திங்கள், 21 ஜனவரி, 2013

எங்கள் ஊர் பொங்கல்!!





நட்புறவுகளுக்கு வணக்கம்!
     இங்கே (பிரான்ஸ்) நேற்று ஞாயிறு என்பதால் அனைவருக்கும் விடுமுறை. வருடா வருடம் பொங்கல் முடிந்து வரும் ஞாயிறு அன்று எங்கள் ஊரில் உள்ள அனைத்து இந்தியக் குடும்பங்களும் சேர்ந்து ஒன்றாக ஓர் இடத்தில் கூடி பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம்.
    அப்படிக் கொண்டாடும் பொழுது அனைவரும் சேர்ந்து ஒரு பாடலைப் பாடுவது வழக்கமாக்கி இருக்கிறோம். எப்பொழுதும் அந்த வருடத்தின் பிரபலமான சினிமா பாடல் ஒன்றின் மெட்டை எடுத்துக்கொண்டு பொங்கல் விழாவிற்குத் தகுந்த படி மாற்றி எழுதித்
தருவேன். அனைவரும் சேர்ந்து பாடி மகிழ்வோம்.
    நேற்று நடந்த பொங்கல் விழாவில் வித்தியாசமாக நண்பர் ஒருவர் அவரின் விருப்பம் போல் மெட்டமைத்துக் கொடுக்க நான் பாடலை எழுதி கொடுத்தேன். அனைவரும் சிறப்பாகப் பாடினார்கள். அந்தப் பாடலை நீங்களும் படித்துப் பாருங்கள்.


பொங்கல் பாடல் 20.01.2013

பொங்கும் புது பொங்கல்
   இங்குப் புதிதாய்ப் பொங்கியது!
எங்கும் மகிழ் வெள்ளம்
   பொங்கி இனிதாய் மலர்ந்தது!

அன்புடனே நாமெல்லாம்
   ஒன்றாய்க் கூடுவோம்!
பண்புடனே ஒற்றுமையால்
   சேர்ந்தே வாழ்திடுவோம்!

எல்லா நலமும் இனிதே பெற்று நாமும் வாழுவோம்!

பொங்கல் வாழ்த்துக்கள் - எல்லோர்க்கும்
பொங்கல் வாழ்த்துக்கள்  -2

நிறைமனம் கொண்டே பொங்கல் விழாவில்
    அனைவரும் சேர்ந்திடுவோம்!
இறையருள் பெற்றே இன்ப வாழ்வின்
    உயர்வைக் கண்டிடுவோம்.

உண்மைக்கும் உறவிற்கும் தோள்கொடுப்போம்!
   உயர்வான நட்புக்கு உயிர்கொடுப்போம்!
என்றுமே ஒற்றுமையில் உயர்ந்திடுவோம்!
   இதயத்தில் அன்பினை வளர்த்திடுவோம்!

பொங்கல் வாழ்த்துக்கள் - எல்லோர்க்கும்
பொங்கல் வாழ்த்துக்கள்  -2

இந்த நாளினில் சேர்வதால்
   நம்மனம் மகிழ்ந்திடுமே!
எந்த நீதியும் நேர்மையும்
   நெஞ்சில் நிறைந்திடுமே!

பொங்கல் வாழ்த்துக்கள் - எல்லோர்க்கும்
பொங்கல் வாழ்த்துக்கள்  -2


அருணா செல்வம்.

22 கருத்துகள்:

  1. அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு ஒன்றுகூடல்.பொங்கல் வாழ்த்துகள் இன்னொருக்கா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு
  3. padal varikal...

    nantraaka irukkuthu....


    pakirvukku mikka nantri!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  4. சேர்ந்து பண்டிகை கொண்டாடற சந்தோஷமே தனிதான். அழகான பொங்கல் பாடலும் கூடுதல் இனிமை சேர்த்திருக்கு உங்க பொங்கலுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா.... எங்கள் ஊர் (வெர்னோ) வில் பத்துக் குடும்பங்கள் தான் இருக்கிறோம்.
      ஆனால் வேறு வேறு மதம் என்றாலும் இந்தத் தமிழர்த் திருநாளில்
      எல்லோருமே கலந்துக்கொண்ட கலந்து பேசி உண்டு மகிழ்வது உண்மையில் சந்தோஷமாக இருக்கும்.
      எங்களுக்கு உறவுகளுடன் சேர்ந்து கொண்டாட முடியவில்லையே
      என்ற வருத்தம் இதனால் நீங்கி விடுகிறது.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று முரளி. (ஓ.கே வாங்க...?)

      நீக்கு
  6. நல்லதோர் பாடல்.... ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து பொங்கல் கொண்டாடிய உங்களுக்கு வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஐயா.

      நீக்கு
  7. பொங்கல் வைத்து பாடிய நிகழ்வு காட்சியாய் விரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  8. பாடலும் பொங்கலை போல இனிக்கின்றன . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  9. அருமையான வாழ்த்துப்பாடல்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. பிரான்ஸ் பொங்கல்,தமிழ்ப் பொங்கல்!வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. அருமையான பாடல்...BELATED பொங்கல் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரெவெரி ஐயா.

      நீக்கு