வியாழன், 14 ஜூன், 2012

கவிஞனின் சுதந்திரம்!! (கவிதை)




திட்டு தேவியே! சிந்தை பதிந்திட
     தேளென வந்தேநீ!
கொட்டு தாங்குவேன்! கோபமா என்னுடன்
     குளிர்தமிழ் நற்பாவாய்!
வெட்டும் கண்களை வெல்லுதல் எளிதில
     வேண்டியே நிற்கின்றேன்!
கட்டுத் தாண்டுதல் கவிஞனின் சுதந்திரம்
     காரிகை கண்பாராய்!

பொன்னாய் மின்னிடும் பழந்தமிழ்ச் சொற்களைப்
     பொறுக்கிடும் புலவன்நான்!
கண்ணாய் எண்ணியே கன்னியாம் தமிழினைக்
     காத்திடும் கவிஞன்தான்!
சொன்னாய் வார்த்தையில் செந்தமிழ்ச் சொல்லினைச்
     சுடச்சுட தந்தவள்நீ!
பண்ணாய்ப் பாடிடும் பாவலன் எண்ணத்தைப்
     பாடிடும் பாக்களில்பார்!




18 கருத்துகள்:

  1. அருமையான வரிகள்..

    பிரமாதம் தொடருங்கள்..:)

    பதிலளிநீக்கு
  2. துள்ளல் ஓசையில் தொடங்கிய கவிதை நன்று!
    வெள்ளம் போலவே வேகமும் விளங்கிடும் ஒன்று
    வள்ளல் போலவே வழங்கினீர் இனிய அமுது
    உள்ளம் மகிழவே உணர்வு பொங்கும்பா உமது!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. கவிதையும்
    உங்கள் தமிழும் அருமை

    பதிலளிநீக்கு
  4. சொல்லாட்சி மிக நன்று.
    இனிய நலவாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. வரிக்கு வரி சுடத்தான் செய்கிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுடுகிறதா சசிகலா....
      நான் குளிர்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன்.

      நன்றிங்க.

      நீக்கு
  6. பிடிததது...மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  7. இதோ அமர்ந்துவிட்டாள்
    தங்கள் அகத்தினில் தமிழ்த்தாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவள் அமர்ந்ததால்
      நான் நடனமாடிக் கொண்டிருக்கிறேன் நண்பரே.

      நன்றிங்க.

      நீக்கு
  8. என்ன சொல்றதுன்னே தெரியல இந்தக் கவிதைக்கு கமெண்ட். சிம்பிளா ஒரே வார்த்தைதான் சொல்லத் தெரியுது - சூப்பர்ப். Keep it up Friend!

    பதிலளிநீக்கு