புதன், 19 நவம்பர், 2014

அவன் காதல்தான் என்ன?கணைதொடுத்த பார்வையாலே கண்ணை நோக்க
    கதிகலங்கி போய்நின்றேன்! காந்தக் கண்ணால்
எனைஎடுத்துச் சென்றதாலே என்னை நானே
    எங்கென்று தேடுகின்றேன்! அவனைத் தேடி
மனையடுத்து நின்றதாலே தந்தை திட்ட
    மனசின்றி வீடுசென்றேன்! ஆசை நெஞ்சம்
அணையொடுங்கும் நீரைப்போல் அடங்கி விட்டால்
    அவன்காதல் என்னவென்று அறிந்து கொள்வேன்!

அருணா செல்வம்
19.11.2014

    

35 கருத்துகள்:

 1. எண்சீர் விருத்தம் அழகாய் சொன்னது காதல் வருத்தம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையில் சோகமும் சுகம் தானே....

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி மூங்கில் காற்று.

   நீக்கு
 2. நாயகி கடைசியில் தொலைத்த தன்னைக் கண்டெடுத்தாளா இல்லையா? :)))

  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட. கேள்வி இருக்கிறதா....?
   பதிலைப் பிறகு எழுதுகிறேன்.

   தங்களின் வருகைக்கும் கேள்விக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

   நீக்கு
 3. நல்ல தவிப்புதான் :) அருமை தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. அவன் நிலையிலிருந்து... அடுத்து எழுதுகிறேன் அண்ணா.

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

   நீக்கு
 5. அவன்காதல் என்னவென்று அறிந்து கொள்வேன்//

  அறியத்துடிக்கும் தவிப்பு...ம்ம்ம் அருமையான வரிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

   நீக்கு
 6. உங்க முந்தைய பதிவில் வந்த வழுக்கை தலை மாப்பிள்ளையை பார்த்த பின் நீங்கள் ஏக்கத்துடன் எழுதிய கவிதை போல இருக்கிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாமீயிடம் வாங்கும் பூரிக்கட்டை அடி போதவில்லையோ.....

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ராஜ் அண்ணா.

   நீக்கு
 8. சிறப்பான காதல் கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சுரேஷ்.

   நீக்கு
 9. கவிதைக்கு பூங்குழலி கண்கள் பொருத்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ..... அந்தப் பெண்ணின் பெயர் பூங்குழலியா......?

   அறியவைத்தமைக்கு நன்றி அம்மா.
   படம் இணையத்தில் எடுத்தேன்.

   நீக்கு
 10. நற்கவிதை நான்கண்டு வியந்தே போனேன்!
  நயம்படவே சுவைதரவும் மகிழ்ந்தோன் ஆனேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் அழகான கவிதை கருத்திற்கும்
   மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. இப்போதும் அவர் கோபமாக இருந்தால் இப்படி நினைத்து எழுதுவதுண்டு கவியாழி ஐயா.

   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 13. வணக்கம் சகோ!
  " எனைஎடுத்துச் சென்றதாலே என்னை நானே
  எங்கென்று தேடுகின்றேன்!"....கவித்துவமான வரிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி மாஹாசுந்தர் அண்ணா.

   நீக்கு
 14. அணையொடுங்கும் நீரைப்போல் அடங்கி விட்டால்
  அவன்காதல் என்னவென்று அறிந்து கொள்வேன்!//

  இதுவரை யாரும் பயன்படுத்தாத
  அருமையான ஆழமான பொருளுடைய உவமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரசித்துப் பாராட்டியமைக்கு
   மிக்க நன்றி இரமணி ஐயா.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 16. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
  மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

  பதிலளிநீக்கு