ஞாயிறு, 6 ஜனவரி, 2013

எனக்கு ஒன்று தான் புரியவில்லை!!

    நண்பர்களே...

    தற்போது நடந்த டெல்லி மற்றும் புதுச்சேரி பெண்களின் வன் புணர்வுகளுக்குப் பல பேர் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்கள்.

       ஆனால் அனைவருமே பெண்கள் தான் ஏதோ தவறு செய்தது போலவும் பெண்கள் இப்படி இப்படி எல்லாம் இருந்ததால் தான் இந்த மாதிரி அவதிக்குள்ளாகிறார்கள் என்றும், தங்கள் தங்களின் கருத்துக்களைச் செல்லிக் கொண்டு வருகிறார்கள்.

    தவிர இனி பெண்களுக்குத் தனி பேருந்து வேண்டும் என்றும், பெண்களுக்குத் தனி கல்வி நிலையங்கள், அதில் வெறும் பெண் ஆசிரியர்கள் மட்டும் இருந்தால் இக்கொடுமைகள் தடுக்கப்படும் என்றும் கோரிக்கைக்கள் வைக்கப்படுகிறது.

   தவிர பெண்கள் முழுவதுமாகத் தன்னை மூடிக்கொள்ள வேண்டும் என்றும் எங்கேயும் தனியாகப் போக்க்கூடாது என்றும் கட்டாயமாக்கப் படுகிறதாம்.

   இவை அனைத்துமே நல்ல செயல்கள் தான்!!   ஆனால்....

   இவ்வளவு நல்ல விசயங்களைப்(?) பெண்களுக்கு மட்டும் சொல்லித்தரும் நம் சமூகம் ஏன் ஆண்பிள்ளைகளுக்கு நல்ல வழிமுறைகளைச் சொல்லித்தர முன்வரவில்லை.

   இன்று தவறு செய்த அந்த ஆண்பிள்ளைகள் வேறு நாட்டவரா...? அவர்களும் நம் குடிமக்கள் தானே...

   பெண்கள் இப்படி இப்படி தான் இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு மட்டும் தான் அறிவுரை சொல்ல வேண்டுமா...?

   இப்படிச் சொல்வதால் ஆண்பிள்ளைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று மறைமுகமாகச் சொல்லித் தருவது போல் இல்லையா?

   அறிவார்ந்த சான்றோர்களே.... ஆண் பிள்ளைகளுக்கு நல்ல வழி முறைகளைச் சொல்லிக் கொடுத்து அவர்களை முதலில் திருத்துங்கள்.நட்புடன்

அருணா செல்வம்.

25 கருத்துகள்:

நம்பள்கி சொன்னது…

Good one; short and crisp!
Yet, ஆணாதிக்க வாதிகள் இதை காதில் கூட வனகிக் கொள்ளமாட்டார்கள்; அவர்கள் உளறல் தொடர்ந்து பெண்ணை நோக்கியே இருக்கும்!

Seeni சொன்னது…

அருணா சகோ..!

உங்களுடைய வேதனையான வரி
எனக்கும் புரிகிறது!

டெல்லி "சம்பவம்" முற்றிலும் கண்டிக்க வேண்டியது.தண்டிக்க வேண்டியது.

ஆனால் இது புதிதாக நடந்த செயல்களா .?-அல்ல.

எப்போதும் நடக்கிறது...
உலகில் பாலியல் வன்புணர்வு.
பட்டியல் தர வரிசை.
1.அமெரிக்கா
2.தென் ஆப்ரிக்கா.
3.இந்தியா

நம் நாட்டில் முதல் நிலை மாநிலம் -டெல்லி.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.

என்னை கேட்டால் -
ஆணோ பெண்ணோ...
இருவருக்கும் கற்பு என்பது முக்கியம்.
யார் எல்லை மீறினாலும் தண்டிப்பது அவசியம்...

பெயரில்லா சொன்னது…

நியாயமான கோரிக்கை. சம்பந்தப் பட்டவர்கள் புரியட்டும் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்

ஆண்மகன் என்றால் என்ன?
பெண்மகள் என்றால் என்ன?
நாண்முனை போன்றே நீதி
நடைபெற வேண்டும் என்பேன்!
வீண்மன காமம் ஏற
வெறிமனம் கொண்டே தாழ்வார்!
மாண்மன கற்பைப் பேணி
மகிழ்மனம் காண்க நன்றே!

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்
மகாகவி பாரதியார்

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்

ஆண்மகன் என்றால் என்ன?
பெண்மகள் என்றால் என்ன?
நாண்முனை போன்றே நீதி
நடைபெற வேண்டும் என்பேன்!
வீண்மக் காமம் ஏற
வெறிமனம் கொண்டே தாழ்வார்!
மாண்மனக் கற்பைப் பேணி
மகிழ்மனம் காண்க நன்றே!

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்
மகாகவி பாரதியார்

மகேந்திரன் சொன்னது…

உண்மையான வரிகள் நண்பரே..
தனிமனித ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்....

ஆட்டோமொபைல் தமிழன் சொன்னது…

மிக அருமையான பகிர்வு...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அன்புடையீர், வணக்கம்.

தங்களின் ஆதங்கத்தை நல்லதொரு பதிவாகத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

திரு. ரவிசங்கர் குருஜி அவர்கள் ART OF LIVING என்ற அமைப்பின் தன்னர்வத் தொண்டர்களுக்காக 05.12.2012 அன்று நம் தலைநகர் புது டெல்லியில் ஆற்றிய ஆங்கில சொற்பொழிவினை, நான் இரண்டே நாட்களுக்குள் தமிழாக்கம் செய்துதர பணிக்கப் பட்டிருந்தேன்.

அந்த என் தமிழாக்கம் இப்போது அவர்களின் WEB PAGE இல் அப்படியே வெளிய்டப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பினை இங்கு தந்துள்ளேன்.
தயவுசெய்து எல்லோருமே பொறுமையாக அதனைப் படித்துப்பாருங்கள்.

இணைப்பு:
http://wisdomfromsrisriravishankartamil.blogspot.in/2012/12/blog-post_5.html

தலைப்பு:
நம் பாரதத்தை மேம்படுத்த சேவை மனப்பான்மையுள்ள தொண்டர்களே, முன்வாருங்கள்!

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுவரும் குற்றங்களின் எண்ணிக்கையும், லஞ்ச லாவண்யங்களும் நிச்சயமாக படிப்படியாகக் குறைந்து ஒரு நாள் அது PURE INDIA ஆக மாறிவிடும். தர்ம நெறிகளுடன் கூடிய நம் இந்தியா உலகத்தின் தலைசிறந்த [சத்திய + தர்ம பூமியாக] நாடாகத் திகழும் என்பதில் ஐயம் இல்லை.

மக்களின் மனத்தினை அடியோடு மாற்றவும், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்புசெலுத்தி ஒற்றுமையாகி, சமுதாய சீர்திருத்தங்கள் ஏற்படவும் இது போன்ற தன்னார்வ இயக்கங்கள் ஆங்காங்கே உலகம் முழுவதும் ஏற்பட்டு மிக நன்றாகவே செயல் பட்டு வருகின்றன.

But, It will take sometime to get a complete change.

அனைவருக்கும் என் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

HAPPY NEW YEAR 2013.

அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

ooooooooooooooooooooooooo

ezhil சொன்னது…

இயல்பாக இருக்கும்போதே ,ஆண் குழந்தைகளுக்கு சுய ஒழுக்கம் சொல்லிக் கொடுக்காத காரணத்தால் தான் இந்த வன்முறைகள். வன்முறை எண்ணம் தூண்டும் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து பெண்களை பூட்டி வைத்தால் வெறி கொண்டாடும் கூட்டம் தான் உருவாகுமேயொழிய மாற்றம் ஏற்படாது தோழி. நல்ல பகிர்வு

சசிகலா சொன்னது…

ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது.

பெயரில்லா சொன்னது…

மனிதனுக்குள் ஒரு மிருகம்

இதை படித்துப்பாருங்கள். எழுத்தாளர் சுஜாதாவின் படைப்பு இது.

அட நான் தாங்க. . .

சித்தாரா மகேஷ். சொன்னது…

ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயம்தான்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நம்பள்கி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

சம்மந்தப்பட்டவர்கள்...????

நாம் அனைவருமே சம்மந்தப்பட்டவர்கள் தான் என்று நினைக்கிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கோவைக்கவி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்துடன் கூடிய பாடலுக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நண்பரே!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தமிழன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் விளக்கமான கருத்திற்கும்
மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

உண்மையை அருமையாகச் சொன்னீர்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

கலைவிழி சொன்னது…

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் முதலில் தனிமனித ஒழுக்கம், தனிநபர் ஒழுக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் பட்சத்தில் சமூக சீர்கேடுகள் பெரும்பாலும் தடுக்கப்படும். வீட்டிலும் சரி நாட்டிலும் சரி பெண்பிள்ளைகளை கண்டிக்கும் நடைமுறை நம் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக ஒரு பழக்கமாக வந்து விட்டது.

அருணா செல்வம் சொன்னது…

நம்மால் வேறு என்ன செய்யமுடியும் சசிகலா.
வருகைக்கு மின்ன நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

படிக்கிறேன்
மிக்க நன்றி “அட நான் தாங்க“.

அருணா செல்வம் சொன்னது…

சிந்தித்தால் மட்டும் போதாது.
செயல்படுத்தவும் வேண்டும் சித்தாரா.
தங்களின் வருகைக்கும் கருத்தற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

மாற்றங்கள் வரத்தான் வேண்டும்.
அருமையான கருத்தைக் கூறினீர்கள் கலைவிழி.
தங்களின் வருகைக்கும் அருமையான கருத்திற்கும்
மிக்க நன்றி.