செவ்வாய், 4 மார்ச், 2014

கம்பனிடம் ஒரு கேள்வி!! (தொடர் -2)



இயற்கையினை இயற்கையாகச் சொன்ன போது
   இன்கரும்பின் சாற்றினிலே நனைத்துத் தந்தாய்!
செயற்கையினை இயற்கையாகச் சொன்ன போதும்
   செந்தமிழின் தேன்சொட்டச் சேர்த்துத் தந்தாய்!
தயக்கங்கள் கவிகளுக்குத் தேவை யில்லை!
   தடுமாற்றம் என்பதெல்லாம் தமிழில் இல்லை!
மயக்குவது மங்கையர்சொல் மட்டும் இல்லை!
   மதுகலந்த சொற்களாலும் மயக்கம் தந்தாய்!

சிங்களர்கள் தொல்லைதரும் சிறிய தீவில்
   சீதையினைச் சீரழியச் சிறையில் வைத்தாய்!
எங்களவர் சிறையுடைத்து மீட்டு விட்டார்!
   இருந்தாலும் இருக்கிறதே இன்றும் தொல்லை!
சிங்கமாகச் சீறியெழுந்தும் அரக்கத் தன்மை
   சின்னதாகக் கொஞ்சமும் குறைய வில்லை!
மங்கலங்கள் பாடிவிட்டு முடித்த காதை
   மறையாமல் தொடர்கிறதே அய்யோ பாவம்!

விதிவகுத்த பாதையிலே அழைத்துச் சென்றாய்!
   வீரத்தால் வெற்றியினை வாங்கித் தந்தாய்!
பதிவகுக்கும் பாதையினைக் காத்து நோக்கி
   பதிவிருதை சீதையவள் கலங்கி நின்றாள்!
மதிமயக்கம் கொண்டவனை மதியால் வெல்ல
   மங்கையரால் முடியாதோ கதையில் சொல்ல
கதிகலங்கி நிற்பதுதான் பெண்கள் வாழ்வாம்!
   கதைபடைத்த கம்பா!நீ ஏனோ சொன்னாய்!!

(தொடரும்)

அருணா செல்வம்.

17 கருத்துகள்:

  1. எங்களவர் சிறையுடைத்து மீட்டு விட்டார்!
    இருந்தாலும் இருக்கிறதே இன்றும் தொல்லை!//ம்ம் கம்பனிடம் சூப்பர் கேள்வி தொடருங்கள்§

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைக் கோடிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  2. அரக்கத் தன்மை ஒழிந்து மனிதத்தன்மை என்று வருமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனாக இருந்தால் நிச்சயம் வரும் தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

    4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

    இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்துவிட்டேன்.

      மிக நல்ல பதிவு. நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. அதுதானே கம்பன் ஏன் எண்ணவில்லை பெண்களும் துணிந்து நின்று
    போராட வல்லவர்கள் என்று எங்கள் புரட்சிக் கவிஞர் பாரதியாரை
    இந்த இடத்தில் பாராட்டியேயாக வேண்டும் தோழி :))) சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம்... கம்பன் காலத்து பெண்கள்!!

      கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தொழி.

      நீக்கு
  6. "//செயற்கையினை இயற்கையாகச் சொன்ன போதும்
    செந்தமிழின் தேன்சொட்டச் சேர்த்துத் தந்தாய்!//"

    - அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுப்ரமணியன் ஐயா.

      நீக்கு
  7. இன்றைய ஈழத் தமிழர்களின் அவல நிலையை ஆதங்கத்தோடு சொல்லியிருப்பது சிறப்பு.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதாவது ஒரு வகையில் அதைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

      மீண்டும் நன்றி ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  9. “சிங்களர்கள் தொல்லைதரும் சிறிய தீவில்
    சீதையினைச் சீரழியச் சிறையில் வைத்தாய்!
    எங்களவர் சிறையுடைத்து மீட்டு விட்டார்!
    இருந்தாலும் இருக்கிறதே இன்றும் தொல்லை!
    சிங்கமாகச் சீறியெழுந்தும் அரக்கத் தன்மை
    சின்னதாகக் கொஞ்சமும் குறைய வில்லை!”
    நான் சொலல விரும்புவது 3 கருத்துகள் சகோதரீ -
    1. எண்சீர் எதுகை மோனையுடன் புதிய சிந்தனை,
    2. பழங்காலத் தொடர்ச்சியுடன், சமகாலச் சிந்தனை,
    3. பெண்ணுரிமைத் தேடல் தேவையான சிந்தனை
    அர்த்தமும், அழகும் நிறைந்த பொருத்தமான விருத்தங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கள் என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது ஐயா.

      மிக்க நன்றி.

      நீக்கு