ஞாயிறு, 13 ஜனவரி, 2013

எதுவும் அறியாதவள்!!




 நேர்மை யற்ற நெஞ்சங்கள்!
    நீதி யற்ற தலைவர்கள்!
ஓர்மை யற்ற உணர்வுடனே
    உழைத்துத் தேயும் உழவர்கள்!
கூர்மை யற்ற குடிகளையும்
    கொண்டி ருக்கும் நாட்டுக்குள்
சீர்மை யுடனே வருகின்றாள்
    சிரித்த முகமாய்த் தைமகளே!

அரசுப் பணியர் எனும்பேரில்
    அளவில் சிறிய வேலைக்கும்
பரிசு போன்று பெயர்வைத்துப்
    பணத்தைப் பெறுவார் இலஞ்சமென!
சிரசும் இருந்தும் முண்டமான
    சிறியோர் செயலைக் கண்டிடவே
முரசு கொட்டி வருகின்றாள்
    முடிவே அறியாத் தைமகளே!

வாங்கி வாழும் மனிதர்கை
    வாரி வழங்கும் எனநினைத்தே
ஏங்கித் தவிக்கும் ஏழைகளின்
    ஏக்கம் தெளிதல் இன்றில்லை!
தேங்கி நில்லாப் பழக்கத்தில்
    தெளிவே இல்லா மக்களிடம்
ஓங்கி ஒளிர்ந்து வருகின்றாள்
    உறக்கம் அறியாத் தைமகளே!

தாளம் தவறும் ஆட்டத்தில்
    தவறு நடத்தல் சரியென்றால்
ஞாலம் வாழும் உம்மக்கள்
    நன்மை பெறுதல் என்னாளோ!
ஓல மிட்டு அழைக்கின்றோம்
    உலகம் உயர வந்திடுக!
கால தேவன் கைப்பிடியில்
    கவலை அறியாத் தைமகளே!

நாட்டில் ஏதும் நடந்தாலும்
    நரகத் துன்பம் அடைந்தாலும்
ஏட்டில் பழமை இருந்தாலும்
    எதுவும் இல்லை என்றாலும்
பாட்டில் புதுமை படைத்தாலும்
    பழமை புதுமை ஆனாலும்
கூட்டிக் கழித்துப் பெருக்கிடுவாள்
   குறையை அறியா தைமகளே!


அருணா செல்வம்.


20 கருத்துகள்:

  1. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஐயா.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய பொங்கல் மற்றும்
      தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  2. நல்ல கவிதை, இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய பொங்கல் மற்றும்
      தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  3. மிக அருமை ஐயா!



    உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி ஆகாஷ்.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய பொங்கல் மற்றும்
      தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  4. அன்பான இனிமையான சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள் அருணா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய பொங்கல் மற்றும்
      தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஹேமா.

      மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய பொங்கல் மற்றும்
      தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  6. லஞ்சம் வாங்குவதில் வேதனைப்படுவதில் தொடங்கி, எத்தனை குறைகள் இருந்தாலும் தைமகள் சந்தோஷம் தரட்டும் என்ற வாழத்துடன் முடிந்த கவிதை அருமை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய பொங்கல் மற்றும்
      தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய பொங்கல் மற்றும்
      தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே.

      நீக்கு
  8. தை மகளை ஒன்றும் அறியாதவள் என்று சொல்லி விட்டீர்கள்.
    இனிய கவிதை
    பொங்கல் நல் வாழ்த்துக்கள்
    த.ம 8

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்!

    திங்கள் ஒளியும்! செழும்வயலும்
    தேவன் தந்த பெருங்கொடையே!
    எங்கள் வாழ்வும் உயா்வளமும்
    இன்பத் தமிழின் அருங்கொடையே!
    உங்கள் பணிகள் சிறக்கட்டும்!
    உலகப் புகழிற் திளைக்கட்டும்!
    பொங்கல் திருநாள் பொங்குகவே!
    பூந்தேன் இனிமை தங்குகவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

      பொங்கல் கவிதை பொலிர்கிறது! திங்கள்போல்
      தங்கத் தமிழில் தவழ்ந்து!

      நன்றி.

      நீக்கு

  10. வணக்கம்!

    திங்கள் ஒளியும்! செழும்வயலும்
    தேவன் தந்த பெருங்கொடையே!
    எங்கள் வாழ்வும் உயா்வளமும்
    இன்பத் தமிழின் அருங்கொடையே!
    உங்கள் பணிகள் சிறக்கட்டும்!
    உலகப் புகழிற் திளைக்கட்டும்!
    பொங்கல் திருநாள் பொங்குகவே!
    பூந்தேன் இனிமை தங்குகவே!

    பதிலளிநீக்கு
  11. ஜல் ஜல் ஜல் என சலங்கை கட்டிய இரட்டை மாட்டு வண்டியில் பயணம் செய்வது போன்ற உணர்வைத்தரும் பாடல் வரிகள். அருமை. பாராட்டுக்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா.
      வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்ணன் ஐயா.

      நீக்கு