வியாழன், 21 ஜூன், 2012

பருவ வயது!! (கவிதை)

பருவ வயதிலே
    பாவையின் நெஞ்சமோ
       பறந்திடும் காற்றாடி!
உருவ வடிவிலே
    காளையர் மனத்தினை
       உடைத்திடும் கண்ணாடி!
அரும்பு மனத்திலே
    ஆசையும் வளருதே
       அதிசயம் என்னாடி?
கரும்புக் கணையிலே
    காமனும் துரத்தவே
       காதலின் வண்ணமடி!!

 
(இப்பொழுது....
கவிமனத்தில் “போகப் போகத் தெரியும்”  தொடர்கதை பாகம் - 14)


17 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றிங்க தோழரே!

   (தோழரே... உங்கள் பாணி தமிழிலே மூன்று “ம்“ போடுவது தானே...!!!)

   நீக்கு
 2. அருமை அருமை
  இலக்கணப் படிச் சரியாக இருந்தாலும்
  மூன்றாம் சீரின் இறுதிச் சொல்லும் நான்காம் சீரின்
  இறுதிச் சொல்லும் இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கலாமோ ?
  மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரமணி ஐயா.
   உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

   ”பருவ வயது” - பாடலின் இலக்கணம்
   மா- விளம்- விளம்- விளம்- விளம் -காய்

   நீங்கள் சீர் என்று சொன்னதால் நான் சற்றுக் குழம்பிவிட்டேன்.
   நீங்கள் சொல்ல வந்தது போல் மூன்றாம் வரியின் இறுதி சொல்லும், நான்காம் வரியின் இறுதி சொல்லையும் இன்னும் சிறப்பாய் அமைத்திருக்கலாம்...ஆனால் நான் எழுதும் போது பாட்டின் இயைபு கருதி இந்தச் சொற்களை அமைத்துவிட்டேன்.

   இனி இன்னும் பாடல்களைச் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன் ஐயா.
   உங்களின் ஆவலைத் தெரிவித்தமைக்கு மனப்பெருமையுடன் நன்றி கூறுகிறேன் ஐயா.

   நீக்கு
 3. ம்ம்ம்...

  Happy?

  பதிலளிநீக்கு
 4. கரும்புக் கணையுடன் காமன் இந்த யுவதியைத் துரத்தவில்லை. ஆனால் இந்த அழகுக் கவிதை மனசைத் துரத்திப் பிடிச்சுட்டது. சூப்பர்.

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. நன்றிங்க நண்பரே!

   வாங்க... அடிக்கடி வந்து தமிழின் இன்பத்தைப் பருகுங்கள்.

   நீக்கு