ஒரு சமயம் சந்தை கூடுமிடத்தில், ஓர்
மேடான இடத்தில் முல்லா நஸ்ருதீன் ஏறி நின்றார்.
அங்கு கூடியிருந்த மக்களைப்
பார்த்தார்.
அனைவருமே அவரவர் கடமையில்
இருந்தார்கள்.
திடீரென்று அவர், “அன்பார்ந்த
மக்களே...“ என்று பேச்சை ஆரம்பித்தார்.
மக்கள் அனைவரும் அவரைப் பார்த்தனர்.
சிலர் அவர் அருகில் வந்து அவர் பேச்சைக் கேட்க ஆவலாயினர்.
மீண்டும் முல்லா, “மக்களே...
நீங்கள் கஷ்டம் இல்லாமல் சிறந்த அறிவு பெற ஆசைப்படுகிறீர்களா...? பொய்யே இல்லாத
முழு உண்மையை அறிய ஆசைப்படுகிறீர்களா...? முயற்சி சிறிதும் இன்றி முன்னேற ஆசைப்படுகிறீர்களா...?“
என்று சத்தமாகக் கேட்டார்.
அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஒரே உற்சாகம்.
“ஆமாம்... ஆமாம்... அவற்றிற்கு வழி
கூறுங்கள்“ என்று உரத்த குரலில் கேட்டனர்.
அதைக் கேட்ட முல்லா அவர்களை எரித்து
விடுவது போல் பார்த்தார்.
“வழியாவது மண்ணாங்கட்டியாவது.
சோம்பேறியாக இருந்தால் எப்படி முன்னேற முடியும் என்று யாராவது யோசித்தீர்களா?
உங்களில் யாரெல்லாம் சோம்பேறிகள் என்று தெரிந்து கொள்ளத்தான் அப்படி பேசினேன்.
இப்போது இங்கு நிற்கும் அனைவருமே சோம்பேறிகள் என்பதைத் தெரிந்து கொண்டு விட்டேன்.
போய் உழைத்து வாழுங்கள்“ என்றார் முல்லா நாஸ்ருதீன்.
அங்கே கூடியிருந்த மக்கள் அனைவரும்
முல்லாவைக் கோபத்துடன் பார்த்தபடி நகர்ந்தனர்.
படித்ததில் சிரித்தது.
அருணா செல்வம்.
என்னைதான் சொல்லுறீங்களோன்னு நினைச்சுட்டேன்!!
பதிலளிநீக்குசோம்பேறிகளுக்குச் சரியான அடி கொடுத்துவிட்டார் முல்லா!
பதிலளிநீக்குசோம்பலில்லாமல் இதை சொன்னதற்கு
பதிலளிநீக்குத.ம-4
படித்ததும் எனக்கும் மிகவும் பிடித்தது
பதிலளிநீக்குகருத்துள்ள பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 5
பதிலளிநீக்குபகுத்தறிவுத்தமிழனின் எண்ணமும் நோக்கமும் தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் இந்த BளாGஐ பார்த்து சிரிக்கவேண்டும். சிரித்து மகிழ வேண்டும்.
பதிலளிநீக்குkgopaalan@blogspot.com
பகுத்தறிவுத்தமிழனின் எண்ணமும் நோக்கமும் தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் இந்த BளாGஐ பார்த்து சிரிக்கவேண்டும். சிரித்து மகிழ வேண்டும்.
பதிலளிநீக்குkgopaalan@blogspot.com
Haa haaa...
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா......
பதிலளிநீக்குசுவைத்தேன் ரசித்தேன்......
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்கு