புதன், 25 டிசம்பர், 2013

பிடித்த புத்தகம் எது? (நகைச்சுவை)எது உயர்ந்த புத்தகம்?

 
   ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
 
 ஒரு சமயம் இந்திய தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரும் புகழ்பெற்ற வங்காள நாவலாசிரியர் சரத்சந்திரரும் சுவையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
   சிறிது நேரத்தில் அவர்களின் பேச்சு முடிந்தது.
   சரத் சந்திரர் வெளியே வந்தார்.
   அப்போது...
   வெளியே காத்திருந்த ஓர் புத்தக வெளியீட்டாளர் அவரை நெருங்கி, “ஐயா... என்ன நீங்கள் தாகூரோடு சமமாக உட்கார்ந்து பேசுகிறீர்கள்? இலக்கியத்தில் தாங்கள் தாகூரை விட உயர்ந்தவர். தங்களின் நூல்கள் இருபதினாயிரம் வரை விற்பனையாகின்றன. தாகூரின் நூல்கள் ஆயிரம் கூட விற்பனையாவதில்லை“ என்றார்.
   அதற்கு சரத் சந்தர், “என் நூல்களை உம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தாம் படிக்கின்றனர். ஆனால் தாகூரின் நூல்களை என் போன்றவர்களே படிக்கின்றனர்“ என்றார்.
   தாகூரை மட்டம் தட்டிப் பேசிய அந்தப் புத்தக வெளியீட்டாளரின் முகம் தொங்கி போயிற்று.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.
***********************************************************************************


பிடித்த புத்தகம் எது? (நகைச்சுவை)

   வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து நாடகத் துறையில் புகழ் பெற்றவர், ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. (George Bernardshaw 1856 - 1950)
   அவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.
   ஒரு சமயம் பத்திரிக்கை நிருபர் ஒருவர், “மிஸ்டர் ஷா... கடைசியாக ஒரு கேள்வி. தாங்கள் எத்தனையோ புத்தகங்களை வாசித்து இருப்பீர்கள். ஏராளமாக எழுதியும் இருக்கிறீர்கள். இந்த புத்தக அனுபவத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்தமான புத்தகம் எது என்று கூற முடியுமா?“ என்று கேட்டார்.
   “ஓ... எனக்குப் பிடித்த ஒரே புத்தகம் செக் புத்தகம் (Cheque Book) தான்“ என்றார் ஷா.
   நிருபர் வாயடைத்துப் போனாராம்.

படித்ததில் சிரித்தது.
அருணா செல்வம்.

15 கருத்துகள்:

Seeni சொன்னது…

Irandum arumai..

ஸ்கூல் பையன் சொன்னது…

ஹா ஹா ... இரண்டுமே சூப்பர்...

சீராளன் சொன்னது…

இரண்டும் இனிய குறுங்கதைகள்
இயம்பும் அறிவோ பெருங்கதைகள் !

அருமையான ஆழமான சிந்தனை

இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

Tamizhmuhil Prakasam சொன்னது…

இரண்டுமே அருமை....பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

ezhil சொன்னது…

இரண்டுமே அருமை...

உஷா அன்பரசு சொன்னது…

எனக்கும் 'செக்' புக் தாங்க ரொம்ப புடிக்கும்... எவ்வளவு வேணா அனுப்பி வைங்க... அதுல உங்க மதிப்புக்குரிய ஆட்டோகிராப்பையும் மறக்காம போட்டுதான்..!

ராஜி சொன்னது…

மூக்குடைப்புல நமக்கு ஒரு மெசேஜ் இருக்கு

சே. குமார் சொன்னது…

இரண்டும் அருமை...

gayathri சொன்னது…

nice

Ramani S சொன்னது…

அருமையான நக்கலுடன் கூடிய நகைச்சுவை
அதனால்தான் எத்தனை ஆண்டுக் கழித்துக் கேட்டாலும்
ரசித்து மகிழமுடிகிறது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S சொன்னது…

tha.ma 3

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டுமே அருமை..... பகிர்ந்தமைக்கு நன்றி.

த.ம. +1

Bagawanjee KA சொன்னது…

எனக்கு செக் புக் பிடிக்காது ,ஏன் என்றால் ,அதன் மூலம் என் பணம் வெளியே செல்வதால் !
+1

நம்பள்கி சொன்னது…

அருமை +1