தொட்டவுடன்
சுடுமளவில் எண்ணெய் வைத்துத்
தோலெடுத்த கோழியினை வதக்கி விட்டுப்
பட்டையையும்
கிராம்பையும் பதமாய்த் தட்டிப்
பட்டுப்போல் அரைத்துவைத்த இஞ்சி பூண்டும்
வெட்டிவைத்த
வெங்காயம் மிளகாய் போட்டு
வேண்டுகின்ற மசாலாதூள் உப்பும்
சேர்த்துச்
சொட்டுத்தண்ணீர்
இல்லாமல் வறுத்து வைத்தால்
சோறுவேண்டாம் என்றவனும் திரும்பிப்
பார்ப்பான்.
அட அட அட டா...;)
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு
நீக்குமிக்க நன்றிங்க சிட்டுக்குருவி.
ஒரு கவிதையிலே மிகப் பெரிய சமியல் துணுக்க சொல்லி முடிச்சிட்டீங்களே....சூப்பர்
பதிலளிநீக்குசும்மா செய்து பாருங்கள்.
நீக்குநாக்கில் உமிழ் நீரோடு...-:)
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு
நீக்குமிக்க நன்றிங்க ரெவெரி சார்.
ayyo!
பதிலளிநீக்குpasikkuthe...
“ஐயோ!
நீக்குபசிக்குதே...” - சீனி
நண்பரே... இது ஏட்டுக்கோழி
பசிக்கு உதவாது.
கவிதைக்கு பதிலா
பதிலளிநீக்குஅந்த வறுவலில் இருந்து ஒரு பீஸ் கொடுங்க
நாக்கு ஊருது ம்(:
முடிந்தால் எடுத்து சாப்பிடுங்கள் தோழரே.
நீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க செய்தாலி.
வறுவல் மனக்குதய்யா...
பதிலளிநீக்குவாசம் கூட வருதா...?
நீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க நண்பரே.
ஆஹா, கவிதையே இவ்வளவு சூப்பரா இருக்கே, அப்போ, கறி எவ்வளவு சூப்பரா இருக்கும்? முதல் முதலா சமையல் குறிப்பை கவிதையில் படிக்கிறேன்! அருமையாக இருக்குது :-)))))))
பதிலளிநீக்குஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று எழுதினேங்க.
நீக்குஉங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க மணி ஐயா.
நல்ல பசி நேரத்தில ஏன் தான்இந்தப் பக்கம் வந்தேனோ...ம் வித்தியாசமான சமையல் படைப்பு !
பதிலளிநீக்குஎன் இனிய தோழி ஹேமா...
நீக்குஎன் படைப்பு உங்கள் கண்களுக்கும் மனத்திற்கும் மட்டும் தாங்க விருந்து.
பசியைப் போக்குமா என்று தெரியவில்லை.
பசியுடன் இருந்த போதும் என் வலைக்கள் வந்து என் படைப்பைப் புசித்ததற்கு மிக்க நன்றிங்க ஹேமா.
இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த...? கலக்கறீங்க நண்பா
பதிலளிநீக்கு