே.... இப்பொழுதும் திறக்க முடியவில்லை.
      என் மின் முகவரி
      avvaipaatti@live.fr

      மீண்டும் நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. உண்மை தான் குட்டன் ஐயா.
      தங்களின் வரவிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. எந்த காதலி சொன்ன நேரத்திற்கு வந்திருக்கிறார்கள்? வந்ததாக சரித்திரமேயில்லை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனே வந்து விட்டால்....
      ஆண்களுக்கு அவளின் மேல் அலட்சியம் வந்துவிடாதா...?

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  12. கா(த)ல் கடுக்கக் காத்திருப்பதுதான் காதல் என்றாகியதோ :))

    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டப்பட்டு அடையும் பொருளுக்குத் தான்
      மதிப்பு அதிகம் என்பார்கள்.

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மாதேவி அவர்களே.

      நீக்கு
  13. அந்த நேரத் தவிப்பை அப்படியே சொன்ன விதம் அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு