வியாழன், 5 டிசம்பர், 2013

யார் பெருந்தீனிக்காரர்? (சிரிக்க-சிந்திக்க)


   மொகலாயப் பேரரசர் அக்பருக்கு மாம்பழம் என்றால் உயிர். அதற்காகவே அவரது அரண்மனைத் தோட்டத்தில் சுவையான மாம்பழங்களைத் தரும் மாமரங்கள் பல இருந்தன.
   ஒருநாள்...
   அக்பர் உண்டு மகிழ்வதற்காகத் தோட்டத்திலிருந்து பல சுவையான மாம்பழங்கள் பறிக்கப்பட்டு அவர் முன்னே கொண்டு வந்து வைக்கப்பட்டன.
   அக்பர் அரசியாருடன் மாம்பழங்களைச் சாப்பிட விரும்பி அவரையும் அழைத்து மாம்பழங்களைச் சாப்பிடச் சொன்னார்.
   “எனக்கு வேண்டாம். நீங்கள் சாப்பிடுங்கள்“ என்றார் மாம்பழத்தை விரும்பாத அரசியார்.
   உடனே அக்பர் மகிழ்ச்சியுடன் பழங்களைச் சுவைத்துச் சாப்பிட்டார். அதை அரசியார் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்.
   அக்பரோ பழங்களைச் சாப்பிட்டு சாப்பிட்டு அதன் கொட்டைகளை அரசியரின் அருகே போட்டுக் கொண்டிருந்தார்.
   அப்போது மதியூகி பீர்பால் அங்கு வந்தார்.
   உடனே அக்பர் அரசியாரைக் கிண்டல் செய்ய எண்ணி, “ஓய் பீர்பால்.... பார்த்தீரா இந்த அநியாயத்தை? அரசியார் எத்தனை பழங்களைச் சாப்பிட்டிருக்கிறார். இது பெருந்தீனி தின்பதற்குச் சமம் அல்லவா?“ என்றார்.
   அதைக் கேட்ட அரசியார் திகைத்தார்.
   பீர்பால் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொண்டு அக்பரின் மூக்கை உடைக்க எண்ணினார்.
   “அரசே... அரசியை விட நீங்கள் தான் பெருந்தீனிக்கார்ர்“ என்றார்.
   அதைக் கேட்ட அரசர், “பீர்பால்... எதை வைத்து என்னைப் பெருந்தீனிக்காரன் என்கிறாய்?“ என்று கேட்டார்.
   அதற்கு பீர்பால், “அரசே... அரசியாரோ கொட்டைகளையாவது மீதம் வைத்திருக்கிறார். நீங்களோ கொட்டைகளையும் சேர்த்து விழுங்கி விட்டிருக்கிறீர்களே....“ என்றார் சிரித்தபடி.
   அதைக் கேட்ட அக்பர் அசடு வழிந்தார்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

20 கருத்துகள்:

  1. வணக்கம்
    ரசித்தேன் அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான சிரிப்பூட்டும் கதை, இதை பல முறை பலர் சொல்ல கேட்டது உண்டு, இருந்தாலும் எத்தனை முறை கேட்டாலும் வாசித்தாலும் சிரிப்பை வரவழைத்து விடுகின்றது. பகிர்ந்தமைக்கு நன்றிகள் ! :)

    --- விவரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இப்பொழுது தான் படித்துச் சிரித்தேன். அதனால் உங்களுக்கும் பகிர்ந்தேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நீலவண்ணன் சகோ.

      நீக்கு
  3. புத்திமான் பலவானாவான்! என்பது சரிதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் புலவர் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  4. அடுத்தவங்களை வம்பில் மாட்ட நினைப்பவர்கள் இறுதியில் தாங்களே அதில் மாட்டிக் கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
  5. ஹஹா... பாவம் அக்பர் அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காயத்ரி.

      நீக்கு
  6. ஹா.. ஹா.... பீர்பால்கிட்டயா பொய் சொல்ல முடியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  7. ரொம்ப நாளைக்கு முதல் படிச்சது...
    மிண்டும் படிச்சதில் சந்தோஷம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஏற்கனவே படிச்சி இருக்கிறீங்களா...?
      நான் இப்பொழுது தான் படித்தேன்.

      நன்றி சிட்டு.

      நீக்கு
  8. பீர்பால் என்ற பெயரைக் கேட்டதுமே அதில் புத்திக்கு விருந்தளிக்கும்
    அதி சக்தி வாய்ந்த நகைச்சுவை இருக்கும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை :))) .பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தோழி அருணா .

    பதிலளிநீக்கு
  9. இதைத்தான் பழந்திண்ணுக் கொட்ட போட்டவங்கனு சொல்வாங்களோ?

    பதிலளிநீக்கு