புதன், 27 ஆகஸ்ட், 2014

நாற்பது வயது அறிவுரைகள்!!



     ஒரு முறை என் தோழியின் கணவருக்கு நாற்பதாவது வயது பிறந்த நாளைக் கொண்டாட எங்களையும் அழைத்து இருந்தார்கள். அவர்கள் பிரென்சு தம்பதியர். எங்களுடன் இன்னும் இரண்டு பிரென்சு குடும்பம் மட்டுமே அழைத்திருந்தார்கள்.
    விழாவில் கேக் வெட்டி விருந்து எல்லாம் முடிந்தவுடன் சற்று நேரம் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். அப்பொழுது ஒரு தோழி நாற்பது வயதான ஆணின் மனைவி ஜோஸ்ஸிடம் “ஜோஸ்... அவருக்கு நாற்பது வயதாகி விட்டது. இனி நீதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்“ என்றாள்.
   அதற்கு ஜோஸ், “அவருக்குத் தான் வயதாகிறது. அவர் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனக்கு எதற்கு கவலை?“ என்றாள்.
   அதற்கு இந்தத் தோழி.... “ஆண்களுக்கு நாற்பது வயதானால் நமக்குத் தான் எல்லா கஷ்டமும். நான் படும் கஷ்டத்தைச் சொல்கிறேன் கேள். நான் அனுபவப்பட்டவள்“ என்று புதிருடன் சொல்ல துவங்கினாள்.
   அவள் சொல்வதைக் கேட்க நாங்களும் ஆர்வமானோம். அவள் சொல்ல துவங்கினாள்...

   “இந்த வயதிலிருந்து தான் ஆண்களுக்கு மனம் மாறுகிறது. எதைச் செய்யக் கூடாது என்று நாம் சொல்கிறோமோ அதைத் தான் செய்வார்கள். காரணம்... ஒரே மாதிரியான வாழ்வைச் சற்று மாற்றிப் பார்க்க விரும்பும் வயது இதுதான்.
   எப்போதும் அவர்களுக்குப் பிடித்தது இப்போது சலிப்பை வரவழிக்கும்.
   புதியதை விரும்புவார்கள்.
   நாம் ஒரு சின்ன கோபம் கொண்டாலும் அவர்கள் அதைப் பெரிது படுத்தி சண்டையிடுவார்கள்.
   இப்போது லேசாக தொப்பை விழும். அதை மறைக்க எக்ஸர்சைஸ் என்று வெளியில் போக ஆரம்பிப்பார்கள். அதுவே வழக்கமாகவும் ஆகி விடும் என்று சொல்வதை விட இதையே காரணமாக்கி வெளியில் செல்வார்கள்.
   நரையை மறைக்க டை போட்டு முதலில் இருந்ததைவிட இளமையாக காட்சி தருவார்கள். அதாவது மனைவியைவிட இளமையாக இருக்கும்படி அழகைப் பாதுகாப்பார்கள்.
   வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் மேல் எப்போதும் எறிந்துவிழுவார்கள்.
   வீட்டில் தான்தான் ராஜா. மற்றவர் எல்லாம் அடிமை என்ற நினைப்புடனே பேசுவார்கள்.
   எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.
   வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே எதையோ பறிகொடுத்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இருப்பார்கள்.
   நாட்டில் தனக்கு மட்டுமே எல்லா கஷ்டமும் வந்து விட்டது போல் வேதாந்தம் பேசுவார்கள்.
   அதிக சிக்கனம் பார்ப்பார்கள்.
   சில நேரங்களில் தேவைக்கும் அதிக “பந்தா“ காட்டுவார்கள். இதையெல்லாம் புரிஞ்சி நீதான் அனுசரித்துப் போகனும்“ என்றாள்.
   நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் “அப்படியா?“ என்பது போல் பார்த்துக் கொண்டோம்.
   “ஆமாம் ஜோஸ். அவள் சொல்றது உண்மைதான். என் கணவருக்கு அடுத்த வருடம் தான் நாற்பது வயது. ஆனால் அதற்குள் இதையெல்லாத்தையும் தொடங்கி விட்டார்“ என்றாள் இன்னொரு தோழி.
   “ஐயோ இதெல்லாம் நாற்பது வயதில் தானா..... இவர் தொடக்கத்திலிருந்தே இப்படித் தானே இருக்கிறார்...“ என்று சத்தமாகச் சொன்னாள் ஜோஸ்.

    “சியர்ஸ்.....“
    எங்களுக்குப் பின்னால் இருந்து கண்ணாடி டம்ளர்கள் இடிக்கும் ஓசை. திரும்பிப் பார்த்தோம். நாங்கள் பேசியது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாலும் அது எதுவும் தங்களுக்காகப் பேசியது இல்லை என்பது போல எதையும் லட்சியம் பண்ணாமல் ஆண்கள் தங்கள் பார்ட்டியை மீண்டும் தொடங்கினார்கள்.
   என்னத்தைச் சொல்லுறது?

அருணா செல்வம்
26.08.2014

    

15 கருத்துகள்:

  1. ///எப்போதும் அவர்களுக்குப் பிடித்தது இப்போது சலிப்பை வரவழிக்கும். புதியதை விரும்புவார்கள்.///(மனைவியைதானே சொல்லுகிறீர்கள்?
    அப்பாடா இப்பதான் எனக்கு நிம்மதி நான் மட்டும்தான் இப்படி என்று நினைத்து இருந்தேன் ஆனால் உலகில் உள்ள ஆண்கள் எல்லாம் என்னை போலதான் என்றதும்தான் எனக்கு நிம்மதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///எப்போதும் அவர்களுக்குப் பிடித்தது இப்போது சலிப்பை வரவழிக்கும். புதியதை விரும்புவார்கள்.///(மனைவியைதானே சொல்லுகிறீர்கள்?

      அவள் மனைவியை சொன்னாளா என்று தெரியவில்லை. ஆனால் நான்....... அவர்கள் எப்போதும் விரும்பிச் சாப்பிடும் இட்லி தோசை பிடிக்காமல் பூரி சப்பாத்தியை விரும்புவார்கள் என்று நினைத்தேன்....(

      உங்களுக்கு இப்படியெல்லாம் மாற்றி யோசிக்கும் காரணம்..... வயதாகிவிட்டது என்று மட்டும் தெரிகிறது.

      நீக்கு
  2. ஹா...ஹா... நாற்பது வயதில் நாய்க்குணம் என்று ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் உண்டு. அது போலவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாற்பது வயதில் நாய் குணம் என்பது.......

      நாயின் பொதுவான நல்ல குணம் “நாய் நன்றியுள்ளது“
      இந்த நல்ல குணம் தான் நாற்பது வயதானால் மனிதருக்கு வந்துவிடும் என்றே நினைத்திருந்தேன்.... அப்படி இல்லையா.....(

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம்“ ஐயா.

      நீக்கு
  3. 40 வயதில் நாய்க்குணம்னு சொல்லுவாங்க. அப்புறம் மிட்-லைஃப்-க்ரைசிஸ் ஆரம்பிக்கும்னும் சொல்லுவாங்க.

    என்னவோ 39 வயதுவரை இவர்கள் எல்லாம் "நல்லவர்களாக" "கனிவா" "அன்பா" இருந்தமாதிரி 40லதான் இப்படியெல்லாம் ஆவாங்கங்கிறமாதிரி சொல்றீங்களே!!! :)))

    ஆமா, நீங்க என்ன லேடீஸ்-நைட்-அவ்ட்ல உங்களுக்குள் பேசுறதை எல்லாம் இப்படி ஆண்களிடம் வந்து சொல்றீங்க? இதையெல்லாம் வெளியே (முக்கியமா ஆண்களிடம்) சொல்லக்கூடாதுனு உங்க தோழிகள் உங்களிடம் சொல்லாமல் விட்டுட்டாங்களே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ 39 வயதுவரை இவர்கள் எல்லாம் "நல்லவர்களாக" "கனிவா" "அன்பா" இருந்தமாதிரி 40லதான் இப்படியெல்லாம் ஆவாங்கங்கிறமாதிரி சொல்றீங்களே!!! :)))

      அதானே.....

      ஆமா, நீங்க என்ன லேடீஸ்-நைட்-அவ்ட்ல உங்களுக்குள் பேசுறதை எல்லாம் இப்படி ஆண்களிடம் வந்து சொல்றீங்க? இதையெல்லாம் வெளியே (முக்கியமா ஆண்களிடம்) சொல்லக்கூடாதுனு உங்க தோழிகள் உங்களிடம் சொல்லாமல் விட்டுட்டாங்களே! :(

      இப்படி தெரியாத மாதிரி சொன்னால் அதைப்படிக்கும் இப்படி இருக்கும் ஆண்கள் கொஞ்சமாவது மாறுவார்கள் என்ற நட்பாசை தான்...)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி வருண் சார்.

      நீக்கு
  4. ஹாஹாஹா....ரசித்தோம்....ஆண்களுக்கு மட்டுமில்லை சகோதரி......பெண்களுக்கும் 40 ல் தானே தொடங்குகின்றன பிரச்சினைகள்.....அதனாலதானே இருபாலாருக்கும் பொருந்தும்படி....40 வய்தில் நாய் குணம் நு சொன்னாங்க...பாவம் நாய இப்படி எல்லாம் கேவலப்படுத்தக் கூடாது..ஹாஹா...இருவருக்குமே மாற்றங்கள் தேவைப்படும் வயது....நீங்க எழுதியிருந்த விதம் ரொமப ரசிச்சோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களுக்கு இதே பிரட்சனையா..... பின்னே ஏன் வராது....?
      முதலில் துவங்கும் ஆண்களைக் கண்டே பெண்களும் அது போல் ஆகிறார்களோ....

      பாவம். நாயை இப்படி எல்லாம் கேவலப் படுத்தக் கூடாது....

      ஹா ஹா ஹா....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  5. வணக்கம்
    மனதை கவரும் கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    த.ம 5வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  6. நாற்பது வயதில் நாய்குணம் அதை
    நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்..

    பின்னே நாயா வந்து கேட்டுத் தெரிஞ்சுக்கும்....!???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா.....

      அருமையாய் சொன்னீர்கள் அம்மா.
      தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஐம்பதுல்ல இதுக்கும் மேல இருக்குமோ.....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  8. எங்க வீட்ல ஆரம்பிச்சு 8 வருடமாச்சு... இது மாதிரி எந்த அறிகுறியும் இல்லையே... ஏன் ஏதாவது தவறோ?

    பதிலளிநீக்கு