புதன், 6 ஜூன், 2012

புதுமைப் பூ!! (கவிதை)
வண்டு ஒன்று
   பூவோ என்று
      வந்து வட்டமிடச்
செண்டு போன்ற
   இதழால் இமைகள்
      மூடிச் சேர்ந்துவிடக்
கண்ட வண்டு
   குண்டுக் கண்ணைப்
      புதுமைப் பூவெனவே
சென்று மீண்டும்
   கிட்டே வந்து
      திரும்பிச் சென்றிடுதே!!37 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு நன்றிங்க நண்பரே.

   (எப்பொழுதும் 3“ம்“ போடுவீர்கள். ஏன் இந்த முறை ஒரேஒரு “ம்“ மட்டும் போட்டீர்கள்? கவிதை அவ்வளவு சிறப்பாக இல்லையா...? போன கவிதைகளுக்கு நீங்கள் “ம்“ ..மே போடவில்லை. - வருத்தத்துடன் நான்!)

   நீக்கு
 2. நல்ல வேலை கண்ணில் கொட்டாமல்-
  போனதே...!

  நல்ல கவிதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொட்டி இருந்தால் பாப்பா வீணாபோயிருக்கும் நண்பரே. (கண்ணிலிருக்கும் பாப்பாவைச் சொன்னேன்)

   நன்றிங்க சீனி.

   நீக்கு
 3. வாவ்...புதுமைப் பூ...வித்தியாசமான தலைப்பும் கவிதையும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ச்சும்மா.... இப்படி வித்தியாசமா யோசிப்பது உண்டு...

   நன்றிங்க சிட்டுக்குருவி.

   நீக்கு
 4. மண்டு தேனை
  உண்டி டாமல்
  மயங்கி நின்றதோ?

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலவர் என்பதை நிருபித்துவிட்டீர்கள் பார்த்தீர்களா?

   ஆமாங்க,..
   மண்டு வண்டு
   குண்டுக் கண்ணைக்
   கண்டே மயங்கிவிழ
   உண்டு வேற மயங்க வேண்டுமா...?

   நன்றிங்க புலவர் ஐயா.

   நீக்கு
 5. நல்லாயிருக்கு/அருகில் போய் ஏமாந்து திரும்புகிற கதைகள் நம்மில் ஏராளம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை ஏங்க கேட்குறீங்க விமலன்....
   நானும் அப்படித்தான்.

   மிக்க நன்றிங்க தோழரே.

   நீக்கு
 6. ரசித்தேன்..தேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்தேன்!
   மகிழ்ந்தேன்..! ரெவெரி சார்.
   நன்றிங்க.

   நீக்கு
 7. ம்ம் அவுங்க கண் அப்படியோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பிரேம்.எஸ்
   (எந்த வண்டையும்
   அண்டவிடாத முண்டக்கண்)

   நீக்கு
 8. உங்கள் தளத்தின் மொழி FRENCH ஆக்க இருக்கிறது அன்பரே கவனித்தீர்களா

  mercredi 6 juin 2012,Répondre,
  S'inscrire à ce site இன்னும் பல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க நண்பரே...
   நானும் பலவாராக மாற்றிப்பார்த்தேன். முடியவில்லை. விட்டுவிட்டேன். திரும்பவும் முயற்சி செய்கிறேன்.

   நன்றிங்க பிரேம்.

   நீக்கு
 9. பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத... பாடல் வரிகள் நினைவுக்கு வந்து போயின. பூவை கண்ணில் புதுமைப் பூவைக் கண்டு மயங்கிய வண்டினம் பற்றிய வர்ணனை அழகு. பாராட்டுகள் அருணாசெல்வம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான பாடலை நினைவு படுத்தினீர்கள் கீதமஞ்சரி அக்கா.
   எனக்கும் பழையப் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.
   பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க.

   நீக்கு
 10. மலர் தேடும் வண்டும் இன்று உங்கள் கவி தேடி வந்ததுவே . அருமை அருமை அருணா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றிங்க சசிகலா.
   (முதல் முதலில் என் பெயருடன் வாழ்த்து எழுதியமைக்கு மிக்க நன்றிங்க. ஹேமா.. கீதமஞ்சரி அக்கா.. இவர்களெல்லாம் என்னைப் பெயர் சொல்லி எழுதும் போது ரொம்ப சந்தோசப்பட்டேன். இனி நீங்களும்....
   மற்ற நண்பர்களும் அப்படியே எழுதினால் மேலும் மேலும் சந்தோசம் தான் போங்க....)

   நீக்கு
 11. தற்குறிப்பேற்றம்
  தகைமையாய் அமைந்துள்ளது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிங்களா...?
   மன்னிக்கனும் நண்பரே...
   “தற்குறிப்பேற்றம்“ என்றால் என்ன?
   தயவுசெய்து விளக்கம் தாங்கள்.

   நன்றிங்க.

   நீக்கு
 12. புலவன் தான் சொல்ல வந்த கருவினை ஏற்றிக் கூறுவதே
  தற்குறிப்பேற்றம் ...
  இயல்பான ஒரு பொருளை தன் மனம் கவரும் வேறு ஒரு பொருளாய்
  மாற்றி தான் சொல்ல வந்த கருத்தை ஏற்றி வைத்த கருப்பொருளுடன்
  இணைப்படுத்துக் கூறுதல்...
  இங்கே கண்கள் இயல்பான பொருள் அதனை பூவாக உருவகக் கருவாக்கி
  வண்டு பூக்களை தேடி வருவதை கருப்பொருளாகக் கொண்டு...
  ஆஹா இது பூவல்ல கண்கள் என மனம் மாறிச் சென்றதையே
  நான் தற்குறிப்பேற்றம் என்று கூறினேன்..

  என் கருத்து சரி என்று நினைக்கிறேன்..
  தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அழகான விளக்கத்திற்கு
   மிக்க நன்றிங்க நண்பரே.

   நீங்கள் என்னைத் தவறாக நினைத்துவிடாதீர்கள்.
   எனக்கு உண்மையில் தற்குறிப்பேற்றம் என்றால் என்ன வென்று தெரியாததால் அகராதியைப் பார்த்தேன். அதில் தற்குறிக்கு என்பதற்கு மட்டும் “கல்வியறிவு இல்லாதவன்“ “கையெழுத்திற்காக இடும் கீறல்“ என்றும் இருந்தது.
   நீங்கள் நிச்சயமாக என்னை இப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டீர்கள் என்று தெரியும்.
   இருந்தாலும் நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள் என்பதை அறியவே கேட்டேன்.
   (நானும் யாப்பருங்காரியைப் படித்திருக்கிறேன். ஆனால் இதெல்லாம் நினைவில் நிற்கவில்லை.)
   எனக்காக சிரமம் பார்க்காமல் வந்து பதில் அளித்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே.

   நீக்கு
 13. பெண்ணுக்குப் பெண்ணே பொறாமை கொள்ளும் அழகுக்கண் சில பெண்களுக்கு.பூவா வண்டா என் வித்திசாயம் தெரியாமல் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் இனிய தோழி ஹேமா...

   அதுதாங்க புதுமைப் பூ!!
   நன்றிங்க தோழி.

   நீக்கு
 14. அன்புநிறை நண்பரே,
  தங்களை தவறாக நினைக்க முடியுமா..
  தங்களின் இயல்நடைக் கவிதை எனக்கு
  மிகவும் பிடிக்கும்..
  பேச்சு மொழியையும் இலக்கிய வார்த்தைகளையும்
  பின்னிப் பிணைந்து நீங்கள் எழுதுவதே ஒரு தனி
  அழகு...
  தற்குறிப்பேற்றம் அணிகளில் வரும்
  தற்குறிப்பேற்ற அணி என்பது அதிகமாக
  கம்ப ராமாயணத்தில் கவிச் சக்கரவர்த்தியால்
  கையாளப் பட்டவை.
  இங்கே அந்த அணியை இயல்பாகக் கண்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே... நானும் அணி இலக்கணம் படித்திருக்கிறேன். சங்க இலக்கியங்களில் கண்டு சுவைத்திருக்கிறேன்.

   ஆனால் நானே அவைகளைக் கையாண்டு எழுத நினைத்ததில்லை. ஏதோ தானாக வந்து விட்டதை நீங்கள் சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். நன்றிங்க.
   உங்களை நண்பராகப் பெற்றமைக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

   நீக்கு
 15. அபாரம்பா அருணா... லேட்டா வந்தாலும் நல்ல உவமைக் கவிதைய ரசிச்ச திருப்தியும், மகேந்திரன் அண்ணா புண்ணியத்துல தமிழ் இலக்கணத்துல புதுசா ஒண்ணு கத்துக்கிட்டதுல சந்தோஷமும் கிடைச்சிடுச்சே எனக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிரஞ்சனா.... இன்றைக்குத் தான் என்னைப் பெயர் சொல்லி எழுதனும் என்ற நினைப்பு வந்ததா...?
   ரொம்ப சந்தோசம்ப்பா...

   இந்தப் பாடல் ஐந்து மா வும் ஒருகாய் யும் வைத்து எழுதியப் பாடல். இந்த இலக்கணத்தில் நான் நிறைய எழுதியுள்ளேன். ஆனால் ரொம்ப சின்ன பாடல். இதை அனைவரும் ரசிப்பார்களா என்பதே எனக்குச் சந்தேகம் தான்.

   ஆனால் என் ஆசிரியர் சொல்வார் பாடல் மிகவும் சிறியதாக இருக்கனும் ஆனால் கருத்து பெரியதாக இருக்கனும் என்று.
   அந்த கருத்தை நான் இன்று தான் புரிந்து கொண்டேன் ஃபிரெண்ட்.
   நன்றிப்பா.

   நீக்கு
 16. ஆஹா என்ன ஒரு வித்தியாசமான படைப்பு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஹிலாலீ.

   நீக்கு